அரக்குக் கைத்தொழில்

வரலாற்றுப் பின்னணி

  • கண்டிக் காலத்தில் அரக்குத் தொழில் பிரபல்யமடைந்து காணப்பட்டதாக சான்றுகள் உள்ளன.
  •  “கோட்டல்பத்த” எனப்படும் அரச தொழில்நுட்பப் பிரிவில் இவர்கள் பணியாற்றியுள்ளனர். இங்கே இவர்கள் “ஹங்கிடிவசம” என குறிப்பிடப்பட்டனர்.
  • இத்தொழிலில் ஈடுபடும் கலைஞர்கள் ‘ஹங்கிடியன்” என அக்காலத்தில் அழைக்கப்பட்டனர்.
  • அரக்குத் தொழிலுக்குப் புகழ்பெற்ற பிரதேசங்கள்:

♦ மாத்தளை – ஹப்புவித
♦ தங்கல்லை – அங்குல் மடுவ
♦ கண்டி – கூரிகடுவ
♦ பலங்கொடை – பல்லேகந்த

  • இருந்தபோதும் இத்தொழில் தற்போது மாத்தளை – ஹப்புவித பகுதியிலேயே அதிகளவில் செயற்பட்டு வருகிறது.
மூலப்பொருட்கள்
  • அரக்குத் தொழிலுக்கு “லக்ஷா” எனப்படும் ஒருவகை பூச்சியினத்தில் இருந்த பெறப்படும் அரக்கு மூலப்பொருளாகப் பயன்படுகின்றது.

மூலப்பொருட்களைத் தயார்படுத்திக்கொள்ளும் விதம்

  • “லாக்ஷா ” எனப்படும் பூச்சியிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பிசின் வளியின் தாக்கத்தினால் இறுகி அரக்கு எனும் நிலையையடையும். அப்பிசின் வகை காணப்படும் மரக்கிளைகளை வெட்டி வெயிலில் உலரவிடப்படும். பின்னர் அவற்றில் காணப்படும் அரக்கை கத்தி போன்ற கூரான ஆயுதமொன்றினால் சுரண்டி எடுக்க வேண்டும். பின்னர் பருத்தித் துணியொன்றில் அவற்றை இட்டு இறுக முடிச்சுப்போட வேண்டும். அதன் பின்னர் அடுப்புக்கு மேலே பிடித்து. உருகும் போது தூய அரக்கை பிழிந்தெடுக்க வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட அரக்கு திரும்பவும் உருக்கி துண்டுகளாக்கப்படும்.
சாயம் பெறப்படும் விதம்

♦ சிவப்பு – சாதிலிங்கம் தூள்
♦ கறுப்பு – விளக்குக்கரி, அல்லது ‘கெக்குணகரி’
♦ மஞ்சள் – ஹிரியல் (ஒருவகை மண்)
♦ பச்சை – மஞ்சள் ஹிரியல்லுடன் நீலம் சேர்க்கப்படும்.

  •  தயார்படுத்திய அரக்கை இரு கம்புகளை இணைத்து வெப்பமேற்றி, சாயம் கலந்து, சரியான பதம் பெறும் வரை இழுத்து, நார் வடிவில் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
அரக்கின் உபயோகம்
  • மரத்தாலான பொருட்களின் மேற்பரப்பை அலங்கரிப்பதற்காக மட்டும் அரக்கு உபோயகப்படும்.
கலைப்பாணி வகை
  • இருவகைக் நுட்பமுறைகளைப் பயன்படுத்தி அலங்கார வேலைப்பாடுகள் இடப்படுகின்றன.

(1) நகவேலை (நியபொது வெட) (Nail work)

இங்கே அரக்கு நார்கள் உபயோகித்து அலங்கார வேலைப்பாடுகள் இடப்படுகின்றன. வெப்பமேற்றிய அரக்கை விரல்களால் இழுத்து இவ்வகை நீளமான நார்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு வர்ணத்தால் ஆன நார்களை பொருள் மீது ஒட்டிய பின் ஏனைய வர்ணங்களால் ஆன நார்களால் அதன்மீது அலங்கார வேலைப்பாடுகள் உருவாக்கப் படுகின்றன. இதற்காக நகத்தை உபயோகப்படுத்துவதால் இம்முறை நகவேலை (நியபொது வெட) எனப்படும்.

(2) பட்டரை வேலை (பட்டல் வெட)

பட்டரை மீது வைக்கப்பட்ட பொருள் சுற்றிவரும்போது வெப்பமேற்றிய அரக்கு அதன் மீது பிடிக்கப்படும். அப்போது அரக்கானது சீரான முறையில் பொருள்மீது ஒட்டிக்கொள்ளும். பாரியளவில் பொருள் உற்பத்தி செய்கையில் இம்முறை உபயோகப்படும். இவ்வாறு ஒரு வர்ணத்திலான அரக்கு நார் முதலில் பொருள் மீது ஒட்டப்படும். பின்னர் அதற்குப் பொருந்தும்படி அலங்கார வேலைப்பாடுகள் பொருள் மீது இடப்படும்.

அரக்குத் தொழிலில் உபயோகிக்கப்படும் அலங்கார அலகுகள்

  • வெல்பொத்த, லணுதங்கய, கல்பிந்து, அரச இலை, பலாபெத்தி (தாமரை இதழ்கள்), தனி பிந்து, குந்திரிக்கன், தனியிழை, ஈரிழை.
அரக்கு உபயோகித்து அலங்கரிக்கப்படும் பண்டங்கள்
  • ஆலவட்டத்தின் கைப்படி, கொடிகளின் கைப்பிடி, ஈட்டிப்பிடி, “பீரலு”, ஊன்றுகோல், விசிறியின் கைப்பிடி, உடுக்கை

அரக்குப் பொருட்களை அலங்கரித்தல்

அரக்கினால் அலங்கார வேலைப்பாடுகள் இடப்பட்ட பொருட்கள்

பயிற்சி வினாக்கள்

1. அரக்குக் கைத்தொழிலுக்குப் பயன்படும் மூலப்பொருள் யாது?
2. அரக்குக் கைத்தொழிலுக்குப் பிரசித்திபெற்ற இடம் எது?
3. அரக்குக் கைத்தொழிலில் ஈடுபடும் எலைஞர்களை எவ்வாறு அழைப்பர்?
4, அரக்கின் பயன்பாடு யாது?
5. அரக்குக் கைத்தொழிலில் பயன்படுத்தப்படும் இரு நுட்பமுறைகளும் எவை?
6. அரக்குத் தொழிலில் உபயோகிக்கப்படும் அலங்கார அலகுகள் எவை?
7. அரக்கால் அலங்கரிக்கப்படும் பொருட்கள் எவை?
8. அரக்கிற்கு தேவையான சாயம் பெறப்படும் முறை யாது?

error: Content is protected !!