ஆசனகர

‘ஆசனகர’ என்பது புத்தர் பெருமானை வழிபடுவதற்காக புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட முன்னர் அவர் புத்தர் நிலையை அடைந்த ஆசனத்தைக் (வஜ்ராசனம்) குறியீடாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட கல்லாலான ஆசனத்தைக் கொண்ட ஒரு மனை ஆகும்.

சாஞ்சி செதுக்கு வேலைப்பாடுகள்
பாரூத் செதுக்கு வேலைப்பாடுகள்

இக்கருத்தை முதன் முதலில் முன்வைத்தவர் சாள்ஸ் கொடகும்புர ஆவார். புளுக்குணாவில் 1961 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஆசனமொன்றினைக் கொண்ட வட்டவடிவக் கட்டடம் தொடர்பாக விளக்கமளித்த அவர், அதனை ஒரு ‘ஆசன கர’ எனக் குறிப்பிட்டதோடு, அவ்வாறான, வேறு நிர்மாணிப்புக்களாக குடாகட்டுவன்னாவை, ஹல்மில்லவட்டிய ஆகிய இடங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புளுக்குணாவ
கலாகம் வெஹர
கற்தூண்கள் – கி.மு. 2 -1 நூற்றாண்டு

‘ஆசனகர’ எனப்படுவதும், ‘போதிகர’ எனப்படுவதும் ஒன்றே எனப் பிற்காலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் செனரத் திசாநாயக்க எடுத்துக்காட்டுகிறார். அவர் எடுத்துக்காட்டுவதற்கிணங்க, ஆரம்பகால பண்டைய அரசமரத்தைச் சுற்றிவர புத்தர்சிலைக்குப் பதிலாக அரசமரத்துடன் இணைந்ததாக அமைக்கப்பட்ட பிரமாண்டமான கல் ஆசனங்களும் காணப்பட்டுள்ளன. அவ்வாறான சான்றுகள், 2010 ஆம் ஆண்டில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஹல்மில்லவட்டிய அகழ்வாயுவ்கள் மூலம் அறியப்பட்டுள்ளன. (தொல்பொருளியல் திணைக்கள அளவைக் காப்பு அறிக்கை). அங்கு, ஆசனத்துக்கு அருகே, அரசமரம் நடப்பட்டிருந்த செங்கல்லினாலான ஓரங்களைக் கொண்ட ஒரு குழி கண்டுபிடிக்கப்பட்டதும் உக்கிப்போன அரசமர மீதிகளைக் கொண்ட மண் குறுக்குவெட்டு மூலம் இது ஒரு ஆசன கர’ அல்ல. மறாக இது ‘போதிகர’ ஆகும் என்பது மேலும் உறுதியாகியது.

புளுக்குணாவ
error: Content is protected !!