அபயகிரி தாதுகோபம்

கி.மு. முதலாம் நூற்றாண்டில் வட்டகாமிணி அபயன் அதாவது வலகம்பாகு மன்னனினால் (கி.மு. 44 – 17) கட்டுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் இத்தாதுகோபம், முதலாம் கஜபாகு மன்னனினால் (கி.பி. 114-136) புனர்நிர்மாணஞ் செய்யப்பட்டுள்ளது. வலகம்பாகு மன்னனினால், கிரி எனப்படும் ஜைன நிகண்டாராமய காணப்பட்ட இடத்தில் கட்டுவிக்கப்பட்ட விகாரை, * அபயகிரி’ எனும் பெயரைப் பெற்றுள்ளது. இத்தாது கோபத்தில் தாது அடக்கஞ் செய்யப்பட்டதாகக் குறிப்பேதும் கிடையாது. எனினும் புத்தபெருமான் ஒரு தடவை இலங்கைக்கு விஜயம் செய்தபோது தியான நிலையில் இங்கு அமர்ந்திருந்தமையால் இந்த விகாரை புனிதத்தன்மை பெற்றுள்ளது. மேலும், புத்தரின் பாதச் சின்னத்தின்மீது இந்த தாதுகோபம் கட்டுவிக்கப்பட்டதாக அபயகிரி விகாரைப் பிக்கு கூறியதாக ஐந்தாம் நூற்றாண்டில் வாழந்த சீன தேசத்தவரான பாகியன் எனும் பிக்கு குறிப்பிட் டுள்ளார். பரணவித்தான அதனை உறுதிப் படுத்துகிறார்.

அபயகிரி விகாரை (உரு. 23) இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பெரும் தாதுகோபங்களுள் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றது. இத்தாதுகோபம் உத்தர சைத்தியம், அபய, அபாகிரி, பயாகிரி எனும் பெயர்களாலும் வழங்கப்படுகின்றது. அபயகிரி விகாரையின் தற்போதைய உயரம் 245 அடி ஆகும்; விட்டம் 355 அடி ஆகும். எனினும் தொடக்கத்தல் இது 400 அடி உயரமாகக் காணப்பட்டதாகக் கருதப்படுகிறது.

தொடக்கத்தில் இத்தாதுகோபத்தின் சதுரக்கோட்டம் மற்றும் கலசந்தாங்கி ஆகியவற்றுக்குப் பதிலாக குடை வரிசையும், அவற்றைத் தாங்கிய கம்பமும் இருந்ததாகக் கருதப்படுகின்றது. உடைந்த கம்பம் தாதுகோப மேடையில் காணப்படுகின்றது. தாதுகோபம் தானியக்குவியல் (நெற்குவியல்) வடிவத்தைக் கொண்டிருந்ததாக ரோலன்ட் சில்வா கூறுகின்றார்.

சங்கநிதி காவற்கல்
பத்மநிதி காவற்கல்
புனர்நிர்மாணத்தின் பின்னர் வடிவம்

இத்தாதுகோபம் நான்கு பிரவேச வழிகளைக்கொண்ட சலபத்தல மேடை மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது. மேடையைச் (அதாவது சலபத்தல மலுவவைச்) சூழ யானை மதில் உள்ளது. தாதுகோபத்தின் நான்கு பக்கங்களிலும் காணப்பட்ட வாஹல்கட. நான்கும் உடைந்துபோயுள்ளன. இந்த வாஹல்கட கஜபாகு மன்னனால் செய்விக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. தாதுகொபத்தைச் சூழவுள்ள பல்வேறு நிர்மாணக் கூறுகளுள் குறிப்பிடத்தக்கன தெள்ளத்தெளிவான நிர்மாணிப்புப் பிரவேச வழிகள் ஆகும். அபயகிரியாவின் வலது வாயிலின் இருபுறங்களிலும் உள்ள ‘சங்க நிதி’, ‘பத்ம நிதி’ ஆகிய பைரவ உருவங்களும் (உரு: 24, 25) சிற்பக்கலைப் படைப்புக்களாக முக்கியத்துவம் பெறுகின்றன. அபயகிரி தாதுகோபம், எட்டுப் புனிதத் தலங்களுள் (அட்டமஸ்தான) ஒன்றாகும்.

error: Content is protected !!