அர்த்தநாரீசுவரர்

கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலத் திண்ம வார்ப்பு முறையில் ஆக்கப்பட்டுள்ள 12.3 சென்ரிமீற்றர் உயரமான அர்த்தநாரீசுவரர் என அழைக்கப்படுகின்ற உடலின் இடது பாதி ஆணாகவம் வலது பாதி பெண்ணாகவும் காட்டப்பட்டுள்ள இச்சிற்பம் இலங்கைச் சிற்பக்கலையில் மிக முக்கியமான ஒரு சிற்பமாகும். 1982 இல் அபயகிரியாவில் மத்திய கலாசார நிதியத்தினால் நடத்தப்பட்ட அகழ்வுகளின்போது இச்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிற்பத்தின் கைகள் நான்கும் பிரத்யாலீத என அழைக்கப்படும் நடனப் பாங்கில் அமைந்துள்ளன. பெண்ணரைப்பகுதியின் கீழ்ப்பகுதி கச்சை இனாலும் மார்பங்கள் ‘குச்சபந்த’ எனப்படும் மார்புக்கச்சையினாலும் மறைக்கப்பட்டுள்ளன. தலை மயிர்ச் சுருட்டைகள், தோள் வரையில் அமைந்துள்ளன. கைகளிரண்டிலும் வளையல்கள் உள்ளன. மேலே உயர்த்திவைத்துள்ள கையில் ஏதோ வொன்று தாங்கப்பட்டுள்ளது. முன்புறமாக உள்ள கை தொங்கவிட்டநிலையில் உள்ளது. அது தும்பிக்கை ( லோல ஹஸ்த”) முத்திரையைக் காட்டி நிற்கின்றது.

இடது புற ஆண் அரைப்பகுதியின் கீழ்ப்பகுதி இடை வரையில் ஆடையொன்றினால் மறைக்கப் பட்டுள்ளது. அது புலித்தோலாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தலையில் ‘ஜடா மகுடம்’ உள்ளது. உயர்த்திய இடது பின்னங்கையில் நாகமொன்று தாங்கப்பட்டள்ளது. நாகத்தின் படம் இடுப்புப் பகுதி வரையில் நீண்டுள்ளது. இடதுபுறக் கீழ்க்கை ‘கடக ஹஸ்த முத்திரையக் காட்டி நிற்கின்றது. இடதுபுற நீண்ட தோள்கள் வரையில் நீண்டு தொங்கும் காதணியும் உள்ளது. முகத்தில் புன்சிரிப்புத் தழுவுகின்றது. கழுத்தில் வட்டவடிவ பதக்கத்துடன்கூடிய மாலை உள்ளது. உடலின் முன்பகுதி இடது புறமாகச் சாய்ந்த நிலையில் உள்ளது. பின்பகுதி சற்று வலப்பக்கம் சார்ந்ததாக சந்தத் தன்மையக் கொண்டுள்ளது. இது பாத முன்பகுதி நிலத்திலிருந்து சற்று உயர்த்தப் பட்டுள்ளது. உடலின் நிறை வலது பாதத்தில் தாங்கப்பட்டுள்ளது. உடல் ஒட்டுமொத்தமாக ஒரு நடனப் பாங்கைக் காட்டி நிற்கின்றது.

இச்சிற்பம் சிவபெருமானின் அர்த்தநாரீசுவரர் தன்மையைக் காட்டி நிற்பதாகக் கூறப்படுகின்றது. எனினும் தென்னிந்திய அர்த்தநாரீசுவரர் சிற்பக்கலைக் கோட்பாடுகளில் இச்சிற்பத்தில் மீறப்பட்டுள்ளது.

இந்தியச் சிற்பங்களில் ஆணரைப்பகுதி வலப்புறமாகவும் பெண்ணரைப்பகுதி இடப்புறமாகவும் காட்டப்படுவது மரபாகும். இது அதனிலும் முற்றாக வேறுபட்ட ஓர் அமைப்பாகும். இந்த அசாதாரண தன்மை, பௌத்த விகாரையொன்றின் அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை ஆகியன இச்சிற்பம் முதலில் பௌத்த வெண்கலச் சிற்பப் படைப்பாக்க வகையில் சேர்க்கப்பட்டமைக்குக் காரணமாயின. எவ்வாறாயினும் பௌத்த விகாரையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெண்கல இந்துச் சிற்பம், இந்திய மரபுகள் எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்ட இலங்கைப் படைப்பாக்கப் பண்புகளைக் கொண்ட ஒன்றாகும் என்பது, தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கருத்தாகும்.

இச்சிற்பம் அர்த்தராரீசுவரைத்தான் குறிக்கின்றதா என ஐயப்பாடு தெரிவிக்கும் சில ஆய்வாளர்கள் அதற்கான ஒரு சான்றாக வலதுபுறத்தே உயர்த்தி வைத்துள்ள கையில் இருப்பது ஒரு சங்கு எனக் கூறுகின்றனர். சங்கு விஷ்ணுவுக்குரிய ஒரு பொருளாகும். எனினும் விஷ்ணுவுக்குரிய இச்சங்கும் சுவாஸ்திகாவும் சிவனின் சக்தியாகிய துர்க்காவினாலும் நிதமும் தாங்கப்படுவதுண்டு. அதற்கமைய வலதுபுறக் கையில் உள்ள பொருளை சங்கு எனக் குறிப்பிடுதலானது, இச்சிற்பம் தொடர்பான கருத்து முரண்பாட்டை மேலும் விரிவுபடுத்துவதாக உள்ளது.

error: Content is protected !!