சந்திரவட்டக்கல்

பௌத்த விகாரைகளில் பிரவேசவாயிலில் அல்லது படிவரிசை அடிவாரத்தில் காணப்படுகின்ற அரைவட்ட வடிவமுடைய, செதுக்கு வேலைகளைக் கொண்ட கற்பாளமே சந்திரவட்டக்கல் எனப்படுகின்றது. அனுராதபுரக் காலத்தைச் சேர்ந்த இலக்கிய மூலாதாரங்களில் சந்திரவட்டக்கல்லைக் குறிப்பதற்காக பல பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடச்சந்த பாசான, அடச்சந்தப் பதண்டிக்கா, பாட்டிகா, பாசாண, பாதகண்டிக்கா ஆகியவையே அவையாகும்.

பேராசிரியர் வினி வித்தாரண சந்தரவட்டக்கல் என்பதை ‘சூரிய – சந்திரக்கல்’ என எடுத்துக்காட்டியுள்ளார். சந்திரவட்டக்கல்லின் மத்தியில் உள்ள பாதித்தமரையானது கண்டிக் காலத்தில் முழுமையான தாமரையாகக் காட்டப்பட்டிருத்தலானது இந்த சூரிய-சந்திர கருத்தைக் குறித்து நிற்பதாக சந்திரா விக்கிரமகமகே கருதுகிறார்.

சந்திரவட்டக்கல் தோற்றமும் வளர்ச்சியும்

கி.மு. 2-1 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சுங்க செதுக்கல் கலையின் ஊடாகவே சந்திர வட்டக்கல்லின் முதன்மையான தன்மையை காணமுடிகின்றது. இந்த செதுக்கல் வேலைப்பாடுகள் அற்ற சந்திரவட்டக்கல் ஜனகயப் பேட்டையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தோடு சாத்தலாகன்ர காலத்தைச் சேர்ந்த தாமரைச் செதுக்கு வேலைப்பாடுகளைக் கொண்ட ஒரு சந்திர வட்டக்கல், அமராவதி தாதுகோபச் செதுக்கு வேலைப்பொடொன்றில் காணப்படுகின்றது. இந்திய சந்திர வட்டக்கற்கள், அஜந்தா, கார்லே, நாகர்ஜுனக்கொண்ட போன்ற விகாரைகளில் காணப்படுகின்றன. சந்திரவட்டக்கல்லானது இந்திய கட்டட வாயில்களின் கட்டாயமான ஓர் அங்கமல்லாவிடினும், இலங்கைக் கட்டடங்களில் அது கட்டாயமான ஓர் அங்கமாகக் காணப்படுகின்றது. சேனக்க பண்டாரநாயக்க குறிப்பிடுவதற்கிணங்க இலங்கைச் சந்திரவட்டக்கல் என்பது பிரதேச தொடர்புகளுடன் கூடிய சுய சக்தியையும் சுயாதீனத்தையும் கற்றாய்வதற்கு மிகப் பொருத்தமான உதாரணமாகும். (விக்கிரமகமகே, 1995: 14-15) சந்திரவட்டக்கல்லானது அனுராதபுரத்தில் தொடங்கி பொலனறுவை, கண்டிக்காலம் வரையிலான கால வீச்சினுள் வெவ்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியவாறு வளர்ச்சியடைந்தது.

இலங்கைச் சந்திரவட்டக்கல்லின் முதன்மையான வடிவம், ஒரு செவ்வக வடிவக் கற்பாளமாகக் காணப்பட்டது. இது இந்தியாவில் காணப்பட்ட ‘பாட்டிக்கா’ எனும் அங்கத்துக்கு ஒப்பானது. பாட்டிக்கா எனப்படும் இந்தப் படி அமைப்பானது பின்னர் 5 ஆம் நூற்றாண்டாகும்பொழுது அழகிய வேலைப்பாடுகளைக்கொண்டமைந்தது. ‘பாட்டிக்கா தொடக்கம் சந்திரவட்டக்கல் வரையிலான வளர்ச்சி சில கட்டங்களில் வழியே ஏற்பட்டது.

  • முதல் கட்டம் :
    செவ்வக வடிவக் கல்
  • இரண்டாவது கட்டம் :
    முன்பக்க மூலைகள் வளைவாக அமைந்த கற்பாளம்
  • மூன்றாவது கட்டம் :
    பாதியளவு வளைவான தன்மையைப் பெறல்
  • நான்காவது கட்டம் :
    விளிம்பில் செதுக்கல் வேலைப்பாடுகள் இடம்பெறுதல்
  • ஐந்தாவது கட்டம் :
    விளிம்புச் செதுக்கல் வேலைப்பாடுகளுடன் நிரைகளில் செதுக்கல் வேலைப்பாடுகள் சேர்தல்
  • ஆறாவது கட்டம் :
    ஆறு பகுதிகளைக் கொண்ட செதுக்கல்
முதல் கட்டம்: செவ்வக வடிவக் கல்
இரண்டாவது கட்டம்: முன்பக்க முலைகள் வளைவாக அமைந்த கற்பாளம்
மூன்றாவது கட்டம்: பாதியளவு வளைவான தன்மையைப் பெறல்
நான்காவது கட்டம்: விளிம்பில் செதுக்கல் வேலைப்பாடுகள் இடம்பெறுதல்.
ஐந்தாவது கட்டம்: விளிம்புச் செதுக்கல் வேலைப்பாடுகளுடன் நிரைகளில் செதுக்கல் (பன்குலிய)
ஆறாவது கட்டம்: ஆறு நிரைகளைக் கொண்ட வேலைப்பாடுகள் பயன்படுத்தப்படுதல் (மகாசென் மாளிகை)

இக்கட்டத்தில் ஆறு நிரைகளைக் கொண்டதாக சந்திரவட்டக்கல்லின் செதுக்கல் வேலைப்பாடுகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான சமமான பண்புகளைக் கொண்ட சில சந்திரவட்டக் கற்கள் அனுராதபுர காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றுள் அனுராதபுர மகசென் மாளிகை எனத் தவாறாக இனங்காணப்பட்டுள்ளன. ‘பஞ்சாவாச’ தொகுதியின் வாயில் அடிவாரத்தில் உள்ள சந்திரவட்டக்கல் அவ்வாறான அழகிய சந்திரவட்டக்கல் ஆகும். அத்தோடு பெரிதும் கலைத்துவமாக சந்திரவட்டக்கற்கள், அனுராதபுர ஸ்ரீ மகாபோதி, வடக்கு வாயில் மற்றும் பிசோ மாளிகை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அச்சந்திரவட்டக் கற்களின் முதலாவது வரிசையில் பலாப்பெத்தி அல்லது தீச்சுடர் அலங்காரமும் இரண்டாவது வரிசையில் யானை, குதிரை, எருது, சிங்க உருவங்களும் உள்ளன. அவ்விலங்குகள் இடமிருந்து வலமாக ஒன்றன் பின் ஒன்றாக ஓடிச்செல்லும் விதம் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெரிய கொடி அலங்காரமும் தாமரை மொட்டுக்களை அலகினால் தாங்கியிருக்கும் அன்னப்பட்சி வரிசையும் அதன் பின்னர், சிறிய கொடி அலங்காரமும் ஒழுங்கு முறையாகச் செதுக்கப்பட்டுள்ளதோடு, மத்தியில் இதழ்விரிந்த தாமரை மலர் செதுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரக் காலம்

மகாசென் மாளிகை சந்திரவட்டக்கல் (பஞ்சாவாசத் தொகுதி) பிசோ மாளிகை
மகாசென் மாளிகை சந்திரவட்டக்கல் அண்மித்த தோற்றம்
  • இக் கால சந்திரவட்டக்கல்லில் விலங்கு உருவங்களான யானை, குதிரை, சிங்கம், எருது என்பன ஒரே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதுபோல் காணப்படும்.
    உதாரணம் :
    இராணி மாளிகையின் (மகாசென் மாளிகை ) சந்திரவட்டக்கல்

பொலன்நறுவைக் காலம்

வட்டதாகே சந்திரவட்டக்கல்
வட்டதாகே சந்திரவட்டக்கல்
  • இக்கால சந்திரவட்டக்கல்லில் விலங்குருவங்கள் தனித்தனி வரிசையாக காணப்பட்டது.
    எருது, சிங்க உருவங்கள் நீக்கப்பட்டது.
    உதாரணம் :
    வட்டதாகேயின் சந்திரவட்டக்கல்

கண்டிக்காலம்

தெகல்தொருவ
தளதா மாளிகை
தளதா மாளிகை
  • இக்காலத்தில் பெரும்பாலும் முக்கோண வடிவில் சந்திரவட்டக்கற்கள் உருவாக்கப்பட்டன.
    உதாரணம் :
    தலதா மாளிகையின் சந்திரவட்டக்கல்

அறிஞர்களின் கருத்துக்களும் விளக்கங்களும்

செனரத் பரணவிதான

சந்திரவட்டக்கல்லில் காணப்படுகின்ற உருவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்தத்தைக் குறிக்கின்றது என்கிறார். சந்திரவட்டக்க கற்களில் உள்ள சமமான குறியீடுகள் மற்றம் முன்வைப்புக் களைக் கவனத்திற்கொண்டு தமது விளக்கத்தை முன்வைத்துள்ளார். அதற்கமைய சந்திரவட்டக்கல், வாழ்க்கைக் சக்கரத்தைக் குறியீடாகக் காட்டுவதாகக் கூறுகிறார். தமது எண்ணக்கருவை விளக்குவதற்காக அவர் சந்திரவட்டக்கல்லின் அந்தந்த வரிசையில் காணப்படும் குறியீடுகள் பற்றிய விளக்கத்தை முன்வைத்துள்ளனர்.

  • 1 ஆவது வரிசை – (பலாபெத்தி, தீச்சுடர்) உலகம் தீப்பற்றிய விதம்
  • 2 ஆவது வரிசை – (விலங்குகள் ) பிறப்பு, வயோதிபம், நோய், மரணம்
  • 3 ஆவது வரிசை – (பெரிய கொடியலங்காரம்) பேராசை
  • 4 ஆவது வரிசை – (அன்னப்பட்சி வரிசை) நல்லது கெட்டதை இனங்காணத்தக்க பிராணி
  • 5 ஆவது வரிசை – (சிறிய கொடியலங்காரம்) தேவலோகம் – பேராசை குறைதல்
  • 6 ஆவது வரிசை – (அரைவட்டத்தாமரை) மீட்சி (நிவன)
டீ.ரீ. தேவேந்திர

சந்திரவட்டக்கல்லானது வாயிற் பகுதியை அழகுப்படுத்துவதற்காகப் பயன்படுத்திய ஓர் அலங்கார அங்கமாகும் என தேவேந்திர கூறுகிறார்.

வினி விதாரண

சந்திரவட்டக்கல் என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும் பற்றிய நம்பிக்கை மற்றும் செழிப்பு பற்றிய நம்பிக்கை சார்பாகச் செய்யப்பட்ட ஓர் ஆக்கமாகும். என வினி விதாரண கூறுகிறார். மேலும் இதில் அடங்கியுள்ள பெரும்பாலான குறியீடுகள் சூரியனைக் குறித்து நிற்கின்றன என்பது அவரது கருத்தாகும்.

சந்திரா விக்ரமகே

சந்திரவட்டக்கல்லில் காணப்படுபவை மங்கலப் பொருள்களாகும். (சுபமான குறியீடுகள்) எனவும், அவ்வாறான குறியீடுகளை உட்படுத்தியிருத்தல் மூலம் சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் எதிர்பார்த்திருப்பர் என விக்கிரமகமகே குறிப்பிடுகின்றார். மேலும் காவற்கல், கொரவக்கல் (கைப்பிடி வரிசைக்கல்) ஆகியவற்றிலும் அவ்வாறான சுபமான குறியீடுகள் காணப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

error: Content is protected !!