சோலியஸ் மென்டிஸ்

  • சோலியஸ் மென்டிஸ் கலைஞன் கி.பி. 1897 யூன் மாதம் 17ஆம் திகதி சிலாபம் மாதம்பைக்கு அண்மையில் உள்ள மகாவெவ எனும் இடத்தில் பிறந்தார்.
  • அவரது முழுப்பெயர் வலிமுனி சோலியஸ் மென்டிஸ் ஆயினும் தற்போது அவர் சோலியஸ் மென்டிஸ் என அழைக்கப்படுகிறார்.
  • சோலியஸ் மென்டிஸ் கலைஞனால் மாவில் சுமன குசுமாராமயவில் வரையப்பட்ட எதிர்காலத்தில் புத்தராக இருக்கும் புத்தரின் உருவம் எனும் படைப்பே இவரது முதல் ஓவியம் ஆகும்.
  • இவர் இந்தியாவில் ஓவியக் கலையைக் கற்றார். அஜந்தா, எல்லோரா , பாக் எனும் இடங்களில் சித்திரம், சிற்பம் என்பவற்றின் அமைப்பை ஆராய்ந்து கற்றார்.
  • இவற்றின் மூலம் பெற்றுக்கொண்ட அறிவைக் கொண்டு புதிய களனி விகாரையில் உன்னதமான ஓவியங்களைத் தனக்கென உரிய பாணியில் வரைந்துள்ளார்.
  • களனி விகாரையில் வரைந்த ஓவியங்களைவிட கீழே தரப்பட்ட விகாரைகளிலும் ஓவியங்களை அவர் வரைந்தார்.

♦ றனஸ்கல்ல விகாரை.
♦ கிரிஉள்ள மெத்தெபொல விகாரை.
♦ ஹபராதூவ பிட்டிதூவ கௌனிகொட விகாரை.
♦ பொலனறுவை ஸ்ரீ விஜய விகாரை.

  • ஓவியக் கலைஞராக மட்டுமல்லாமல் மனித நேயம் கொண்ட ஒருவராகவும் வாழ்ந்துள்ளார் என்பதை அவரது படைப்புகள் மட்டுமல்லாமல் பொது மக்களுக்காக அவர் அளித்த நன்கொடைகள் எடுத்துக் காட்டுகிறது.

புதிய களனி விகாரையின் சுவரோவியங்கள் இருவகைப்படும்

♦ புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள்
♦ வரலாற்றுச் சம்பவங்கள்

புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்கள்

♦ மகாமாயா தேவி கண்ட கனவு.
♦ வயல் உழுதல்.
♦ சித்தார்த்தர் கல்வி பயிலுதல்.
♦ சுஜாதா பாற்சோறு தானம் வழங்குதல்.
♦ புத்தராகுதல்.
♦ சொத்திப் பிராமணர் புல் வழங்குதல்.
♦ இறை பதம் அடைதல்.

வரலாற்றுச் சம்பவங்கள்

♦ விஜயன் இலங்கைக்கு வருகை தருதல்.
♦ அனுராதபுர எல்லையைக் கட்டுதல்.
♦ அலுவிகாரையில் திரிபிடகம் நூலாக வெளியிடல்.
♦ ஹேமமாலாவும் நந்த குமாரனும் புனித தந்தத்தை இலங்கைக்குக் கொண்டு வருதல்.
♦ சங்கமித்தை வெள்ளரசுக் கிளையை இலங்கைக்கு கொண்டு வருதல்.
♦ வெலிவிட்ட ஸ்ரீ சுணங்கர தேரருக்கு கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனால் சங்கப் பதவியை வழங்கல்
♦ “புத்தகோ~ கிமியன் விசுத்தி மார்கய” (புத்கோ~ என்பவர் “விசுத்தி மார்கய” என்ற நூலை எழுதுதல்)

புத்தரின் இலங்கை விஜயத்தைக் காட்டும் நான்கு ஓவியங்கள்

♦ மகியங்கனை
♦ நாகதீபம்
♦ கல்யாணங் (களனி)
♦ பதலாஞ்சனங் (ஸ்ரீபாத / சிவனொளிபாதமலை)

ஹேமமாலாவும் தந்த குமாரனும் புனித தந்தத்தை
இலங்கைக்குக் கொண்டு வருதல்

  • கீர்த்தி ஸ்ரீ கேகவர்ண அரசனின் காலத்தில் (கி.பி. 301 – 328) இவ் அரசனிடமிருந்து புனித தந்தத்தைப் பாதுகாக்க ஹேமமாலாவும் நத்த குமாரனும் அதை இலங்கைக்கு கொண்டு வரும் காட்சியை சித்திரிக்கிறது.
  • இவர்கள் பிராமண வேடம் பூண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
  • இது எல்லோரினதும் மதிப்பீட்டுக்குள்ளான உன்னதமான படைப்பு என குறிப்பிடப்படுகின்றது.
  • மனங்கவர் வர்ணங்கள் பிரயோகிகப்பட்டுள்ளன. மென்மையான இரேகைகள் லயத்துடன் கூடிய மனித உருவங்களோடு ஒருங்கிணைத்து வரையப்பட்டுள்ளது.
  • உடலழகு , ஆடையழகு போன்றவற்றை மிகச் சிறப்பாக வரைந்துள்ளார்.
  • ஓவியங்களை வர்ணம் தீட்ட இருளான மஞ்சள், மண்ணிறம், கறுப்பு, வெள்ளை நிறங்களைப் பிரயோகித்துள்ளார். இதனூடாக வர்ணபேதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
  • இயற்கையின் அபூர்வத்தன்மையையும் இயற்கை தன்மையும் பேணும் விதத்தில் இவ்வோவியங்களின் பின்னணியைக் காட்டியுள்ளார்.

சங்கமித்தை வெள்ளரசுக் கிளையை இலங்கைக்குக் கொண்டு வருதல்

  • அசோக மன்னனுடைய மகளான சங்கமித்தை வெள்ளரசுக் கிளையை இலங்கைக்கு கொண்டு வரும் காட்சியை இது காட்டுகிறது.
  • அப்போது இலங்கையை ஆண்ட தேவநம்பியதீசன் ஜம்புக்கோள பட்டணத்துக்கு சென்று நீரில் இறங்கி வெள்ளரசுக் கிளையை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • பாரிய தளத்தில் இது வரையப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட சவால்களை வென்று நல்ல மன ஒருமைப்பாட்டுடன் இக்காட்சியை வரைந்துள்ளமையானது அவ்வோவியக் கலைஞனின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
  • அவ்வோவியத்தில் உள்ள கப்பலின் வடிவத்தை இரேகைகளால் மிக நுணுக்கமாகக் காட்டியுள்ளார். கடல் நீரின் அசைவையும் அவர் காட்டியிருக்கும் விதம் வியக்கத்தக்கது.
  • லயத்துடன் கூடிய இரேகைகளுக்கு புத்துயிர் ஊட்டி அதற்கே உரிய வர்ணங்களை பிரயோகித்துள்ளார். பச்சை, வெள்ளை, கறுப்பு போன்ற நிறப்பிரயோகம் தனித்துவமான பண்பை எடுத்துக் காட்டுகிறது.
  • சுருக்கமாக எடுத்துக் கொண்டால் விகாரையின் அனைத்து ஓவியங்களும் தூரதரிசனம், முப்பரிமாணத் தன்மை, லயத்துக்கேற்றிருத்தல், உயிர்ப்புடன் காணப்படல், பாவத்தின் வெளிப்பாடு, ஒழுங்கமைப்பு என்பன மிகச்சிறந்த வகையில் காணப்படுகிறது.
  • டெம்பரா முறையில் உலர்ந்த சாந்தில் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன.
  • சோலியஸ் மென்டிஸ் இந்தியாவுக்குச் சென்று ஓவியக் கலையைக் கற்றார். அப்போது நத்தலால் போஸ் என்பவர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. எனவே அவருக்கு இவ்வாறான உன்னதமான சித்திரங்களை வரையக் கூடியதாக இருந்தது.
  • இருள் ஒளித் தன்மையை வெளிப்படுத்தும் கியரொஸ்குரோ (Chiaros Curo) எனும் வர்ணந் தீட்டலை ஒத்த பண்புகள் இந்த ஓவியத்தில் காணப்படுகின்றன.

பயிற்சி வினாக்கள்

1. சோளியஸ் மென்டிஸ்சினால் வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படும் விகாரை யாது?
2. இவரது ஓவியங்களில் புத்தரின் வாழ்க்கை சம்பவங்களுடன் வரையப்பட்ட நிகழ்வுகள் இரண்டு தருக?
3. ஹேமமாலாவும் தந்தகுமாரனும் எவ்வேடம் பூண்டு புனிததந்தத்தை இலங்கைக்கு கொண்டு வந்தனர்.
4. இவ் ஓவியத்திற்கு பாவிக்கப்பட்ட வர்ணங்கள் யாவை?
5. இவர் எவ் ஓவியமுறையைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்துள்ளார்?
6. சோளியஸ் மென்டிசினுடைய ஓவியப்பண்புகள் இரண்டு தருக?

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

அருகில் காட்டப்படும் ஓவியம் (1) ……………………………………………………………….. என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது. (2) ……………………………………………………………………. என்பவரின் உன்னதமான இப் படைப்பானது (3)…………………………………………………… விகாரையில் காணப்படுகின்றது. இது (4) ………………………………………………………. எனும் கருப்பொருளை சித்தரிக்கின்றது. இங்கு (5)…………………………………………………… ஆகிய வர்ண ங்க ளுடன் மனித உருவங்கள் கபிலநிற இரேகைகளினால் உயிரூட்டப்பட்டுள்ளன. இவரின் ஓவியங்கள் பாக், எல்லோரா, (6)…………………………………………………….. ஓவியங்களைத் தழுவி வரைப்பட்டுள்ளன.

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. கலைஞன் : ………………………………………………………
2. கருப்பொருள் : ………………………………………………..
3. வர்ணப்பிரயோகம் : ……………………………………..
4. ஒழுங்கமைப்பு : ……………………………………………..
5. உணர்வுவெளிப்பாடு : ………………………………….

error: Content is protected !!