கிரி விகாரை

பொலன்னறுவைத் தாதுகோபங்களுள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள, தாதுகோபம் கிரி விகாரை யாகும். ஆலாகனைப் பிரிவேனா வளாகத்தொகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய தாதுகோபம் இதுவாகும். இத்தாதுகோபம் மூன்றாம் பராக்கிரமபாகு மன்னனால் கட்டுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. நீர்க்குமிழி வடிவத் தாதுகோபமாகிய இது மூன்று பேசா வளையங்களைக் கொண்டது. நில மட்டத்திலிருந்து கலசந்தாங்கிப் பகுதி உடைந்த பின் மீதியாக உள்ள பகுதியின் உச்சி வரையிலான உயரம் 80 அடியாகும்.

சதுரக் கோட்டத்தின் முகப்பு, கிராதி வேலி போன்று தாதுகோபத்தினது கோல வேலைப்பாடு களைக் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. சதுரக் கோட்டத்துக்கு மேலே உள்ள உருளைவடிவ கழுத்துப்பகுதி தேவதை உருவங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. கலசந்தாங்கியானது குடைத்தொகுதி வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பண்டைய சாந்துக் காரைப்படை தற்போதும்கூட இத்தாதுகோபத்தில் காணப்படுகின்றமை ஒரு சிறப்பியல்பாகும். கி.பி. 1910 இல் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் கிரிவிகாரைக் காப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, புதைபொருள்களைக் கொள்ளையிடும் நோக்குடன் கர்பக்கிகரத்துக்குப் பெருமளவுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை அறியப்பட்டது. தாதுகோபத்தின் நான்கு திசைகளையும் நோக்கிய சிறிய நான்கு விக்கிரம மனைகள் உள்ளதோடு, அவற்றில் சிறிய உருவச்சிலைகளும் மலர்ப்பூசைப் பீடங்களும் காணப்படுகின்றது.

error: Content is protected !!