அச்சுப்பதித்தல் முறைகள் (கிரபிக் முறைகள்)

மொனோகிரபிக்
  • இது தனி ஒரு வர்ணத்தில் ஒரு பிரதி மட்டும் பெறும் அச்சுமுறை ஆகும்.
  • இதற்கு கண்ணாடியின் மீது மையினால் சித்திரம் வரையப் பட்டு அதன்மேல் கடதாசியை வைத்து அழுத்துவதன் மூலம் பிரதி பெறப்படும்.
லைனோகிரபிக்
  • இது தனி ஒரு வர்ணத்தில் பல பிரதிகள் பெறப்படும் அச்சு முறையாகும்.
  • இதற்கு குறிப்பிட்ட லைனோ அட்டையில் தேவையான வடிவத்தில் வெட்டி அச்சுத் தயாரிக்கப்பட்டு அதன் மேல் வர்ணத்தை பூசி கடதாசியில் மேல் அழுத்துவதனூடாக பிரதி பெறப்படும்.
லித்தோகிரபிக்
  • இது பல வர்ணங்களில் பல பிரதிகள் பெறும் அச்சு முறையாகும்.
  • இதற்காக ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனித்தனி அச்சுகள் தயாரிக்கப்பட்டு ஒன்றன்மேல் ஒன்றாக அச்சிடுவதன் மூலம் பூரணமான படம் அச்சிடப்படும்.
ஸ்ரென்சில் அச்சுப்பதிப்பு
  • அட்டையிலோ அல்லது ஸ்ரென்சில் தாளிலோ தேவையான உருவங்களை வரைந்து அதை வெட்டி அகற்றிய பின் அதனை ஒரு தாளின் மீது வைத்து வெட்டி அகற்றிய இடைவெளியூடாக மையை பூசுவதன் மூலம் பிரதிகள் பெறப்படும்.

பயிற்சி வினாக்கள்

1. மொசாக் சித்திரம் என்றால் என்ன?
2. ஒரு வர்ணத்தில் பல பிரதிகள் பெறப்படும் அச்சுமுறை யாது?
3. மொனோகிரபிக் என்பது யாது?
4. லித்தோகிரபிக் என்றால் என்ன?

error: Content is protected !!