அம்ரிதா செர்கில் (1913-1941)

பஞ்சாப் பிராந்திய சீக்கியத் தந்தைக்கும், ஹங்கேரியத் தாய்க்கும் மகளாக 1913 இல் அம்ரிதா பிறந்தார். இள வயதிலேயே அதாவது 28 வருட வயதாக இருக்கும் போதே 1941 இல் அவர் இவ்வுலகை நீத்த போதிலும், இந்திய நவீன ஓவியக் கலையில் அவரது பங்களிப்புக் காத்திரமானது. அவருக்கு 16 வயதாக இருக்கும் வேளையில் பிரான்சு நாட்டுக்குச் சென்று கலைக்கல்வி பெற்ற அவரது ஆரம்ப காலப் படைப் பாக்கங்களின் மீது போல் செசான், போல் கொகான் ஆகியோர் பெரிதும் பங்களிப்புச் செய்தனர்.

1932 இல் அவர் ”இளஞ் சிறுமிகள் (Young girls)” எனும் பெயரில் அவர் வரைந்த இரண்டு பெண்களைக் காட்டும் ஓவியம் பிரான்சில் அவருக்கும் பெருமை தேடித்தந்த ஓர் படைப்பாகும். இது மனப்பதிவு வாத மற்றும் பின்மனப் பதிவு வாதக் கலைகளின் செல்வாக்கை நன்கு எடுத்துக் காட்டும் ஒரு படைப்பாக்கமாகும்.

கலைக் கல்வியைப் பூர்த்தி செய்து இந்தியாவுக்குத் திரும்பி வந்த பின்னர் அவர் மொகலாய, பகாரி, அஜந்தா போன்ற இந்திய ஓவிய மரபுகளின் செல்வாக்கையும் பெற்றார். அத்தோடு பிற்காலத்தில் தென்னிந்திய ஓவிய மரபுகளின் செல்வாக்கையும் பெற்றுள்ளார். அம்ரிதா செர்கில் இனது பெரிதும் சிறப்பு பெற்ற பாணியாக அவர் இந்தியப் பெண்ணை முதன்மை யாகக் கொண்ட கருப்பொருள்களுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளார். சமூகத்தில் வரப்பிரசாதங் களற்ற அழுத்தங்களுக்கு உள்ளாகிய தாழ்ந்த வகுப்பினர்களையே அவர் தமது கருப்

பொருள்களாகத் தெரிவு செய்துள்ளார். வறுமையையும் விரக்தியையும் பிரதிபலிக்கும் களைப்புற்ற முகங்களை அவரது ஓவியங்களில் பெரிதும் காணலாம்.

மகாத்மா காந்தியின் தத்துவமும் வாழ்க்கைக் கோலமும் அவர் மீது பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. மகாத்மா காந்தி தாழ்த்தப்பட்டோருக்காகக் குரல் கொடுத்த அதேவேளை அம்ரிதா தாழ்த்தப்பட்ட பெண்கள் எதிர்நோக்கிய அழுத்தங்களை ஓவியமாக வரைந்தார். பிரித்தானிய அரசு அவரை ஓர் அரச துரோகி என முத்திரை குத்தியமை அவரது அதிகார வர்க்கத்துக்கு எதிரான வகிபாகத்துக்குச் சான்றாக உள்ளது. சிரித்த முகத்துடன் கூடிய வெண்ணிறப் பெண்களுக்குப் பதிலாக, கவலை தோய்ந்த நிச்சயத் தன்மையற்ற கறுப்பு நிற மேனி கொண்ட இந்தியப் பெண்களையே அம்ரிதா தனது ஓவியங்களில் வரைந்துள்ளார். அம்ரிதா 28 வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமானார்.

பெண் பிள்ளைகள் மூவர்

நிலத்தின் மீது பார்வையைச் செலுத்தியவாறு அமர்ந்திருக்கும் மூன்று யுவதிகள் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளனர். அவர்களது முகத்தில் சோர்வு, விரக்தியை காட்டும் பார்வைகளே உள்ளன. தலையை மறைக்கும் வகையில் போர்த்திய உடையுடன் கூடிய மரபுரீதியான இந்திய யுவதிகளையே இந்த ஓவியம் காட்டி நிற்கின்றது.

இந்த யுவதிகள் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் அவர்களுக்கு இடையே இடைத்தொடர் பேதும் கிடையாது. அதாவது மூவரும் தமக்கே உரித்தான கற்பனை உலகங்களில் மூழ்கியுள்ளமை காட்டப்பட்டுள்ளது. உடலுறுப்புகள் இனங்காணத் தக்கவாறு கட்டியெழுப்பப்பட்டுள்ளபோதிலும், அவை அக்கடமி யதார்த்தவாத விதிப்படி வரையப்படவில்லை. வர்ணப் பூச்சு மூலம் ஒருவித முப்பரிமாணத் தன்மை வரையப்பட்டுள்ளபோதிலும், அது இயற்கை உலகினைப் போலச் செய்தலாகக் காட்டப்படவில்லை. உதாரணமாக வெண்ணிற ஆடையணிந்துள்ள பெண்ணின் ஆடைகள், தட்டையான கரடுமுரடான தூரிகை வீச்சுக்களாலேயே காட்டப்பட்டுள்ளன. சில உருவங்களின் கைகள் சற்று நீளமானவை. இதுவும் அக்கடமி முறைமைகளிலிருந்து விலகிய தன்மையைக் காட்டி நிற்கிறது. சிவப்பு நிற ஆடையணிந்த பெண்ணினது தோளினால் ஏனைய இரு பெண்களினது கைகள் மறைக்கப்படும் வகையில் வரையப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மூன்று உருவங்களும் கன்வசின் எல்லையை மீறிச் செல்லும் வகையில் நெருக்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதாவது ஓவியம், அக்கடமிக் பண்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இது நவீனத்துவக் கலையின் மூலம் உருவாக்கப்பட்ட அம்சமாகிய கலைஞனின் சுதந்திரத்துடன் இணைந்த ஓர் உத்தியாகும் எனலாம். இது அப்பெண்களது நெருக்கடியான வாழ்க்கையைக் காட்டுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. கறுப்பு நிற மேனி கொண்ட மூன்று யுவதிகளும் சிவப்பு, செம்மஞ்சள், வெள்ளை நிற ஆடைகளால் காட்டப்பட்டுள்ளர். அவர்களது உடலுறுப்புக்களின் சில பகுதிகள் மாத்திரம் கோடுகளால் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளார். இந்த ஓவியத்தில் கறுப்பு நிற மேனி கொண்ட பெண்கள் காட்டப்பட்டிருக்கும் தன்மையானது போல் கொகான் இனால் வரையப்பட்ட கறுப்பு நிற “’தகிட்டிப் பெண்களின்” ஓவியத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. பின்னணி இருண்ட மஞ்சள் நிறத்தினால் காட்டப்பட்டுள்ளதோடு அது தட்டையான தன்மையை வெளிக்காட்டுகின்றது. எவ்வித பின்னணிப் பொருள்களும் இல்லாததால் மூன்று பெண் உருவங்களே மையப் பொருள்களாக அமைந்துள்ளன. அதிலும் கூட அவர்களது சோர்வுடன் காணப்படும் மூன்று முகங்களுமே ஓவியத்தின் மையப்புள்ளியாக உள்ளது. சுவர் மீது விழுந்துள்ள இம்மூன்று யுவதிகளினதும் நிழல் இந்த ஓவியத்தின் முக்கியமான ஒரு குறியீடாகும். அவை இப்பெண்களின் நிச்சயமற்ற, அழுத்தமிக்க வாழ்க்கை பற்றிய உணர்வைக் காட்டி நிற்கின்றன. ஓவியத்தில் மூன்று மனித உருவங்கள் காணப்பட்ட போதிலும், தனிமை, அமைதி ஆகியவற்றின் எதிரொலியும் அதில் பரம்பியுள்ளது. சகல கஷ்டங்களையும் துன்பங்களையும் வெளியில் கூறாமல், அமைதியாகப் பொறுத்துக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்கள் பற்றிய உணர்வை இந்த ஓவியம் மூலம் இனங்காண முடிகின்றது. இப்பெண்களின் சாத்வீகமான(passive) உடல்நிலைப் பாங்கு அதனை மேலும் தெளிவாகக் காட்டி நிற்கின்றது.

கிராம மணப்பெண் 1938 – கன்வசு மீது தைல வர்ணம்

அம்ரிதா செர் – கில் இனது ஓவியக்கலை ஒருபுறத்தே இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்ததாகக் காணப்பட்டது. மறுபுறத்தே, இந்திய நிலமானியக் கருத்துக்கள் மூலம் மறக்கடிக்கப் பட்டிருந்த வரப்பிரசாதங்களின்றி இருந்த சமூகத்தை அவர் கலையினுள் ஈர்த்துள்ளார். அதன் மூலம் தாழ்குல வாழ்க்கைப் பாங்கைக் கலையின் மூலம் உயர்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார். அதற்கமைய செர் – கில் இனது ஓவியக்கலை மூலம் ஒருபுறத்தே ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிராக நவீன விடயங்களை இந்திய சமூகத்தில் அவர் நிலைநிறுத்தியுள்ளார்.

மேற்படி கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையிலான அவரது மிகச் சிறந்ததோர் படைப்பாக, “கிராம மணப்பெண்” எனும் ஓவியத்தைக் குறிப்பிடலாம். கிராம அல்லது நகர வீதி சார்ந்த ஒரு நிகழ்வே இந்த ஓவியத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளது. மகத்துவமான நிகழ்வோ அவ்வாறான பாத்திரங்களோ இங்கு கருப்பொருளாக அமையவில்லை. அவர் அக்கடமி முறைகளுக்கு உள்ளடங்காத ஓவிய மொழியினால் இக்கருப்பொருளை வரைந்துள்ளார். அதாவது ஐரோப்பிய அக்கடமி அறிவுக்கு அப்பாற்பட்ட, இந்திய மரபுரீதியானவை அல்லது நாட்டார் கலையின் செல்வாக்குப் பெற்று, தமது கலையைப் படைத்துள்ளார். குறிப்பாக, ‘கலிகட்’ ஓவியக் கலையின் பண்புகள் இந்த ஓவியத்தின் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளன. அதாவது செர் – கில் இனது இப்படைப்பாக்கத்தில் முன் நவீனத்துவ இந்திய ஓவியக் கலைப் பண்புகளையும் அக்கடமி மரபுகளிலிருந்து விடுபட்ட பண்புகளையும் இதில் காணலாம். அதாவது செர் – கில் இனது ஓவியக்கலை மொழி முற்று முழுதாக நவீனத்துவம் சார்ந்ததாகும். அதாவது இயற்த்தன்மையை மோடிப்பாங்காகக் காட்டுவதாகும். மேலும் வரப்பிரசாதங்களற்ற சமூக நிலைமைகளை கலை வெளிப்பாடுகளாக மாற்றுவதும் நவீனத்துவ வாதக் கலை நம்பிக்கைகளுள் ஒன்றாகும்.

இந்த ஓவியத்தின் மற்றுமொரு கலைத்துவச் சிறப்பியல்பு ஒட்டுமொத்த ஓவியமும் ஒரு தனி நிறத்தின் ஆக்கத்துக்கு உட்படுத்தப்பட்டிருத்தலாகும். அதாவது தொல்சீர் வர்ணத்தொடர் மூலம் தொல்சீர் அல்லாத ஒரு கருப்பொருளைத் தீட்டுதல் பெரிதும் நவீனத்துவ நம்பிக்கையாகும்.

யதார்த்த உலகுக்கு அப்பாற்பட்ட முன்னவீனத்துவ சமூகத்தின் வாழ்க்கை மீது அக்கறை செலுத்தும் ஆர்வமூட்டும், அழகுசார்ந்த எதிர்பார்ப்புக்கள் உருவக்கலை இந்த ஓவியத்தின் மூலம் முன்வைக்கப் பட்டுள்ளது.

error: Content is protected !!