கடலாதெனிய விகாரை

  • கடலாதெனியா விகாரை கம்பளைக் காலத்தைச் சேர்ந்த ஒரு கலைப்படைப்பாகும்.
  • கி.பி 1341 – 1351 காலத்தில் கம்பளையை ஆட்சி செய்த 4ஆம் புவனேகபாகு மன்னன் காலத்தில் தம்மகித்தி தேரோவின் அறிவுறுத்தல்களுக்கமைய சேனாதிலங்கார அமைச்சரின் தலைமையில் சத்தர்மதிலக எனும் கடலாதெனிய விகாரை நிர்மாணிக்கப்பட்டது.
  • இதன் கட்டட நிர்மாணத்தில் ஈடுபட்டவர் கணேஸ்வராச்சாரியார் எனும் தென் இந்திய கலைஞனும் அவரின் சீடர்களும் ஆவார்கள்.

கட்டடக் கலை நிர்மாணிப்புக்கள்

கடலாதெனிய விகாரை – சிலை விகாரை

  • கடலாதெனிய விகாரை 1ஆம் மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்கிரகம் எனும் 3 பகுதிகளைக் கொண்டது.
  • விகாரையில் மேல் தளம் கருங்கல்லால் ஆனது.
  • அதன் கூரை தட்டையானது. கீழ்த் தளத்தில் நடனக்காரர், மேளக்காரர் வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வுருவங்கள் உயிரோட்டமும் அசைவும் உடையனவாகவுள்ளன.
  • நாலு முக எட்டு வெட்டுக் கொண்ட மூன்று தூண்களாலான தொகுதிகளை கெடிகே எனப்படும்.
  • வட்டச் சிகரக் கூரை கொண்ட இப்பௌத்த விகாரை தென்னிந்திய விஜய நகர இந்து கட்டடக் கலையின் செல்வாக்கைக் காட்டி நிற்கின்றது.
  • தூண்களின் அடிப்பகுதில் தலையை உயர்த்திய நிலையிலான சிங்க உருவமும் தூண் உச்சியில் மற்றுமொரு சிங்க உருவமும் தூணின் தண்டுப் பகுதிச் சட்டகங்களில் ரிஷபத்தில் ஏறிய மனிதவுருவும், மீன் மீது ஏறிய மனிதவுருவும் செதுக்கப்பட்டுள்ளன.
  • பெரிய தூணுடன் சிறிய தூண்களை இணைப்பதற்காகக் கற்பட்டி ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.

விஜய உத்பாய

  • 12 அடி உயரம் கொண்ட அடித்தளத்தில் அமர்ந்த நிலை புத்தர் சிலைகள் 4 வைக்ககப்பட்டுள்ளன.
  • இவை கல்லினால் நிர்மாணிக்கப்பட்டவை.
  • இதன் மீது எட்டுத் திசைகளை நோக்கியிருக்கும் வண்ணம் 8 யானைகளின் உருவங்கள் செதுக்கல் முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
  • கட்டடத்தின் மத்திய பகுதியில் 40 அடி உயரமான தூபி நிர்மாணிக்கப்பட்டு கூரையிடப்பட்டுள்ளது. துபியைச் சுற்றி நான்கு சிறிய சைத்தியங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை சிலை மனையின் கூரையில் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தர் சிலைகள்.

  • கர்ப்பக் கிருகத்தில் அமர்ந்த நிலைப் புத்தர் சிலையொன்றும் நின்ற நிலைப் புத்தர் சிலைகள் நான்கும் உள்ளன.
  • இச்சிலைகள் கண்டியர் கால சிலைகளின் பண்புகளைக் கொண்டுள்ளன.
  • திறந்த கண்கள், அலை மடிப்புக் கொண்ட காவியுடை ஆகியன மூலம் புத்தர் பெருமானின் ஆன்மீகப் பண்புகளைவிட, புற இயல்புகளை வெளிக்காட்டுவதில் கலைஞர் முயற்சி செய்துள்ளார்.
  • வர்ணந் தீட்டப்பட்ட அமர்ந்த நிலைப் புத்தர் சிலையின் பின்புறத்தே அழகிய மகர தோரணம் உள்ளது.
  • வீராசன நிலையில் அமர்ந்திருக்கும் அமர்ந்த நிலை புத்தர் சிலையில் தியான முத்திரையும் சிரசப்பட்டையும் அமைக்கப்பட்டிருத்தல் சிறப்பம்சங்களாகும்.

பயிற்சி வினாக்கள்

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

1. கம்பளைக் காலத்துக்குரிய இக்கட்டடக்கலை நிர்மாணிப்பு ……………………………….. விகாரைத்தொகுதிக்கு உரியதாகும்.
2. இக்கட்டடக்கலைப் படைப்பு ………………………………………………….. கலைஞரால் உருவாக்கப்பட்டதாகும்.
3. இது தென்னிந்திய ………………………………………………….. கட்டடக்கலைப் பண்புகளை எடுத்துக்காட்டுகின்றது.
4. இதன் தனித்துவமாய் அமைவது ……………………………….. ஊடகத்தினால் ஆக்கப்பட்டிருக்கின்றமையாகும்.
5. இக் கட்டடத்தின் ………………………………………….. இல் காணத்தக்க நடனமாடுபவர்களையும் இசைக்கருவிகள் இசைப்பவர்களையும் எடுத்துக்காட்டும் சிற்பம், உயிர்ப்பானதும் அசைவுகள் கொண்டதுமாகக் காணப்படுகின்றது.

1. இக்கட்டடக்கலை நிர்மாணிப்பு ……………………………………………………… விகாரைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
2. இது ………………………………………… யுகத்தில், புவனேகபாகு மன்னனின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
3. இந்த அபூர்வ நிர்மாணிப்பு ………………………………………………………….. என அழைக்கப்படும்.
4. இது திராவிடக் கட்டடக்கலை நிபுணரான …………………………………………………… என்ற கலைஞரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
5. நாற்றிசைகளையும் நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ள நான்கு …………………………………………………………….. மீது நான்கு பரிவார சைத்தியங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சிறு குறிப்பு எழுதுக
1. கெடிகே : ……………………………
2. கற்பட்டி : …………………………….

error: Content is protected !!