கலைஞர் ஏ. மார்க்

  • இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நவீன கட்புலக் கலைகளின் முன்னோடியாகச் செயற்பட்ட ஒரு கலைஞராக ஏ. மார்க் முக்கியத்துவம் பெறுகின்றார்.
  • 1933 இல் யாழ்ப்பாணம், குருநகரில் பிறந்து 2000 இல் உயிர்நீத்த ஏ. மார்க் ஓவியக் கலையிலும், சிற்பக் கலையிலும் திறமை காட்டிய ஒரு கலைஞராவார்.
  • கொழும்பு அரச கலைக் கல்லூரியில் ஓவியக் கலைத்துறையில் உயர்கல்வி பெற்றார்.
  • யாழ்ப்பாணத்தில் “விடுமுறைக்கால ஓவியக் கழகம்” எனும் பெயரில் ஒரு சங்கத்தைத் தாபித்து சித்திர வகுப்புக்களை நடத்தியதோடு, சித்திரக் காட்சிகளையும் நடத்தினார்.
  • அவரது ஓவியப் படைப்புக்களின் இயல்புகளுக்கமைய அவற்றைப் பின்வருமாறு வகைப் படுத்தலாம்.
  1. நிறங்களை அடிப்படையாகக் கொண்ட காலம்
  2. கோடுகளை அடிப்படையாகக் கொண்ட காலம்
  • நிறங்களை அடிப்படையாகக் கொண்ட காலத்தில் இருட்காலம், வெண்காலம், நீலக் காலம் (Dull Period, White Period, Blue Period) எனும் வெவ்வேறு காலங்கள் காணப் பட்டன.
  • கோடுகளை அடிப்படையாகக் கொண்ட காலம் , கனவடிவவாதக் காலம் எனப்படுகிறது.
  • பஸ்ரல் வர்ணம், ஒட்டுச் சித்திரம், கலப்புச்சாதனம், நீர் வர்ணம் என்பனவற்றைப் பயன் படுத்தி பொதுவாக, கடதாசியின் மேல் இவர் ஓவியங்களை வரைந்துள்ளார்.
  • அவரது ஓவியப் படைப்புக்களுள்,

♦ சகுந்தலை
♦ தாண்டவம்
♦ காவடியாட்டம்
♦ ராகமாலிகை

  • ஆகிய படைப்புக்கள் சிறப்பானவையாகும்.
  • இவரது சிற்பப் படைப்புக்களில் கனவடிவவாதப் பண்புகளுக்கு மேலதிகமாக ஹென்ரி மூரினது தளவடிவங்களின் செல்வாக்கையும் காண முடிகின்றது. அச்செல்வாக்குகளுடன் தமக்கே உரிய நவீன பாணியில் நவீன உத்திகளைக் கையாண்டு தமது ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
சகுந்தலை (ஓவியம்)
  • கலைஞர் ஏ. மார்க் படைத்த ஓவியங்களுள் சிறப்பிடம் பெறுவது “சகுந்தலை ” எனும் ஓவியமாகும்.
  • காளிதாசரினால் புனையப்பட்ட சாகுந்தலம் காவியத்தில் பிரதான பாத்திரமாகிய சகுந்தலை இந்த ஓவியத்தின் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
  • பஸ்ரல் ஊடகத்தைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இப்படைப்பு இயல்பான தன்மையை விஞ்சிச் சென்று, மோடிப்படுத்தல் (Abstract) சார்ந்த கலைத்துவப் பண்புகளைக் காட்டி நிற்கின்றது.
  • கனவடிவவாதப் பாணியின் இயல்புகள் இப்படைப்பின் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
  • கனவடிவவாத தளவுருவங்களும் இளநிறங்களும் இப்படைப்பாக்கத்துக்கு இருபரிமாண இயல்புகளைக் கொடுத்த போதிலும், உருவத்தைச் சூழ இடப்பட்டுள்ள தடித்த கோடுகள் காரணமாக முப்பரிமாண இயல்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
  • சித்திரத்தின் பின்னணிக்காக இடப்பட்டுள்ள வர்ணம் தளம் முழுவதிலும் பரம்பியுள்ளவாறு நீட்டப்பட்டுள்ளது.
  • படைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிறம் , தளவுருவங்கள், கோடுகள் ஆகியன மூலம் சகுந்தலையின் உள்ளார்ந்த உணர்வு வெளிப்பாடுகளைக் காட்டுவதில் கலைஞர் எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கதாகும்.
மனிதனும் நாய்களும் (சிற்பம்)
  • கலைஞர் ஏ. மார்க் படைத்துள்ள இச்சிற்பம் புதியதொரு நுட்ப முறையைக் கையாண்டு படைக்கப்பட்டுள்ளது.
  • முன்னங்கால்களை உயர்த்திப் பின்னங்கால்களில் நிற்கும் நிலையில் உள்ள இரண்டு நாய்களுடன் இருக்கும் மனித உரு இந்த ஆக்கத்தில் காட்டப்பட்டுள்ளது.
  • நாய்களின் உருவங்களை விடச் சிறியதாக மனிதனின் உருவம் காட்டப்பட்டுள்ளது.
  • கலைஞர் ஏ. மார்க் அவருக்கே உரிய பாணியில் இச்சிற்பத்தைப் படைத்துள்ளார்.
  • நவீன கலைப் பிரயோகங்களைக் கொண்ட இக்கலைப்படைப்பு மீது கனவடிவவாதக் கலைப் பண்புகளும் கலைஞர் ஹென்ரி மூரினது கலைப் படைப்புக்களின் இயல்புகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
  • இப்படைப்புக்காக சூழலில் கிடந்து பொறுக்கியெடுத்த பொருள்கள் (Found Object) அதாவது பிளாத்திக்குப் போத்தல்கள், பிளாத்திக்குக் குழாய்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • நீளமான, கோறையுடைய பிளாத்திக்குப் போத்தல்களால் உருவங்கள் சந்தத்துக்கு இசைவாகவும் சமனிலையாகவும் வெளியில் உருவாக்கப்பட்டுள்ளன.
  • மேலும் வெளித் துருத்திய மற்றும் உட்குழிந்த பகுதிகளுடன் இப்படைப்பு ஆக்கப்பட்டுள்ளது.
  • விவரமான தன்மை குறைவான, எளிய வடிவங்களைக் கொண்ட எளிமையான வெளிப்பாடானது இக்கலைப் படைப்பின் முக்கிய பண்பாகும்.
பயிற்சி வினாக்கள்

1. “விடுமுறைக்கால ஓவியக் கழகம்” எனும் பெயரில் ஒரு சங்கத்தைத் தாபித்து சித்திரக் கலையை வளர்த்த கலைஞர்?
2. ஓவியர் மார்கினுடைய ஓவிய படைப்புகளின் இயல்புகளைக் கொண்டு அவற்றை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
3. ஓவியர் மார்கினுடைய ஓவியங்களுக்கு உதாரணம் தருக.

1. கருப்பொருள் : ………………………………
2. ஊடகம் : …………………………………………..
3. கலைத்துவ பண்பு : …………………….
4. ஒழுங்கமைப்பு : …………………………..
5. உணர்வு வெளிப்பாடு : ………………

1. கருப்பொருள் : ………………………………
2. ஊடகம் : …………………………………………..
3. கலைத்துவ பண்பு : …………………….
4. ஒழுங்கமைப்பு : …………………………..
5. கலைஞனின் திறன் : …………………

error: Content is protected !!