கரகம்பிட்டிய விகாரை ஓவியங்கள்

  • மேல் மாகாணத்தில் தெகிவளை நகருக்கு அண்மையில் அமைந்த கரகம்பிட்டிய அதாவது சுபோதாராமய என்று அழைக்கப்படும் விகாரையில் தாழ் நாட்டு விகாரை ஓவியப் பண்புகளை கொண்ட ஓவியங்கள் உள்ளன.
  • இது பொலனறுவைக் கால 1ம் பராக்கிரமபாகுவினதும் கண்டிக் கால ராஜாதிராஜசிங்க அரசன் (1795) காலத்துக்கும் உரியது.
  • இவற்றில் காணப்படும் ஓவியங்கள் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியை (கி.பி. 1897) சேர்ந்த ஓவியங்களாகின்றன.
  • கரகம்பிட்டிய விகாரைச் சுவரோவியங்களில் பெளத்த ஜாதகக் கதைகள், புத்தரின் வாழ்க்கை அம்சங்கள், நரகலோகக் காட்சிகள், சூவிசி விவரணய , சுவர்க்கலோகக் காட்சி ஆகியன உள்ளன.

கரகம்பிட்டிய ஓவியங்களுக்குரிய விசேட பண்புகள்

  • இயற்கைப் பொருள்களைக் காட்ட முப்பரிமாணத் தன்மையைக் கொண்ட வர்ணங் களை உபயோகித்தல்.
  • முகில்கள், நீர் என்பன காட்ட “இன்டிகோ ” (கருநீலம்) உபயோகித்திருந்ததோடு நீலம், வெள்ளை, கறுப்பு வர்ணங்கள் கலந்து முப்பரிமாணத் தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
  • கடும் சிவப்பு, கடும் பச்சை , கறுப்பு, கபில நிறம் போன்ற வர்ணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
  • தேவைக்கேற்றவாறு அவற்றின் வர்ண பேதங்களை உபயோகித்து முப்பரிமாணத் தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தூண்டுதல் (மாரன் புதல்வியர்)

  • கரகம்பிட்டிய விகாரைச் சுவரோவியங்களுள் ஒன்றாகும். புத்தர்நிலை அடைவதைத் தடுக்கும் வகையில் தூண்டுவதற்காக வந்த மாரனின் புதல்வியரான பேராசை, காதல், காமம் ஆகியயோரை இது குறிக்கிறது.
  • மாரன் மகள்மார் இசைக்கருவிகளை இசைக்கும் களியாட்டக் காட்சி காண்பிக்கப் பட்டுள்ளது.
  • மங்கையர்கள் அணிந்திருக்கும் ஆடையணிகள், இசைக்கருவிகள், ஐரோப்பிய செல்வாக் கைத் தழுவியதாகக் காணப்படுகிறது. இவை 19 ஆம் நூற்றாண்டுச் சமூகச் சூழலைக் காட்டுகின்றன.
  • தாழ்நாட்டு சித்திரக் கலையின் பொதுப் பண்புகளான அலங்காரம் விரிவான விபரம் ஆகிய பண்புகளை இவற்றிலும் காணலாம்.
  • தொடர் கதை ஒன்றின் ஒரு பகுதி இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது. தளத்தை முழுவதும் உபயோகித்து ஓவியம் வரையப்பட்டுள்ளது. நீல நிறப் பின்னணியை இவற்றுக்கு உபயோகிக்கப்பட்டுள்ளது.
  • முப்பரிமாணத் தன்மையைக் காட்ட நுணுக்கமான வர்ண பேதங்கள் உபயோகிக்கப் பட்டுள்ளன. மஞ்சள், கறுப்பு, வெள்ளை , நீலம், சிவப்பு, பச்சை, கபில நிறம் போன்ற வர்ண பேதங்களை உபயோகித்து வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. நுணுக்கமாக வர்ணப் பயன்பாடு மூலம் முப்பரிமாண இயல்பைக் காட்ட முயற்சிக்கப்பட்டுள்ளது.
  • உருவங்களைச் சுற்றி கறுப்பு நிறக்கோடு காணப்படுவதோடு அதற்காக நீல வர்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளமை இதன் சிறப்பியல்புகளாகும்.

சித்தார்த்தரின் பிறப்பு

  • இச்சித்திரத்தில் லும்மின் நாகலிங்கப் பூங்காவில் சித்தார்த்தரின் பிறப்பைச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • கதை முறையில் சித்தார்த்தருடைய வாழ்க்கை நிகழ்வின் ஒரு சந்தர்ப்பம்.
  • தொடர்சித்திர மரபில் வரையப்பட்ட இதில் மகாமாயாதேவி சேவகிப் பெண்ணுடன் நாகலிங்க மரத்தின் அண்மையில் வரும் தன்மையும், தேவி மரக்கிளையைப் பிடித் திருக்கும் நிலையில் குழந்தை பிறக்கும் தன்மையும் காட்டப்படுகிறது.
  • மரங்கள் இரண்டுக்கு இடையே பிடிக்கப்பட்ட திரையினால் அவரது உடலின் கீழ்ப்பகுதி மறைக்கப்பட்டு இருப்பதுடன் பிறந்த குழந்தை தேவர்களால் வரவேற்கப்படுகிறது.
  • தாழ்நாட்டு பிரதேச விகாரைச் சித்திரக்கலையின் பொதுப் பண்பான அலங்கரிப்பு விளக்கமாக சித்திரத்தில் காணப்படுகிறது.
  • அழகான மலர் அலங்காரத்தைக் கொண்ட ஆடை அணிகலன் மகாமாயாதேவியை மறைத்துள்ள திரைத்துணியும் மலர்களுடன் கூடிய நாகலிங்க மரம் இரண்டும் இவ்வாக்கத்தில் காணக்கூடிய விசேட இயல்புகளாகும்.
  • சித்திரத்திற்கு மஞ்சள், கறுப்பு, சிவப்பு, செம்மஞ்சள், நீலம், வெள்ளை வர்ணங்கள் பயன்படுத்தி உள்ளதுடன், பின்னணிக்கு நீலம், கறுப்பு வர்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • வர்ணத்தை தட்டையாகப் பயன்படுத்தி இருப்பினும் சில இடங்களில் நுணுக்கமாக முப்பரிமாண இயல்பு வெளிப்படுவதைக் காணலாம்.
  • உருவத்தை சுற்றியும், அலங்காரக் கோலத்தை சிறப்பாக வெளிப்படுத்து தன் பொருட்டும், இரேகை பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள்

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக.

இனங்காண்க : …………………………….
கருப்பொருள் : …………………………….
ஒழுங்கமைப்பு : ………………………….
நுட்பமுறை : ………………………………..
சிறப்பம்சம் : ……………………………..
வர்ணப்பயன்பாடு : …………………….
இரேகைப்பயன்பாடு : ……………….

இனங்காண்க : …………………………….
கருப்பொருள் : …………………………….
ஒழுங்கமைப்பு : ………………………….
நுட்பமுறை : ………………………………..
சிறப்பம்சம் : ……………………………..
வர்ணப்பயன்பாடு : …………………….
இரேகைப்பயன்பாடு : ……………….

error: Content is protected !!