ஜாமினி ரோய் (1887 – 1972)

மேற்கு வங்காளத்தில் செல்வந்தக் குடும்பமொன்றில் 1887 இல் ஜாமினி ரோய் பிறந்தார். அவர் அபனிந்திர நாத் தாகூரிடம் பயின்ற திறமைமிக்க ஒரு மாணவர் ஆவர். அவர் அடிப்படைக் கலைக் கல்வியைக் கல்கத்தா (கொல்கத்தா) அரச அக்கடமியில் பெற்றார். அவர் அங்கு மரபு ரீதியான அக்கடமிக் கோட்பாடு களையே கற்க நேர்ந்தது. 1908 இல் அவர் லலிதகலா டிப்ளோமாவை பெற்றார். பின்னர் கலையில் நவீனத்துவ கலை அணுகுமுறையொன்றினை விருத்தி செய்ய முயற்சித்ததோடு, அதன் போது சுதேச ஓவியப் பாணி

களின் செல்வாக்கைப் பெற்றார். நாட்டார் கலைகளில் காணப்படும் பல பண்புகளை ரோய் இனது ஓவியங்களின் காணலாம். ‘கலிகட்’ ஓவிய மரபானது, ஜாமினி ரோய் இனது படைப்புக்களின் வெளிப்பாட்டு விதி மீது பங்களிப்புச் செய்த முக்கியமான சுதேசக் கலை மரபாகும்.

ஜாமினி ரோய் இனது ஓவியங்களை அக்கடமிக் யதார்த்த வாதத்துக்கு எதிரானதாக இனங்காணலாம். ஆரம்பத்தில் ஓர் உருவப் படக் கலைஞராகப் பிரபல்யம் பெற்றிருந்த போதிலும் பிற்காலத்தில் அவரது விடயப் பரப்பு விரிவடைந்தது. சுதேச கலைப் பாரம்பரியங்கள் மூலம் செல்வாக்குப் பெற்ற அவரது ஓவியங்களில் கறுத்த, தடித்த, கோடுகள் தெள்ளத் தெளிவானவை. கிராமிய மக்களது வாழ்க்கை நிலவரங்களை கிரகித்து, அதனை எளிமைப்பாட்டு தன்மையுடன் வெளிப்படுத்துவதே அவரது முதன்மையான இயல்பாகும். மேலும் ஓவியக் கலையை அனைவரும் பங்களிப்பு செய்யும் ஓர் ஊடகமாக மாற்றுவதில் ரோய் இனது ஓவியங்கள் செல்வாக்குச் செலுத்தின. ஜாமினி ரோய் இனது ஓவியங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. பூனையும் சிங்க இறாலும், தாயும் பிள்ளையும், கிருஷ்ணாவும் பலராமாவும், புலி மீது இருக்கும் அரசி போன்ற பல ஓவியங்களை ஜாமினி ரோய் வரைந்துள்ளார். ப

எளிமைப்பாடு, இயற்கையை மோடிப்படுத்தல் சார்ந்த வாசிப்புக்கு உட்படுத்தல், பிரகாசமான வர்ணப் பயன்பாடு, தட்டையான வர்ணப்பூச்சு, தடிப்பான புறவரைக்கோடு இடல் போன்றவை இவரது ஓவியங்களில் பரவலாகக் காணப்படும் இயல்புகளாகும்.

பூனையும் சிங்க இறாலும்

சிங்க இறாலை வாயில் கௌவி நிற்கும் பூனையொன்றின் உருவம் இந்த ஓவியத்தில் காட்டப் பட்டுள்ளது. ஜாமினி ரோய் இந்திய நாட்டார் கலைஞர்களின் ஊடாகப் பெற்ற செல்வாக்கை நன்கு வெளிக்காட்டும் ஓர் ஓவியப்படைப்பாக இதனை இனங்காணலாம். இந்த ஓவியத்தில் உள்ள விலங்கு உருவங்களாகிய பூனையின் உருவமும் சிங்க இறாலின் உருவமும் மிக மோடிப்பாங்கானவை. அவை இயல்பான எதிர்பார்ப்புக்கமையத் தோன்றிய புதுமைப்பாடான இரண்டு உருவங்களாகும். மரபுரீதியான அல்லது அக்கடமி ஓவியக் கவனத்துக்கு உள்ளாகாத கருப்பொருள்களே இந்த ஓவியத்தின் மூலாதாரமாகக் காணப்பட்டுள்ளன. இது நவீனத்துவக் கலைக்குரியதாக நம்பப்படுகின்றது.

பூனையினது உடலின் நடுப்பகுதியில் காணப்படும் பச்சை நிற வடிவத்தைச் சூழ நீள்வட்ட வடிவமொன்று கபில நிறத்தில் வரையப்பட்டுள்ளது. இவ்வாறான எந்தப் பண்பையும் நிஜ உலகைச் சேர்ந்த பூனைகளில் காணமுடியாது. மேலும் பூனையின் கண்கள இரண்டும் அகல விரிந்தாற்போன்று இரண்டு சில்லுகள் போன்று காட்டப்பட்டுள்ளது. இவ்விலங்கு உருவங்களின் புறவரைக் கோடு, கறுப்பு நிறக் கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. அக்கோடு தொடர்ச்சி யாகவும் தடிப்பாகவும் விலங்கு உருவங்களின் வடிவங்கள் நன்கு வெளித்தள்ளப்பட்டு காட்சி யளிக்கும் விதத்திலும் இடப்பட்டுள்ளது. பூனையின் உடல் வெண்ணிறமாகக் காட்டப் பட்டமையால், அவ்வுடலைச் சூழக் காணப்படும் கறுப்பு நிறக் கோடு தெள்ளத் தெளிவாகப் புலனாகின்றது. உடலின் வெண்ணிறத்துக்கும் கறுப்பு நிறப் புறவரைகோட்டுக்கும் இடையே சாம்பல் நிறமான மற்றுமொரு கோடு இடப்பட்டுள்ளது. பூனையின் உடலில் அலங்காரங்களை கொண்டுவருவதற்காக பல அலங்கார வடிவங்களை பயன்படுத்தியுள்ளார். அதாவது இங்கு இயல்பு நிலையை வரைவது கலைஞனின் நோக்கமன்று. மாறாக இயல்புநிலையை கலைஞனின் எதிர்பார்ப்பின்படி மாற்றியமைத்தல் ஆகும். பூனையின் காதுச் சோணை உச்சி, தலையுச்சி, மூக்குக் குழிகள் போன்ற இடங்கள் நாட்டார் கலை வடிவங்களை நினைவூட்டும் வகையிலான எளிமைத் தனத்துடன் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் பூனையின் வாயில் இருக்கும் சிங்க இறால் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. சிங்க இறாலின் கைகள் போன்ற தூக்கங்கள் கீழே தொங்கும் விதத்திற்கேற்ப, அது இறந்து போயுள்ளது என்பது உணர்த்தப்படுகின்றது. பூனை கவனமாக நோட்டமிடும் பாங்கில், சிங்க இறாலை வாயினால் கௌவியவாறு பார்ப்போரை நோக்கியிருக்கும் விதம் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் தட்டையான முறையில் வர்ணந் தீட்டப்பட்ட ஒன்றாகும். நிழல்கள் அதாவது ஒளி – நிழல் காட்டப்படவில்லை. பயன் படுத்தியுள்ள வர்ணங்களும் வரையறைக்குட்பட்டவையாகும். வரையறைக்குட்பட்ட அவ்வர்ணங்களையும் கூட ஓவியர் ஒவ்வாமை வெளிப்படும் வகையிலேயே பயன்படுத்தி யுள்ளார். சிவப்பு – பச்சை, நீலம் – சிவப்பு, கறுப்பு – வெள்ளை என்றவாறாக ஒன்றுக்கொன்று எதிரான வர்ணங்கள் அருகருகே இடப்பட்டுள்ளன. பின்னணி முற்றுமுழுதாக நீல நிறத்தினால் நிரப்பப்பட்டுள்ளது. பின்னணியில் பொருட்கள் எதுவுமின்றி எளிமையான அலங்காரங்களை வரைந்திருப்பதனால் விலங்கு உருவங்கள் தெள்ளத் தெளிவாகப் புலனாவதற்கு அது ஏதுவாகியுள்ளது. ஒட்டு மொத்த படச் சட்டகமும் நிரம்பும் வகையில் பூனை, இறால் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பூனையின் உயர்த்திய வாலானது தொங்கிக் கொண்டிருக்கும் கைகள் போன்ற தூக்கங்களைக் கொண்ட இறாலின் உடலுடன் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஓவியத்தைச் சுற்றி வர கபில நிறக் கரை இடப்பட்டுள்ளது. நவீனத்துவ ஓவியக் கலையின் சுயாதீன வெளிப்பாட்டை அல்லது தனிநபரின் பாணியைக் கொண்டுவருதலே ஓவியத்தின் ஒட்டுமொத்த கலைத்துவப் பிரயோகங்கள் காட்டி நிற்கின்றன.

தாயும் சேயும்

ஜாமினி ரோய் இக்கருப்பொருளின் கீழ் பல ஓவியங்கள் வரைந்துள்ளார். ஒரு தாய் தமது பிள்ளையை மார்போடணைத்துப் வைத்திருக்கும் ஓவியமே இங்கு காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தப் படச் சட்டகம் தாயின் உருவத்தினால் நிரம்பிக் காணப்படுகின்றது. தாயினது உடலின் ஒரு பகுதி போன்று காட்சியளிக்குமாறு பிள்ளையின் உடல் காட்டப்படுகின்றது. நீலம், இளஞ்சிவப்பு, இருண்ட மஞ்சள் போன்ற கண்ணைக் கவரத்தக்க மென்மையான நிறங்கள் இந்த ஓவியத்தினதும் வெளிப்பாட்டுத் தன்மையானது. ஓவியத்தில் உள்ள தாய் உருவம் சேலையணிந்து இந்தியக் கிராமியப் பெண்ணொருவரை நினைவுபடுத்து வதைப்போன்று அமைந்துள்ளது. பெரும்பாலான நாட்டார் ஓவியங்கனைப் போன்று தட்டையாகவே வர்ணந் தீட்டப்பட்டுள்ளது.

வரையறைக்குட்பட்ட புறவரைக் கோடுகளால் மிகத் திறமையான தாயினதும் சேயினதும் உருவங்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. மார்போடணைத்த சேயின் முகம் மற்றும் தாயின் முகம் நேராக நோக்கியிருக்குமாறு காட்டப்பட்டுள்ளது. தாயின் கண்கள், தலைமயிர் ஆகியவற்றுக் காக கறுப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்கள் நேராக நோக்கியிருப்பது காட்டப்பட்டுள்ளது. பின்னணிக்காக இருண்ட மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய மடோனா ஓவியங்களிலிருந்து வேறுபட்டு, சுதேச தாய்க்கும் சேய்க்கும் இடையிலான தொடர்பை நன்கு வெளிப்படுத்திக் காட்டும் சிறப்பான ஓர் ஓவியமாக இது அமைந்துள்ளது. அக்கடமி ஓவியந் தீட்டல் விதியை மீறிச் செல்லும் வகையில் தாய் சேய் உருவங்கள் வ அதாவது நவீனத்துவக் கலை நம்பிக்கைகளுடன் இணைந்த பாணிகளின் பல்வகைமையை மதித்தலையும், கட்டுக்கோப்பான நியம விதிகளிலிருந்து விடுபட்டுச் செல்லலையும் காண முடிகிறது.

error: Content is protected !!