இலச்சினைகள்

இந்து நதிக்கரை நாகரிகத்தின் தொன்மைவாய்ந்த இடங்களில் இருந்து கண்டெடுத்த பொருட்களுள் இலட்சினைகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவை இந்து நதிக்கரை மக்களின் நுட்பமான கலைத்திறமையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. மிருகங்கள், மனிதர்கள், தெய்வங்களைக் குறிக்கும் சிறிய உருவங்கள் இவற்றில் அடங்குகின்றன. இவை இந்து நதிக்கரை மக்களின் சமய நம்பிக்கைகள், வழிபாட்டுக் கிரியைகள், கலாசாரம் (பண்பாடு) என்பவற்றை எடுத்துக் காட்டுவதுடன் அவர்களின் எழுத்துக்கலைக்கும் சான்று பகர்கின்றன. கனிங்கெம் என்பார் 1875 இல் முதல் முதலாக செய்த அகழ்வாராய்ச்சிகளின் போதும், பெனஜி என்பவர் 1921 – 1923 களில் ஹரப்பாவில் செய்த பாரியளவிலான அகழ்வாராய்ச்சிகளின்போதும் அதிகளவிலான இலச்சினைகள் கண்டுபிடிக்கப் பட்டன. இவ்வாறான ஏறத்தாழ 2000 இலச்சினைகள் இந்து நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பற்றி பல பிரிவுகளின் கீழ் கற்றாயலாம். இவற்றின் கட்டமைப்பு அல்லது வடிவம், ஊடகம் இவற்றில் உள்ளடங்கும் கருப்பொருள் இவற்றை நிர்மாணிக்கத் தூண்டிய காரணங்கள் ஆகியவற்றின் கீழ் இவை பற்றி விரிவாகக் கற்றாயலாம்.

அமைப்பும் (வடிவமும்) ஊடகமும்

இந்து நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகள் வெவ்வேறு அளவுகளையும் வடிவங்களையும் கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் நீள்சதுர, சதுர, எண்கோண வடிவங்களைக் கொண்டன. இவை 1.25 x 2.5 சென்ரிமீற்றர், 2.5 x 3 சென்ரிமீற்றர் நீள அகலங்களைக் கொண்டவையாகவும், 1 சென்ரிமீற்றர் தடிப்பத்தை கொண்டதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இலச்சினைகளுக்கு உபயோகித்துள்ள ஊடகங்களும் வேறுபட்டவையாக உள்ளன. சவர்க்காரக்கல் (Steatite) எனப்படும் ஒரு வகை மென்மையான பாறையைப் பெரும்பாலும் உபயோகித்திருந்தனர். இம்மென்மையான பாறை வகை கபில நிறத்தை அல்லது நரை நிறத்தைக் கொண்டது. இதனைத் தவிர சுடப்பட்ட களிமண், செப்பு, யானைத் தந்தம், அகேற்று, கஹந்த போன்ற அரிதான மூலப்பொருட்களை இலச்சினை நிர்மாணிப்புக்கு உபயோகித்துள்ளனர்.

உள்ளடக்கப்பட்டுள்ள கருப்பொருட்கள்

கருப்பொருட்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். தனி விலங்கு உருவங்களாலான செதுக்கல்கள், கூட்டு உருவங்களுடனான செதுக்கல்கள், மனித உருவங்களைச் சித்தரிக்கும் செதுக்கல்கள் இவற்றுள் அடங்கும்.

தனி விலங்கு உருவங்களாலான ஆக்கங்கள்

இந்நாகரிகத்தில் தனி விலங்குருவங்களைக் கொண்ட முத்திரை நிர்மாணிப்புகளே அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றுள் எருது, யானை, மரை என்பன சிறப்பு வாய்ந்தவை. இவ்வாறான இயற்கை விலங்குகளைப் போன்றே கற்பனை வடிவிலமைந்த விலங்குருவங்களையும் செதுக்கியுள்ளனர். சிந்து நதிக்கரை நாகரிகத்தில் எருதுகளைக் கொண்ட இலச்சினைகளே அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒற்றைக் கொம்பு எருது, கட்டையான கொம்புகளை யுடைய எருது என்பன அதிகம் உள்ளன. மெசபொத்தேமிய ரிஷய எருதின் இயல்புகள் இந்த எருதுகள் சிலவற்றில் காணப்படுகின்றன. ஒற்றைக் கொம்பு எருது, பிராமணி எருது, கட்டையான கொம்புகள் உள்ள எருது என்பன எருது உருவங்களுள் அடங்குகின்றன. ஒற்றைக் கொம்புடன் காணப்படும் எருது உருவங்களே சிந்து நதிக்கரையில் அதிகளவில் காணப்பட்டன. பெரும்பாலும் இவ்விலங்கின் முன்னால் சதுர வடிவான அல்லது அரைவட்ட வடிவான பொருளொன்றைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கட்டையான கொம்புள்ள எருதுருவங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. பிராமணி எருதுகளுடனான இலச்சினைகள் பாதுகாப்பு பேணப்பட்ட நிர்மாணிப்புகளாகக் கருதப்படுகின்றன. நீண்ட கொம்புகள் கீழ்நோக்கித் தொங்கும் தாடை, உயரமான திமில் என்பன இவ்வுருவங்களுக்கு எடுப்பான தோற்றத்தைத் தருகின்றன. எருதுகள் அடங்கிய சில இலச்சினைகளில் அவ்விலங்கு களுக்கு அருகில் நறுமணப் புகை போன்ற பொருட்கள் காணப்பட்டதால் இவை பூசைக்குரிய பொருட்களாகக் கருதி பூசை பண்ணப்பட்டதாக எண்ணலாம். சிவனின் வாகனமாகிய நந்தி எனும் எருதே இதன் மூலம் குறிக்கப்படுகின்றது என்றும் நம்பப்படுகின்றது.

எருதுருவங்கள் தவிர்ந்தவிடத்து யானை, காண்டாமிருகம் எனும் உருவங்களும் இந்த இலச்சினை களில் உள்ளன. இந்த அனைத்து விலங்குருவங்களும் நல்ல சதைப்பிடிப்புடனும் தோற்றத்துடனும்

லங்குருவங்கள் பெரும்பாலும் பக்கத் தோற்றத்தையே காட்டுகின்றன. மனித உருவங்கள் முன்னோக்கியிருக்குமாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. விலங்குருவங்கள் இயல்பொத்த வகையிலும் மோடிப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. மனித உருவங்களும் மோடிப்படுத்தியே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கூட்டுருவங்கள்

இங்கே விலங்கு மற்றும் மனித உருவங்கள் கலந்து காணப்படுகின்றன. இவை அதிகமாக கற்பனை வடிவிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மனிதப்புலி, முதலைப் பிராணிகள், யானையெருது என்பவற்றை உகாராணங்களாகக் கறிப்பிடலாம்.

மனித உருவங்கள் ஒருங்கிணைந்த நிர்மாணிப்புகள்

யோகாசன நிலையில் காணப்படும் தெய்வ உருவங்கள், சண்டைக் காட்சிகள் என்பன இவற்றுள் சிறப்பு வாய்ந்தனவையாகக் கருதப்படுகின்றன. மனித உருவங்கள் கற்பனை வடிவில் அமைக்கப் பட்டுள்ளன. மனித உருவங்கள் முன்னோக்கியவாறும் அத்துடன் காணப்படும் விலங்குருவங்கள் பக்கத் தோற்றத்துடனும் காணப்படுகின்றன. அதனைத் தவிர இவற்றில் எழுத்துருக்களும் அடங்குகின்றன.

இவற்றை நிர்மாணிக்கத் தூண்டிய காரணிகள்

இந்த இலச்சினைகளின் பயன்பாடு குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  • வியாபாரப் பண்டங்களின் பொதிகளில் அடையாளமிடுவதற்காக இந்த இலச்சினைகள் உபயோகப்பட்டிருந்தமை.
  • சமயக் குறியீடுகளாக அல்லது பாதுகாப்புக் கருதி அணியப்பட்ட தாயத்துக்கள் உபயோகிக்கப் பட்டிருந்தமை.
  • அனுமதிக் குறியாக (pass) அல்லது சங்கிலிப் பதக்கமாக (pendent) உபயோகிக்கப் பட்டிருந்தமை.

சிந்து நதிக்கரையில் கண்டெடுத்த இலச்சினைகள் அம்மக்களின் மத வழிபாடுகள், நம்பிக்கைகள் என்பனவற்றைப் பிரதிபலிக்கின்றன. அவர்களின் வாழ்க்கை முறை, கலாசார விழுமியங்கள், கலைநுட்பத் திறன்கள் பற்றிய தகவல்களையும் வெளிப்படுத்துவதாக இவை உள்ளன.

பொதுவான கலைப்பண்புகள்

இலச்சினைகள் தெள்ளத் தெளிவான சில இயல்புகளைக் கொண்டுள்ளன. அவற்றுள்,

  • எல்லா இலச்சினைகளிலும் உருவங்களுடன் எழுத்து வரிசையொன்றும் காணப்படல்.
  • கற்பனையாக விலங்குருவங்களும் பொதுவான விலங்குருவங்களும் காணப்படல்.
  • மனித உருவங்களும் கற்பனையான மனித உருவங் களும் பல்வேறு குறியீடுகளும் உபயோகிக்கப்பட்டிருத்தல்.
  • இலச்சினைகளிலும் மேற்பக்க விளிம்பின் ஓரத்தில் எழுத்துகள் காணப்படுதல்.
  • அவை இடமிருந்து வலமாக இரண்டு வரிசைகளில் காணப்படுதல்.

பசுபதி (சிவன்)

இது கொம்புள்ள தெய்வம் எனப்படுகிறது. ஒரு சோடிக் கொம்புகளைக் கொண்ட சிரசாபரணம் தலையில் உள்ளது. கழுத்தும் கைகளும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சேர் ஜோன் மார்ஷல் அவர்கள் இது சிவபெருமானின் மூல நிலை எனும் கருத்தை முன்வைத்துள்ளார். தெய்வ உருவம் முன்னோக்கியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத் தெய்வ உருவத்தைச் சூழ காண்டாமிருகம், ரிஷபம், யானை, புலி எனும் உருவங்கள் பக்கத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளன. ஆசனத்துக்குக் கீழே இரு ஆடுகளின் உருவங்களும் உள்ளன. உருவங்கள் தளத்துடன் பொருந்தும் விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விதம் சிறப்பு வாய்ந்தது. சமநிலைத் தன்மையுடன் தளம் முழுவதையும் பயன்படுத்தி நிர்மாணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இக்கலை ஆக்கங்களில் ஒருமைப்பாட்டைக் காணக்கூடியதாக உள்ளது. தொழினுட்ப அறிவுடனும் கலைத்துவக் கண்ணோட் டத்திலும் இந்து நதிக்கரைக் கலைஞனின் இந்த ஆக்கங்களைச் செய்துள்ளதாகக் கருதலாம்.

மரத்தெய்வம் தெய்வமும் பக்தனும்

இவ்வாறான பல இலச்சினைகள் கண்டெடுக்கப்பட் டுள்ளன. இலச்சினையின் ஒருபக்க ஓரத்தில் வில்வளைவான வடிவத்துக்குள் உருவமொன்று உள்ளது. மறு பக்கத்தில் முழங்கால் மடிந்த ஒரு மனிதன் காணப்படுகிறான். அவனுக்கு முன்னால் வாங்கு போன்றதொன்று உள்ளது. மனிதனுடன் அவனுக்குப் பின்னால் ஆடொன்று உள்ளது. அது ஏனைய உருவங்களை விட சற்றுப் பெரிதாகச் செதுக்கப்பட்டுள்ளது. இலச்சினையின் கீழ்ப்பக்கத்தில் வரிசையாக நிர்மாணிக்கப்பட்ட ஏழு மனித உருவங்கள் உள்ளன. அவை பெண்களின் உருவங்கள் எனப்படுகின்றன. முழங்கால் மடித்திருப்பவர் ஒரு பக்தரின் / பூசகரின் அல்லது மரத்தெய்வம் எனவும் கருதப்படுகின்றது. பூசை வழிபாட்டு நிலையொன்றாகவும் கருதப்படுகிறது. ஆடு பலியிடுவதற்கான ஒன்று எனவும் நம்பப்படுகின்றது.

இரு புலிகளுடன் மல்லுக்கட்டும் மனிதன்

பின்னங்கால்களை நிலத்தில் ஊன்றிய வண்ணம் நிற்கும் புலிகள் இரண்டின் உருவங்கள் குறிக்கப் பட்டுள்ளன. இவை இரண்டுக்கு மத்தியில் கைகளை இருபுறமும் நீட்டிய நிலையில் விலங்குகளை அடக்கும் விதத்திலான மனித உருவமொன்று உள்ளது. இவ்வாறு விலங்குகளுடன் போர் புரியும் சந்தர்ப்பங்களைச் சித்திரிக்கும் காட்சிகள் அடங்கிய பல இலச்சினைகள் சிந்து நதிக்கரையில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.

error: Content is protected !!