கும்பாபிஷேகம்


வரலாறு
  • இந்து ஆலயங்கள் தொடர்பான செயற்பாடொன்றாகும்.
  • ஆலயங்களில் நாள்தோறும் நடத்தப்படும் “நைமித்திய” பூஜைகளில் இழந்த சக்தியை மீளப் பெறுவதற்காகவும் புதிதாக அமைக்கப்பட்ட கோயில் கட்டங்களுக்குத் தேவையான சக்தியை பெறுவதற்காகவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கிரிகை நடைபெறுகிறது.
  • இவை பற்றிய விபரிப்புகள் ஆகமங்களில் குறிப்பாக காமிகாமம், சுப்ரபேதம் என்பவற்றில் காணப்படுகின்றன.
முக்கியமான அலங்கரிப்பு முறைகள்
  • இக்கிரியைக்காக ஆலயங்களுக்கு உள்ளே அல்லது வெளியே கொட்டகை அமைக்கப்படும். இது “யாகசாலை” எனப்படுகிறது.
  • நான்கு திசைகளில் இருந்தும் நுழையக்கூடிய விதத்தில் அமைக்கப்படும் இக்கொட்டகை துணிகள் சுற்றப்பட்டு அலங்கரிப்பதே முக்கிய பணியாகக் கருதப்படுகிறது.
  • பிரதான நுழைவாயிலுக்கு நேராக தெய்வங்களுக்காக அத்தெய்வங்களுக்குரிய வாகனங்களைக் குறிக்கும் கொடிகள் காணப்படும். அவ்வாறான முக்கோண வடிவக் கொடி வகைகளாலும் கொட்டகை அலங்கரிக்கப்படும்.
உபயோகிக்கும் மூலப்பொருட்கள் / ஊடகம்
  • மாம்பலகை, வாழைமரம், கமுகு, கரும்பு, மாவிலைகள், குருத்தோலைகள், தென்னம்பூ, கமுகம்பூ, தேங்காய், பூச்சரம், பூமாலை போன்ற இயற்கைப் பொருட்கள் கொட்டகை அலங்கரிப்புக்காகப் பெருமளவில் பயன்படுத்தப்படும்.
  • இவ்வியற்கைப் பொருட்களைத் தவிர செம்மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் வர்ணத்திலான சரிகை வேலைப்பாடு உடையதும் அற்றதுமான துணி வகைகளும் கடதாசி வகைகளும் பயன்படுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.
  • அலங்கார அலகுகளாக தாமரைப் பூக்கள், அல்லிப்பூக்கள், வட்டம், சதுரம் கொண்ட வடிவங்களும் உபயோகிக்கப்படும். நிலம் கோலமிட்டு அலங்கரிக்கப்படும்.

பயிற்சி வினாக்கள்

1. சைவத்தமிழ் மக்களிடையே காணப்படும் சாந்திக்கிரியை யாது?
2. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சாந்தி கிரிகை எது?
3. கும்பாபிஷேக சாந்திக்கிரியை நடாத்தப்படுவதற்கான காரணம் யாது?
4. கும்பாபிஷேக சாந்தி கிரிகையின் முக்கிய அலங்கரிப்புக்கள் எவை?
5. இக் கிரிகையில் அலங்கரிப்புக்குப் பயன்படும் இயற்கைப் பொருட்கள் எவை?
6. இக் கிரிகைக் கொட்டகையை அலங்கரிக்கப் பயன்படும் அலங்கார அலகுகள் எவை?
7. யாகசாலை என்றால் என்ன?
8. பண்டிகைகள், விழாக்கள், சாந்தி கிரிகைகள் ஆகிவற்றின் போது சைவசமயத்தவர்கள் நிலத்தை அலங்காரம் செய்ய பயன்படுத்தப்படும் அலங்காரம் எது?

error: Content is protected !!