காண்பியக்கலையின் அடிப்படைகள்

காண்பியக்கலையின் அடிப்படைகள் என்பது, காண்பியக்கலைப் படைப்பொன்றினை கட்டியெழுப்பு வதற்குத் தேவையான அடிப்படையான காரணிகளையே குறிக்கின்றது. அதற்கமைய, கோடு, வர்ணம், தளம், வெளி, இழைமம், வடிவம், ஒளியும்-நிழலும், கட்டமைப்பு ஆகிய காரணிகளை முதன்மையான கட்புலக்கலை அடிப்படைகளாகக் கருதலாம். ஒரு கலைஞர் இந்த அடிப்படைக் காரணிகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் ”பாணியை” உருவாக்குகிறார். அதற்கமைய ஒரு கலைப்பாணியில் கட்டமைப்பு இயல்புகளின் நடத்தை விவரிக்கப்படுகின்றது. கட்டமைப்பின் சகல பண்புகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த அமைப்பைக் காணலாம். காண்பியக்கலைப்படைப்பின் வெளிப்பாட்டுத் தன்மைக்கேற்ப, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள அடிப்படை அம்சங்கள் வேறுபடலாம். உதாரணமாக, இயக்கக்கலைப் (kinetic art) படைப்பாக்கமொன்றினைக் கருதுகையில், இயக்கத்தை (motion) அதன் ஓர் அடிப்படை அம்சமாகக் கொள்ளலாம். தெரிவு செய்யப்பட்ட முதன்மையான கட்புலக்கலை அடிப்படைகள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இரேகை / கோடு (Line)

கோடு (இரேகை) என்பதை அசையும் புள்ளியொன்றின் சுவடு/பாதை என அல்லது யாதேனும் பொருளின் புற எல்லை என எளிமையாக வரையறுக்கலாம். கோடு என்பது தனியே ஓவியக்கலைக்கு மாத்திரம் வரையறைப்பட்டதல்ல. மாறாக அது சிற்பக்கலை கட்டடக்கலை, வரைகலை வடிவமைப்பு, ஒளிப்படக்கலை போன்ற அனைத்துக்கும் பெதுவான ஓர் அடிப்படை அம்சமாகும்.

கோட்டினால் காட்டப்படும் வெவ்வேறு தன்மைகளை இனங்காணமுடிவதோடு, அகன்ற (wide), துரித (Quick), மந்தமான (Slow), பதட்டமான (Nervous), விறைப்பான (Rigid) ஆகியன அவற்றுள் சிலவாகும்.

ஒழுங்கான/நேரான கோடுகள் (Regular lines)
அசைவான/ ஒழுங்கற்ற கோடுகள் (Irregular lines)

கோடுகளின் வெவ்வேறுபட்ட தன்மைகளுக்கமைய அக் கோட்டினால் ஏற்படுத்தப்படும் பாணி மற்றும் மனவெழுச்சி சார்ந்த வெளிப்பாடுகள் வெவ்வேறுபட்டவையாகும். உதாரணமாக ஜோர்ஜ் கீற் போன்ற ஒரு கலைஞரின் ஆக்கங்களைக் கருதுகையில், பாணி சார்ந்த வெளிப்பாட்டுக்களில் அகன்ற – தடித்த கோடுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் வின்சன்ட் வங்கோ இனது முறிகோடுகளை உள்ளடக்கிய கோட்டுப் பயன்பாட்டை வெளிப்பாட்டு வாதத்துக்கு உணர்ச்சி மனப்பதிவு வாதத்துக்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம்.

கோட்டின் மூலம் யாதேனும் பொருளின் முப்பரிமாணத்தன்மை, தூரதரிசனத்தையும் காட்டலாம். கோடுகள் மூலம் கட்டியெழுப்பப்படும் தூரதரிசனம், கோடுசார்ந்த தூரதரிசனம் (Linear Perspective) எனப்படும். இதற்காக மறையும் புளி (vanishing point) வரையில் செல்லும் ஒரு தொகுதிக் கோடுகளைப் பயன்படுத்தி கட்புல அடிப்படைகள் கொண்டுவரப்படுகின்றன. பப்லோ பிக்காசோ வினால் வரையப்பட்ட புலம்பும் பெண் (weeping woman) எனும் ஓவியம் கருத்து வெளிப்பாட்டுக்காகக் கோடுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். கறுப்பு, கடுங்கறுப்பு நிறமான புறக்கோடுகள், பெண்ணினது முகத்தில் தளவடிவங்களை வலியுறுத்திக்காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டள்ளது. அழுதல் எனும் வெளிப்பாட்டைக் காத்திரமானவாறு பார்ப்போருக்கு உணர்த்துவதற்காக இக்கோடுகளின் பயன்பாடு துணையாகின்றது. சிற்பக்கலை தொடர்பாக நோக்குகையில், புத்தர்சிலைகளில் சந்தத்துக்கு (லயத்துக்கு ) அமைவான அலைமடிப்புக்களை கோடுகள் மூலம் வலியுறுத்திக் காட்டலுக்கான ஒரு நல்ல உதாரணமாகும். மேலும் அயோனிக் தூணின் போதிகை பகுதிகளில் காணப்படுகின்ற கோடுகள் கட்டடக்கலையின் ஓர் அங்கமாக கோடுகளின் பாவனைக் காட்டப்பட்டுள்ளது.

பப்லோ பிகாசோ புலம்பும் பெண் Weeping Woman
வின்சன்ட் வங்கொ நட்சத்திர இரவு
எட்வாட் மஞ்சி அலறல்
புத்தர் சிலை
அயோனிக் தூண்
வர்ணங்கள் / நிறங்கள் (Colours)

வர்ணம் என்பது ஒளியை முதன்மையாகக் கொண்டு கட்டியெழுப்பப்படும் காண்பியக்கலை அடிப்படையாகும். படைக்கப்பட்ட கலைப்படைப்பின் மேற்பரப்பு மீது நிகழும் ஒளித்தெறிப்புக்கு ஒப்பான தன்மை கண்களால் உணரப்படுகின்றது. நீலம், மஞ்சள், சிவப்பு ஆகியன ஓவியக்கலையின் அடிப்படையான நிறங்களாகக் கருதப்படுகின்றன. இந்நிறங்களின் கலப்பினால் துணைவர்ணங்கள் அதாவது பச்சை, செம்மஞ்சள், ஊதா ஆகிய நிறங்கள் உருவாகும். இக்கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு. ஓவியக்கலையின் வர்ணச்சக்கரம் (Colour cirle/Colour wheel) கட்டியெழுப்பப் பட்டுள்ளது. இது RGB வர்ணச் சக்கரம் எனப்படுகின்றது.

மூல வர்ணங்கள்
துணை வர்ணங்கள்

படிமக் கலையில் (Image art), உதாரணமாக ஒளிப்படக் கலையில் பயன்படும் வர்ணச் சக்கரமானது மேற்படி RGB வர்ணச் சக்கரத்தைவிட வேறுபட்டதாகும். இங்கு அதற்குப் பதிலாக CMYK அதாவது சயன், மஜன்டா, மஞ்சள், கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ணச் சக்கரம் பயன்படுத்தப்படுகின்றது. வர்ணங்கள் தொடர்பான மற்றுமொரு வகைப்பாடாக, வெப்ப வர்ணங்களையும் (Warm colour) குளிர் வர்ணங்களையும் (Cool colour) குறிப்பிடலாம். சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் போன்றவை வெப்ப வர்ணங்களாகவும் நீலம், பச்சை போன்றவை குளிர் வர்ணங்களாகவும் கொள்ளப்படும். யாதேனும் கட்புலக் கலைப்படைப்பில் வெள்ளை, கறுப்பு ஆகிய நிறங்களைப் பயன் படுத்தும்போது அவை மற்றைய நிறங்களுக்கு ஒப்பானவாறு குளிர் வர்ணமாகவோ வெப்ப வர்ணமாகவோ செயற்படும். உதாரணமாக, பிரகாசமான ஒரு தீச்சுவாலையில் செம்மஞ்சள், மஞ்சள் ஆகிய நிறங்களுடன் வெள்ளை நிறத்தைப் பயன்படும் போது அது ஓர் வெப்ப நிறமாகச் செயற்படும். பனிக்கட்டியொன்றினைக் காட்டுவதற்காக குளிர் வர்ணங்களுடன் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தும் போது அது குளிர் நிறமாகச் செயற்படும்.

மனப்பதிவுவாதக் கலை இயக்கமானது கட்புலக் கலையில் வர்ணப் பயன்பாடு தொடர்பாக தீர்க்கமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு திருப்புமுனையாகும். அவர்கள், ஒரு பொருளுக்குத் திட்டவட்டமான வர்ணம் கிடையாது எனக் கூறியதோடு, பொருளின் மீது விழும் ஒளிக்கு அமையவே அப்பொருளின் நிறம் தீர்மானிக்கப்படுகின்றது என வாதிட்டனர். அதற்கமைய வெவ்வேறு ஒளி நிலைமைகளின் கீழே பொருள் வெவ்வேறு தன்மையுடையதாக மாறுகின்றது என மனப்பதிவவாதிகள் எடுத்துக்காட்டினர். எனவே குளோட் மொனே (Clode Mone) போன்ற ஓவியர்கள் ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் வரைந்தனர். மேலும் நிழலைக் காட்டுவதற்காக அவர்கள் பல வர்ணங்களைப் பயன்படுத்தினர்.

ஹக்குசாய்’ இனால் வரையப்பட்ட சிவப்புப் பூஜி (Red Fuji) எனும் ஓவியம் வரணப் பயன்பாட்டின் வலிமை பற்றி விளங்கிக்கொள்வதற்குப் பொருத்தமான ஓர் உதாரணப் படைப்பாகும். வெப்ப மற்றும் குளிர் வர்ணங்களுக்கு இடையிலான ஒரு முரண்பாடு அதில் உள்ளடக்கியுள்ளது. வானமும் பூமியும் நீலம், பச்சை ஆகிய குளிர் வர்ணங்களினால் நிரப்பப்பட்டுள்ளது. மலையின் உடற்பகுதி தீச்சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. மலையின் உச்சியில் வெண்ணிறப் பனித் தட்டுக்கள் காணப்பட்ட போதிலும் சிவப்பு நிறமான உடற்பகுதியின் மூலம் அம்மலையினுள் பொதிந்துள்ள பெருஞ்சக்தி பற்றிக் கோடிட்டுக் காட்டப்படுகின்றது.

இருபரிமாண வடிவங்கள் (Two dimensional Shapes)

எல்லையொன்றினால் வரையறுக்கப்பட்ட நீளமும் அகலமுமுள்ள ஒரு பரப்பை, ‘வடிவம்’ (shape) எனக் கருதலாம். இரு பரிமாணத் தன்மை தொடர்பான கட்புலப் பயன்பாடுகளுடனேயே வடிவம் எனும் பதம் பயன்பாட்டுக்குவந்தது. சில சந்தர்ப்பங்களில் வடிவத்தைக் கட்டியெழுப்புவதற்காக மேலே கலந்துரையாடிய சில வடிவங்கள் தொடர்புறுவதுண்டு.

காண்பியக்கலையில் வடிவம் பல வகையாகப் பிரித்துக் காட்டப்படும். அவற்றுள் கேத்திரகணித வடிவங்களும் (Geometric Shapes) கேத்திரகணிதமல்லாத வடிவங்களும் (Non geometric Shapes) பெரிதும் பயன்படுத்தப்படுவதுண்டு. கணிதம் சார்ந்த சமனிலை காணப்படுதலானது கேத்திரகணித தளவடிவங்களின் சிறப்பியல்பாகும். கேத்திரகணித வடிவங்களைப் பொதுவாக இரண்டு பகுதிகளாகப் ராக்க முடிவதோடு, அவ்வாறான கேத்திரகணித வடிவங்கள் மூலம் காண்பியப் படைப்பாக்கத்தில் முறைமையான ஒழுங்கான பண்டைய விகிதசமனான அமைப்புக்கள் காணப்படமாட்டாது. மாறாக முறிந்த, உடைந்த , சிதறிய, அமைப்புக்களே காணப்படும். கட்புலக் கலைஞர்கள் இந்த இரண்டு வகையான வடிவங்களையும் தமது கலை வெளிப்பாட்டின்போது பொருள் வெளிப்பாட்டுக்காகப் பொருத்தமானவாறு பயன்படுத்துவர்.

கேத்திரகணித வடிவங்கள் (Geometric Shapes)
கேத்திரகணிதமல்லாத வடிவங்கள் (Non geometric Shapes)

பப்லோ பிக்காசோ இனது மூன்று இசைக்கலைஞர்கள் (Three musicias) எனும் ஓவியம், தளப்பயன்பாட்டின் வேறுபாட்டை இனங்காண்பதற்கு மிகப் பொருத்தமான ஒரு படைப்பாகும். இந்த ஓவியத்தில் அருகருகே அமர்ந்திருக்கும் மூன்று மனித உருவங்களும் அவர்களது வாத்தியக் கருவிகளும் ஆடையணிகளும் உடல்களும் அவ்வாத்தியத்தியக் கருவிகளினதும் சுரதாளக் குறிப்பீடுகளதும் அமைப்புக்கு ஏற்பவே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இக்கலைஞர் கட்புலக் குறிக்கோள்கள் எல்லாவற்றையும் இசைசார்ந்த ஒரு தொகுதி தளவடிவங்களுள் உள்ளடங்கச் செய்துள்ளதோடு அதன் மூலம் மிகச் சிறப்பான ஒரு இசையையும் கட்டியெழுப்பியுள்ளார்.

வெளி (Space)

காண்பியப் படைப்பாக்கங்கள் தொடர்பாக முக்கியத்துவம் பெறும் மற்றுமொரு முதன்மையான அம்சமாகிய வெளி, கலை ஊடகத்தின் தன்மைக்கேற்ப வேறுபடும். அதாவது ஓவியக்கலையின் வெளிப்பயன்பாடானது சிற்பக்கலையின் வெளிப்பயன்பாட்டைவிட வேறுபட்டது. ஓவியக்கலையில் ஓவியக்கலையில் வெளியைப் பிரதானமாக முன்னணி (foreground), இடையணி (middle ground), பின்னணி (back ground), ஆகியவற்றுக் கமைய இனங்காணலாம். பெரும்பாலும் ஓவியர்கள் யாதேனும் பொருளுக்கு வழங்கும் முன்னுரிமையை அதிகரிப்பதற்காக அதனை முன்னணியில் வைப்பர்.

உதாரணமாக டாவின்சியினால் வரையப்பட்ட “பாறைகள் மீது கன்னி மரியாள்” (Virgin of the Rocks) எனும் ஒவியத்தில் கன்னி மரியாளும் யேசு பாலனும் ஏனைய பாத்திரங்களும் முன்னணியிலேயே இடப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்னணியில் மலை முகடுகளைக் கொண்ட ஒரு சூழல் காட்டப் பட்டுள்ளது. டாவின்சி இந்த ஓவியத்தின் பின்னணியை அதன் முன்னணியில் உள்ள காண்பியக் கூறுகள் தெளிவாகப் புலப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அமைத்துள்ளார். வர்ணம், ஒளி போன்ற காரணிகளைக் கொண்டு சில சந்தர்ப்பங்களில் பின்னணியில் உள்ள பொருள்களை வலியுறுத்திக் காட்டலாம்.

வெளியுடன் தொடர்புடைய மற்றுமோர் அம்சம் தூரதரிசனம் (perspective) ஆகும். நேர்கோட்டு (ஏகபரிமாண) தூரதரிசனம் (Linear perspective) மேலதிகமாக, சூழ்நிலைத் தூரதரிசனம் (Atmospheric perspective) யாதேனும் கட்புல உருவத்தின் ஆழம் தொடர்பாக உணர்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும். கோட்டுத் தூரக்காட்சியின்போது அண்மையில் உள்ள பொருள்கள் பெரியவையாகவும் தூரத்தில் உள்ள பொருள்கள் சிறியவையாகவும் காட்டப்படும். சூழ்நிலைத் தூரதரிசனம் அண்மையில் உள்ள பொருள்களின் வர்ணத்தெளிவும் செறிவும் தூரச் செல்லச் செல்லப் படிப்படியாகக் குறைந்துசென்று நலிவுறுவது கவனத்திற் கொள்ளப்படும்.

நேர்கோட்டு (ஏகபரிமாண) தூரதரிசனம் (Linear perspective)
சூழ்நிலைத் தூரதரிசனம் (Atmospheric perspective)
இழைமம் (Texture)

இழைமம் எனும் சொல் யாதேனும் பொருளின் மேற்பரப்பின் தன்மையையே குறிக்கின்றது. இது காண்பியக் கலைப் படைப்பொன்றின் பொருள் சார்ந்த இன்றியமையாத ஓர் அடிப்படை அம்சமாகும். காண்பியக் கலையில் உண்மை இழைமம், மாய இழைமம் என இரண்டு இழையமைப்பு வகைகளை இனங்காணலாம்.

உண்மை இழைமம் என்பது குறித்த காண்பிய கலைப் படைப்பு அதன் இயல்பு நிலையில் கொண்டிருக்கும் இழைமமாகும். உதாரணமாக, மரம், கல் போன்ற ஊடகங்களால் ஆக்கப்பட்ட சிற்பப் படைப்புக்களைக் கருதுகையில் அந்த இரண்டு ஊடகங்களுக்கும் பொதுவான உண்மையான இழைமங்கள் உண்டு. தனியே ஓர் ஊடகத்தை மட்டும் கவனத்திற்கொள்ளும் போதும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இழைமங்கள் மூலம் வெவ்வேறுபட்ட மனப் பதிவுகளை வெளிப்படுத்தலாம். உதாரணமாக கிரேக்க தொல்சீர் கால சிற்பக்கலைஞர் தமது ஆக்கங்களை ஒப்பமான இழைமத்தைக்கொண்டே நிறைவு செய்துள்ளனர். கிரேக்க, ஹேர்மீஸ் – டயோனிசியஸ் சிற்பம் இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும். ரொடான் எனும் சிற்பகக் கலைஞர் படைத்த சிந்தனையாளர்” (The Thinker) போன்ற படைப்பாக்கங்களில் சொரசொரப்பான இழைமத்தைக் கொண்ட மேற்பரப்பே காணப்படுகின்றது. ஒன்றுக்கொன்று வேறுபட்ட இந்த இரண்டு வகை மேற்பரப்புக்கள் மூலம் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பாவ வெளிப்பாட்டு நிலைமைகளே காட்டப்பட்டுள்ளன.

மாயையான இழைமத்தை ஓவியர்கள் பெரிதும் பயன்படுத்துவர். இதன் மலம் உண்மையில் காணப்படும் இழைமமன்றி, கட்புலனாகும் இழைமமே குறிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஓர் ஓவியர் கண்ணாடிக் குவளையொன்றினை. கன்வசு மீது வரையும்போது அவர் மாயையான இழைமத்தையே கட்டியெழுப்புவார். ஓவியர் சலவைக்கற் சிற்பமொன்றினை கன்வசு மீது வரையம்போது அச்சிற்பம் சலவைக்கல்லினாலானது என்பதைக் காட்டுவதற்காக அவர் மாயையான இமைமத்தையே காட்டுவார்.

உருவம் கட்டமைப்பு (Form/ Structure)

உருவம் அதாவது கட்டமைப்பு என்பது பெரும்பாலும் முப்பரிமாணக் கலை ஊடகங்களுடன் தொடர்புடைய வகையிலேயே கலந்துரையாடப்படும். அதாவது, நீளம், அகலம், ஆழம் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இது கலந்துரையாடப்படும். கட்டட நிர்மாணக்கலை, சிற்பக்கலை, நிறுவுதல் ஆகியவற்றில் மாதிரி எனும் அடிப்படை அம்சம் சிறப்பாக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. உதாரணமாக, பொலனறுவை தாமரைக் குளம் (நெலும் பொக்குன – Nelum pokuna) எனும் படைப்பாக்கம் மலர்ந்த தாமரைப் பூ வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு அதாவது மலர்ந்து விரிந்த தாமரை இதழ்கள் போன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அவை மேலிருந்து கீழாகச் செல்லும்போது படிப்படியாக அளவிற் சிறியதாகிச் செல்லும் படிக்கட்டுத் தொடர் போன்று திட்டமிடப்பட்டுள்ளது.

நெலும் பொக்குன (தாமரை வடிவக் குளம்) பொலனறுவை

ஓவியக்கலை பற்றி நோக்குகையில் யாதேனுமொரு பொருளின் மாதிரியானது இருபரிமாணத் தளமொன்றில் ஒளி-நிழல் மூலம் காட்டப்படுகின்றது. உதாரணமாமக, கனவடிவவாத ஓவியக் கலைஞர்களின் படைப்புக்களின் மாதிரிக்குரிய அடிப்படைகளாக கூம்பு, கனவுரு, சதுரமுகி, உருளை போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, வடிவமானது/மாதிரியானது கட்புலக் கலையின் முக்கிய மான ஓர் அடிப்படை அம்சமாகும். அது வெவ்வேறு தன்மைகளில் கட்புலக் கலைப்படைப்புக்களில் பயன்படுத்தப்படும்.

error: Content is protected !!