இலங்கை ஓவிய மரபின் வளர்ச்சி

இலங்கையின் சுவரோவிய வரலாறு நீண்டதும் செழுமைமிக்கதுமாகும். வரலாற்று மரபுக்கு முற்பட்ட கலைச் செயற்பாடுகள் தொடக்கம் முறையே வரலாற்று (மரபுரீதியான) நவீனத்துவ மற்றும் பின்னடைந்துள்ள கட்டங்கள் வரையில் அதில் அடங்கும். எவ்வாறாயினும் இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய கலை தொடர்பான சான்றுகள் பெரிதும் உறுதிப்படுத்தப்படும் வகையிலான வரலாற்று அடிப்படையொன்று உறுதிப்படுத்தப்படவில்லை. அதாவது இலங்கையின் வரலாற்றுக்கால ஓவியக் கலையின் அளவுக்குத் தெளிவான ஒரு கருத்தை வரலாற்றுக்கு முற்பட்ட காலக் கலைகள் தொடர்பாகக் கட்டியெழுப்ப முடியாதுள்ளது. எவ்வாறாயினும் வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்படும் கற்குகை ஓவியங்களும் கோட்டுச் சித்திரங்களும் இலங்கையில் காணப்படுகின்றன.

இலங்கையின் வரலாற்றுக்காலக் கலை தொடர்பான பெரும்பாலான சான்றுகள் பௌத்த சூழமைவைக் கொண்டிருந்த விகாரைகள் மற்றும் ஆச்சிரமங்கள் சார்ந்ததாகவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை இன்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தாபிதம் பெற்றவையாகும். வரலாற்று ஆவணங்களின்படி, இவற்றுள் மிகப் பண்டைய ஓவியங்கள் தாதுகர்ப்பத்தினுள்ளேயே வரையப்பட்டுள்ளன. அவற்றின் வரலாறு கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரையில் நீண்டு செல்கின்றது. எவ்வாறாயினும், இலங்கை ஓவியக் கலையில் மிகப் பழைமையானவையும் புலனுக்கெட்டும் வகையில் காணப்படுவனவையுமான ஓவியங்களை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிகிரியாவிலேயே காண முடிகின்றது. பிரபல்யம் வாய்ந்த சிகிரியா மாதர் உருவங்களே அவையாகும். இம்மரபு மத்திய காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதோடு, பொலனறுவை மற்றும் கம்பளைக் கால ஓவியங்களும் அதில் அடங்குகின்றன.

அதன் பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் மரபுரீதியான சுவரோவியக் கலை மறுமலர்ச்சி பெறுவதோடு, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெரிதும் கலப்புத் தன்மையுள்ள நிலைமாறு பாணியாக மாற்றமடைந்தது. இந்த நிலைமாறு கலப்புப் பாணியின் மூலம் இலங்கையின் மரபுரீதியான கலையின் சிறப்பான இயல்புகளையும், ஐரோப்பிய நிலத்தோற்றப் பாணியாகிய இயற்கைவாதப் பண்புகள் ஆகிய இரண்டு பண்புகளும் ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளன. இலங்கையின் மரபுரீதியான கலையில் காணப்படும், இந்தப் பல்வகைத் தன்மையானது நவீனத்துவத்துக்கு முதன்மையான (proto moderm) ஒரு தன்மையாகும் எனக் கலை வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி தொடக்கம் இலங்கை ஓவியக் கலையின் பயணப்பாதையானது அதன் மரபுரீதியான பயில்வுகளிலிருந்து விடுபட்டுச் சென்றது. அதாவது மரபைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக பிரித்தானிய அகடமி பயன்பாடு மற்றும் பிரான்சு நாட்டு, பரிஸ் நகரத்தில் கட்டியெழுப்பப்பட்ட நவீனத்துவக் கலைப் பிரயோகங்களின் பல்வேறு மாணி சார்ந்த கையாண்டு பார்த்தல்கள் பிரதியீடு செய்யப்பட்டன. இந்த வரலாற்றுக் கணத்தின் பின்னர் நவீன கலை மரபுகள் இலங்கைக் கலைத்துறையில் நிலைபேறடைந்தன.

கற்கையை இலகுபடுத்துவதாக இலங்கை ஓவியக்கலையின் இந்த வளர்ச்சியை வரலாற்றுக்கு முந்திய, வரலாற்றுக்கால மற்றும் நவீனத்துவ ஓவியக் கலை எனப் பிரித்துக் காட்டலாம். அதாவது திறந்து கடந்த கல் மேற்பரப்பு ஓவியங்கள் தொடக்கம் சுதை (சாந்து) மீது வரையப்பட்ட சுவரோவியங்கள், கனவசு மீது வரையப்பட்ட ஓவியங்கள், தாபித்தல் வரையிலான இந்த ஒவ்வொரு கால கட்டத்தையும் சேரந்த மனித அனுபவங்களின் வெளிப்பாட்டுத் தன்மையை சேனக்க பண்டாரநாயக்க இனது பாகுபாட்டின்படி தொகுத்துக் காட்டலாம்.

error: Content is protected !!