இலங்கையின் புத்தர் சிற்பக்கலை

புத்தர் சிற்பங்களின் தோற்றம் பற்றிய வரலாற்றுப் பின்னணி

புத்தர் சிற்ப நிர்மாணக் கலையின் தோற்றம் (Origin) பற்றிய பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. புத்தர் பெருமானின் வாழ்க்கைக் காலத்திலேயே அதாவது கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் புத்தர்சிலைகள் செதுக்கப்பட்டன என இந்திய இலக்கிய நூல்களில் பதிவாகியுள்ளது. புத்தர்சிலை இந்தியாவில் தோற்றம் பெற்ற பின்னர் அது ஏனைய நாடுகளுக்குப் பரவியது என்பதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் பலர் வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளனர்.

‘மகாவம்சம்’ எனும் நூல் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதலே, இலங்கையில் புத்தர் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன எனக் குறிப்பிடுகின்றது. அதற்கமைய இரண்டாம் பாதிஸ் மன்னன் (கி.மு. 250-210) தூபாராம விகாரைக்கெனச் செய்வித்த அழகிய கருநிற பெருங்கற்சிலையை ஜெட்டதிஸ்ஸ மன்னன் (கி.மு. 273-263) பாச்சீனப்பத்தை விகாரையில் தாபித்ததாகவும் துட்டகைமுனு மன்னன் (கி.மு. 161-137) ருவன்வெலிசாயா பெருந்தூபிக்கென தங்கத்தினால் ஒரு புத்தர்சிலை செய்வித்ததாகவும் மகசென் மன்னன் (கி.மு. 301-274) ஸ்ரீ மகா போதிக்காக இரண்டு வெண்கலச் சிலைகள் செயவித்ததாகவும் மகாவம்சத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த எழுத்து மூலச் சான்றுகளின்படி, கி.மு. 2ஆம் நூற்றாண்டின் போது இலங்கையில் புத்தர்சிலைகள் ஆக்கப்பட்டுள்ள போதிலும் அதனை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தொல்பொருளியல் சான்றாதாரங்கள் இதுவரையில் கிடைக்க வில்லை. எனினும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான தகவல்கள் உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் புத்தர்சிலையின் தோற்றம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்ளையும் எடுத்த எடுப்பில் புறந்தள்ளிவிட முடியாது. சிலபோது ஆரம்பகால சைத்தியக் கர்ப்பக்கிரகங்களில் தாபிப்பதற்காக சிறுசிறு புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் எனவும் அச்சைத்தியக் கர்ப்பக்கிரகங்கள் திருடர்களால் சூறையாடப்பட்டதோடு புத்தர் சிலைகளும் அழிவுக்கு உட்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

புத்தர்சிலை முதன்முதலாக இலங்கையிலேயே தோற்றம் பெற்றது என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாகும். சாள்ஸ் கொடக்கும்புற, சந்திரா விக்கிரமகே, சிரி குணசிங்க ஆகியோரும் அவர்களுள் அடங்குவர். தற்போது காணப்படும் சான்றுகளின்படி இலங்கையின் மிகப்பழைமை வாய்ந்த புத்தர்சிலை கி.பி. 250-300 இற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது அனுராாதபுரக்காலத்தில் முற்பகுதியின் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என வண. பெல்லன்வில விமலரதன. ஷோர்டர் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!