அவுக்கன புத்தர்சிலை

  • அநுராதபுரக் காலத்திற்குரிய இப்புத்தர் சிலை நின்ற நிலைப் புத்தர் சிலைகளிடையே விசேட இடத்தைப் பெறுகிறது.
  • கி.பி. 5 ஆம் நூற்றாண்டிற்கும் 8 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட படைப்பாகும்.
  • கலா வாவிக்கு அருகே அவுக்கனை எனும் கிராமத்தில் உள்ளது.
  • கருங்கற் பாறையில் முழுப் புடைப்புச் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.
  • பத்மாசனமொன்றின் மீது நிற்குமாப்போன்று வடிக்கப்பட்டுள்ள இச்சிலை ஏறத்தாழ 38 அடி 10 அங்குல உயரமானது.
  • வலது கையினால் அபய முத்திரை காட்டப்பட்டுள்ளதோடு, இடது கையினால் காவியுடை மடிப்பும் தாங்கப்பட்டுள்ளது.
  • உடலின் ஒரு பக்கத்தை மாத்திரம் மறைத்துள்ள காவியுடை சந்தத்துடன் கூடிய சுருக்குகளின் கோலத்தினால் அழகு பெற்றுள்ளதோடு, உடலோடு ஒட்டிய தன்மையையும் காட்டி நிற்கிறது.
  • தலையின் மீது தீச்சுடர் அலங்காரம் இடப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட ஓர் அம்சமாகும் எனும் அபிப்பிராயம் காணப்படுகின்றது.
  • இச்சிலையில் இந்திய அமராவதி கலை மரபின் பண்புகளின் தாக்கம் காணப்படுவதாக கலை விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
  • புத்தரின் மகா புருஷ இயல்பு சிறப்பாக வெளிக்காட்டப்பட்டு உள்ள சிலையாகும்.
பயிற்சி வினாக்கள்

1. இனங்காண்க : ………………………………..
2. காலம்/யுகம் : ………………………………….
3. கலை மரபு : ………………………………………
4. ஊடகம் : …………………………………………….
5. நுட்பமுறை : ……………………………………
6. முத்திரை : ………………………………………..
7. ஆசன முறையும் : ………………………..
8. தலையணி : ……………………………………..
9. காவியுடை : ……………………………………..
10. உணர்வு வெளிப்பாடு : ………………

error: Content is protected !!