காந்தாரக் கலை மரபு

காந்தாரக் கலை மரபு இந்தியாவில் மட்டுமல்ல தூர கிழக்கு நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்திய கலை மரபு ஒன்றாக இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரை வளர்ச்சியடைந்த இக்கலை மரபானது வெளிநாட்டவர்களான குஷாணர்கள் மக்கள் சமூகத்துடன் இணைந்து செல்லும் வகையில் அங்கு காணப்பட்ட கலாசாரத்துக்கு இசைந்து தொழிற்பட வேண்டி ஏற்பட்டமைக்கான ஒரு சான்றாக உள்ளது. குஷாணர்கள் குறிப்பாக கனிஷ்க மன்னன் பௌத்த சமயத்தை தழுவிக் கொண்ட சிறந்த அரசனாவார் என ஏற்றுக் கொண்டனர். தொல்பொருள் ஆய்வுகளும் மகாயான பௌத்த மூலாதாரங்களும் இம்மன்னன் ஒரு பௌத்தர் ஆவார் என தெளிவுபடுத்துகின்றன. (இந்திய வரலாறு – கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 2004:200) இக்காலப்பகுதியில் ஹீனயான (தேரவாத பௌத்த மதத்தை விட மகாயான பௌத்த மதம் பரவலடைந்தது. அத்துடன் தெய்வங்கள் போதிசத்துவர் ஆகியோரை வணங்கக் காரணமான விக்கிரக வழிபாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இவ்வாறாகப் பௌத்த மதத்தை தழுவிக் கொள்ள முன் குஷாணர்கள் கிரேக்க உரோம நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்த மக்கட் கூட்டமாக இருந்தனர். காந்தாரக் கலை உருவாக்கும் போது, அவர்களுக்கு இந்தக் கிரேக்க உரோம மதமும் அக்கலைப் பண்புகளும் செல்வாக்குச் செலுத்தின. ஆகையால் காந்தாரக் கலையானது கிழக்கு, மேற்கு கலைப் பண்புகளின் கலப்பு எனக் குறிப்பிடப்படுகின்றனது.

புத்தரின் பரிநிர்வாணம் தொடக்கம் கனிஷ்க மன்னனின் காலம் வரை புத்தரின் உருவத்தை மனித உருவத்துக்கு ஒத்ததாகக் காண்பிக்க பௌத்தர்கள் விரும்பியமைக்கும் பல காரணங்கள் காணப்பட்டன. அது புத்தருக்கு ஓர் உருவத்தை நிர்மாணிக்க ஒருபோதும் முடியாது என்றும் அது புத்தபெருமானுக்குச் செய்யும் ஒரு அவமரியாதை என்றும் அவர்கள் கருதினர். அக்காரணங்களால் மௌரிய, சுங்க, சாதவாகன காலங்களுக்குரிய சாஞ்சி, பாரூத் ஆகிய செதுக்கல்களில் புத்தரின் உருவம் குறியீட்டு வடிவில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது வரை இருந்த மரபுக்குப் பதிலாக புதிய மரபுடன் குஷாணர்கள் புத்தரின் உருவத்தை மானிட உருவத்துடன் நிர்மாணித்தமைக்குக் காரணம் இவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்தமையும் மகாயான பௌத்த மதத்தை தழுவியர்களாக இருந்தமையும் ஆகும் என்பது வரலாற்றாய்வாளர்களின் கருத்தாகும். குறிப்பாக மகாயான மதம் ஞானத்தை விட பக்திக்கு முக்கியத்துவம் செலுத்தியுள்ளது. அதற்கேற்ப அவர்களின் வழிபாடுகளுக்காக சிலைகள் தேவைப்பட்டன. அத்துடன் குஷாண அரசர்கள் மேற்கு நாடுகளுடன் இடையறாத தொடர்பு வைத்திருந்தனர். வணிகத் தொடர்பு காரணமாக அவர்களுக்கு அப்பிரதேசக் கலைஞர்களின் ஒத்துழைப்பைப் பெறக்கூடியதாக இருந்தது.

அதனால் குஷாண வம்சத்தினர் செதுக்கிய கலை ஆக்கங்களுள் புத்தரின் உருவம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதுவரை இல்லாதவாறாக புத்தரின் உருவத்தை மனித உருவத்துக்கு ஒத்ததாக நிர்மாணிக்க ஆரம்பித்தனர். முதன் முதலில் மனித உருவத்துக்கு ஒத்ததாக கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் அமைத்த புத்தரின் உருவம் கனிஷ்க மன்னனுடைய நாணயங்களில் “ககொமொபொதோ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய பொதி போன்ற அமைப்புடைய, ஒரு பொருளைக் கையில் ஏந்திய புத்தரின் உருவத்தின் காவியுடையும் குடுமியும் பிற்காலப் புத்தர் சிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஒளிவட்டத்தைக் காண்பிக்கும் நோக்குடன் உடலைச் சூழ கோடொன்று இடப்பட்டுள்ளது.

கனிஷ்ட அரசனினால் நிர்மாணிக்கப்பட்ட ஹியுங்சாங் குறிப்பிடும் தாதுமண்டபம் பொஷவொர் பிரதேசத்தில் ஷாக்ஜிWதெரி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தாதுப் பேழையில் புத்தர் உருவச் செதுக்கலொன்றைக் காணக்கூடியதாகவுள்ளது. இது தங்கத்தால்

சிவப்பு நிற மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட வட்டவடிவமான ஒரு பேழையாகும். இதன் மூடியில் புத்தர் உருவமொன்றும் அதன் இரு பக்கத்திலும் இந்திரன் மற்றும் பிரம்மா வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது புத்தரின் தாதுப்பொருள்களை வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்பொழுது இது பிரித்தானியாவின் தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

முதலில் தங்க நாணயங்கள் மற்றும் பேழைகளிலே நிர்மாணிக்கப்பட்ட புத்த வடிவங்களுக்கு மேலதிகமாக வடமேல் மாநிலத்திலிருந்தும் ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியிலிருந்தும் காந்தாரக் கலை பாரம்பரியத்துடன் கூடிய பல புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் கல்லினாலும் சுண்ணாம்புச் சாந்தினாலும் செய்யப்பட்ட பல உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மோடி சார்ந்த இவ்வுருவங்கள் குள்ளமாகவும் கொழுத்தும் காணப்பட்டன. காந்தார பாரம்பரியம் மேலும் விருத்தியடைந்தபோது மெய்யுருவங்களாகப் படைக்கப் பட்டுள்ளன. அதற்கமைய காந்தார புத்தர் சிலைகளில் காணக்கூடிய அடிப்படைக் கலையம்சங்கள் சிலவற்றை இனங்காண முடிகிறது.

காந்தார புத்தர் சிலைகளின் இலட்சணங்கள்

ஆரம்ப நூற்றாண்டுகளில் காந்தார புத்தர் சிலைகளை செதுக்குவதற்கு ஊடகமாக நீல நிற *சிஸ்ற்” வகைக் கல்லும் பச்சை நிற பிலைற் வகைக் கல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர உலோகங்களால் செய்யப்பட்ட புத்தர் சிலைகளுமுண்டு. (பேராசிரியர் எச். ரி. பஸ்நாயக்க, புராதன இந்திய வரலாறு, 1998 : 214) நின்ற நிலைப் புத்தர் சிலைகளைப் போன்றே அமர்ந்த சிலை காந்தார புத்த சிலைகளிலும் அளவும் பிரமாண இலட்சணங்களையும் காணமுடிவதில்லை. இப்புத்தர் சிலைகளின் குறுந்தன்மை தெள்ளத்தெளிவான ஓர் இலட்சணமாகும்.

காந்தார புத்த சிலைகளின் முகங்கள் தெளிவாகவும் சூரிய கடவுளாகிய அப்பலோ தெய்வத்தின் வடிவினைத் தழுவியதாகவும் ஆக்கப்பட்டுள்ளதோடு சூரிய கடவுளின் சூரிய வட்டத்தட்டும் சில புத்த சிலைகளில் ஒளி வட்டமாகக் காட்டப்பட்டுள்ளது. காந்தார புத்த வடிவத்தின் முகம் கருணையை விட எடுப்பான இலட்சியப் பண்பைக் கொண்டுள்ளது. பெரும்பாலான கிரேக்க சிற்பங்களில் இவ்வாறான இலச்சிய அழகைக் காணக்கூடியதாகவுள்ளது. புத்தர் சிலையின் தலையில் கேச அமைப்பு சூரிய கடவுளின் தலையிலுள்ளது போன்ற கேசச் சுருள்களை ஒன்று சேர்த்து உஷ்கிசா அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையில் நீண்ட செவிகள், நெற்றிப்பொட்டு ஆகியன புத்தரைக் குறிக்கும் அம்சங்களாகும். இச்சிலையின் காவியுடையானது உரோமாபுரியில் ஒகஸ்டஸ் அரசனுடைய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிலைகளில் காணக்கூடிய தடித்த அலை மடிப்புள்ள தோட்டாவ அல்லது ரோகா என்னும் ஆடையைப் பெருமளவு ஒத்ததாகக் காணப்படுகிறது. (புராதன சிந்துவெளி நாகரிகம், பேராசிரியர் எச். ரி. பஸ்நாயக்க 1998 : 211).

காந்தார கலைப்பாரம்பரியம் கி.மு. 1 ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்டது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இந்தியா ஆக்கிரமிப்புக்குட்பட்டதன் விளைவாக காந்தார கலை

நிலையம் அழிந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவ்வாறான சிறப்பான சில சிலைகள் கீழே காணப்படுகின்றன.

பெஷாவோர் அருகில் கோட்டிமந்தார் என்ற இடத்தில் இச்சிலை கிடைக்கப் பெற்றுள்ளது. கிரேக்க சூரியக் கடவுளின் உருவத்துக்கேற்ப இச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பது தெளிவாகின்றது. இதன் முகம் கிரேக்க சூரிய கடவுளின் முகத்தினைப் பெருமளவுக்கு ஒத்துள்ளதோடு தலையின் சூரிய கடவுளின் கேசம் மேல் நோக்கி சேர்ந்தது போல் உஷ்ணிசா அமைக்கப்பட்டுள்ளது. இதன் காவியுடை இந்திய இலக்கியங்களில் விபரிக்கப்படும் வகையில் அந்த உரோமர்களின் ரோகா எனப்படும் தடித்த ஆடையினைப் பிரதிபலிக்கிறது. இச்சிலையின் பௌத்த இலட்சணங்களாக நீண்ட கண்கள், நெற்றிப்பொட்டு, முத்திரை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இச்சிலை புதுடில்லி அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

காந்தார புத்தர் சிலைகளுள் தக்திபாஹ் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அமர்ந்த நிலைச் சிற்பம் சிறப்பான ஒன்றாகும். மேற்கத்தேயக் கலைஞர்கள் இந்திய மரபுப்படி சிலை செதுக்க எடுத்த ஒரு முயற்சியாக இந்தச் சிலையைக் குறிப்பிடலாம். அதன் மூலம் சற்று நீள்வட்ட வடிவுடையதாக ஆக்கப்பட்டுள்ளதோடு கேசம் சூரியக் கடவுளினதைப்போன்று சுருளியாக அமைக்கப் பட்டுள்ளது.)

கோட்டிமந்தர் சிலை

தக்திபாஹி சிலை

இங்கு காவியுடை கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளதுடன் சிலையின் பாதம் அமைந்துள்ள ஆசனம் தெளிவாகக் காணப்படாமைக்குக் காரணம் காவியுடையினால் மறைக்கப்பட்டது போன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமையாகும். இது ஓர் அமர்ந்த நிலைச் சிலையான போதிலும் தியான நிலையினை வெளிப்படுத்துவதில்லை என்பது உடைந்த கைகள் மேல்நோக்கியவாறு இருப்பதன் மூலம் தெளிவாகின்றது. தக்தி பாஹி சிலை தர்ம போதனைச் சந்தர்ப்பத்தைக் குறிப்பதாக நம்பப்படுகின்றது. கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும்போது இவ்வாடையமைப்பானது ஒடுங்கிச் செல்வது போன்ற காட்டப்பட்டுள்ளமையானது கையால் காவியுடையைப் பிடித்து வைத்திருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

இச்சிலை ஆப்கானிஸ்தானில் பிரேகம் என்ற இடத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. மகா அற்புதச் செயலை வெளிப்படுத்தும் இச்சிலை கோட்டிமந்தார் சிலையை விட வட்ட வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. கண்கள் அரைவாசி மூடப்பட்ட நிலையில் காட்டப்பட்டுள்ளது. கோட்டிமந்தார் புத்தர் சிலையின் சுருள் வடிவ கேசத்திற்குப் பதிலாக ஒன்று சேர்த்துக் கட்டப்பட்ட விதமாக உள்ளது. இதன் காவியுடை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. கோட்டிமந்தார் சிலையின் காவியுடை போன்று கரடுமுரடாக முன்னோக்கி, புடைத்த தன்மைக்குப் பதிலாக உடலோடு ஒட்டிக் காட்டப்பட்டுள்ளது. அற்புதச் செயலைக் காட்டுவதற்காக தீச்சுடர் இடப்பட்டுள்ளது. சிலை பொதுவாக குள்ளமாகக் காட்டப்பட்டுள்ளதோடு அளவுப் பிரமாண அம்சங்கள் காட்டப்படவில்லை. இச்சிலை ஆப்கானிஸ்தானில் காபூல் தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

பிரெகம் சிலை

சஹரி பலோல் சிலை

கடினச் செயலைக் காட்டும் சிலை

காந்தார புத்தர் சிலைகளிடையே சஹரி பஹிலோல் புத்தர் சிலை ஒரு சிறந்த ஆக்கமாகும். இச்சிலை பத்மாசன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, கிரேக்க பாரம்பரியத்தை இந்திய பாரம்பரியத்துடன் ஒன்றிணைப்பதற்காக எடுத்துக் கொண்ட ஒரு முயற்சியாகக் கருத முடிகிறது. இச்சிலை தர்மச் சக்கர முத்திரையை வெளிப்படுத்துவதோடு காவியுடை ஒரு பக்கத்தை போர்த்திய வாறு உடலோடு ஒட்டிய விதமாக ஆக்கப்பட்டுள்ளது. தலையில் ஒளிவட்டம் காணப்படுவதோடு ஆசனத்தில் ஐந்து துறவிகளின் உருவங்களைக் காணமுடிகிறது.

காந்தார புத்தர் சிலைகளிடையே இயற்கைத் தன்மைக்கு முக்கியத்துவமளிக்கப்பட்ட ஒரு சிலையாக கடினச் செயலைப் புரிகின்ற சிலையைக் குறிப்பிடலாம். உள்குழிவான கண்கள், தோலுடன் வெளித்தள்ளிய விலா என்புகள், காவியுடை உடலோடு ஒட்டிய தன்மை, கைகால்கள் மெலிந்த தன்மை, ஒட்டிய வயிறு ஆகியன ஆக்கப்பட்டுள்ள விதம் கலைஞரின் திறமையை எடுத்துக் காட்டுகின்றன. இருப்பினும் திடசங்கற்பம் நீங்காத வகையில் புத்தரின் முகம் ஆக்கப்பட்டுள்ளமையும் கலைஞரின் திறனை வெளிக்கொணருகின்றது.

error: Content is protected !!