சந்திரவட்டக்கல்

  • வணக்கஸ்தலமொன்றுக்குள் நுழையும் படிக்கட்டின் முன்னால் முதலாவது படியாக அமைந்த அரைவட்ட வடிவ கற்செதுக்கல் வேலைப்பாட்டுடன் கூடிய கல் சந்திரவட்டக்கல்லாகும்.
  • சூரிய சந்திரகல, அடசந்த பகன, பாட்டிக்கா எனும் பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.
  • ஆரம்ப காலத்தில் சதுரவடிவ அமைப்பைக் கொண்ட கல்லாக இருந்து அநுராதபுர, பொலனறுவைக் காலத்திலேயே பின்னர் அரைவட்ட வடிவமாக வளர்ச்சியடைந்தது.
  • கண்டிக்காலத்தில் முக்கோண வடிவமைப்பாக மாற்றமடைந்தது.
  • அத்துடன் ஆரம்பகாலத்தில் செதுக்கல்களளின்றி காணப்பட்ட சந்திரவட்டக்கல்லில் படிப்படியாக செதுக்கல்கள் உள்ளடக்கப்பட்டு உன்னத கலைப்படைப்பானது.
  • அரைவட்டங்களாக அமைந்த ஐந்து வரிசைகளைக் கொண்ட சந்திரவட்டக்கல்லின் ஒவ்வொரு வரிசையும் அலங்காரமான செதுக்கல்களைக் கொண்டவை.

சந்திர வட்டக்கல்லின் ஒவ்வொரு வரிசையின் செதுக்கல்கள் தொடர்பாக பேராசிரியர் செனரத் பரணவித்தான அவர்கள் தெரிவித்த கருத்து பின்வருமாறு அட்டவணை விளக்குகிறது.

1: தீச்சுடர் : பேராசை, காமம் ஆகிய நெருப்பு
2: சத்வாவலிய (யானை, குதிரை, சிங்கம், எருது) : ஜாதி, வயோதிபம், வியாதி, மரணம்
3: கொடிவலை அலங்காரம் : பேராசை எனும் பிணைப்பு
4: ஹன்சாவலிய (அன்ன வரிசை) : உண்மை நிலையை விளங்கிக் கொள்ளல
5: எளிமையான கொடிவலை : பிணைப்புகளிலிருந்து விடுபடல்
6: அரைத் தாமரை : முக்திநிலை

பல்வேறு காலப்பகுதிகளுக்குரிய உயர் கலைப்பண்புகளைக் கொண்ட சந்திரவட்டக்கற்கள்

அநுராதபுர காலம்
  • இக் கால சந்திரவட்டக்கல்லில் விலங்கு உருவங்களான யானை, குதிரை, சிங்கம், எருது என்பன ஒரே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதுபோல் காணப்படும்.
    உதாரணம் :
    இராணி மாளிகையின் (மகாசென் மாளிகை ) சந்திரவட்டக்கல்

பொலனறுவைக் காலம்

  • இக்கால சந்திரவட்டக்கல்லில் விலங்குருவங்கள் தனித்தனி வரிசையாக காணப்பட்டது.
    எருது, சிங்க உருவங்கள் நீக்கப்பட்டது.
    உதாரணம் :
    வட்டதாகேயின் சந்திரவட்டக்கல்

கண்டிக்காலம்

  • இக்காலத்தில் பெரும்பாலும் முக்கோண வடிவில் சந்திரவட்டக்கற்கள் உருவாக்கப்பட்டன.
    உதாரணம் :
    தலதா மாளிகையின் சந்திரவட்டக்கல்

பயிற்சி வினாக்கள்

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இனங்காண்க : ………………………………..
2. காலப்பகுதி: ……………………………………
3. காணப்படும் இடம்: ………………………..
4. செதுக்கல் நுட்பமுறை:………………….
5. ஊடகம்: …………………………………………..

1. இனங்காண்க : ………………………………..
2. காலப்பகுதி: ……………………………………
3. காணப்படும் இடம்: ………………………..
4. செதுக்கல் நுட்பமுறை:………………….
5. ஊடகம்: …………………………………………..

1. இனங்காண்க : ………………………………..
2. காலப்பகுதி: ……………………………………
3. காணப்படும் இடம்: ………………………..
4. செதுக்கல் நுட்பமுறை:………………….
5. ஊடகம்: …………………………………………..

error: Content is protected !!