தம்புள்ளை இராஜமகா விகாரை ஓவியங்கள்

தம்புள்ளைக் குகைத் தொகுதி யானது உலகின் பெருமதிப்பைப் பெற்றுள்ள பௌத்த விகாரைகளுள் ஒன்றாகும். அங்கு பெருந்தொகையாகக் காணப்படும் சிற்பங்களும் ஓவியங் களுமே அதற்கான காரணமாக அமைந் துள்ளது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை ஓவிய மற்றும் சிற்பக் கலை தொடர்பான சான்றாதாரங்கள் மெருமளவில் கிடைக்கும் ஓர் இடமாக இதனைக் குறிப்பிடலாம்.

மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ளை விகாரை, முற்காலத்தில் ‘ஜம்புகோள’ என அழைக்கப்பட்டதாக `மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னன் நிஸ்ஸங்க மல்லன் காலத்தில் இது ‘சுவர்ண கிரிக் குகைகள்’ (தங்க மலைக் குகைகள்) என அழைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அனுராதபுரக் காலத்தில் மன்னன் வலகம்பாகு காலத்தில் தம்புள்ளை விகாரை நிர்மாணிக்கப்பட்டதாக வம்சக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. எனினும் தம்புள்ளை விகாரையில் தற்போது காணப்படும் பெரும்பாலான படைப்புக்கள், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனின் காலத்தைச் (கி.பி. 1755-1760) சேர்ந்தவையாகும். இந்தக் குகைத் தொகுதி ஐந்து சிலைமனைகளாலானது.

  1. தேவராஜக் குகை
  2. மகாராஜ குகை
  3. மஹ அலுத் விகாரை
  4. பச்சிம விகாரை
  5. இரண்டாவது புது விகாரை
    ஆகியனவே அவையாகும்.

தம்புள்ளை விகாரைச் சுவரோவியங்கள்

இலங்கையில் காணப்படும் மிகப் பெருந்தொகையான சுவரோவியத் தொகுதி தம்புள்ளை இராஜ மகா விகாரையிலேயே காணப்படுகின்றது. இச்சுவரோவியங்கள் ஏறத்தாழ இருபதாயிரம் சதுர அடிப்பரப்பில் பரம்பிக் காணப்படுகின்றன. கண்டிக் காலத்துக்கு முற்பட்ட காலங்களிலும் இங்கு சுவரோவியங்கள் வரையப்பட்டிருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. இங்கு தொடர்ச்சியாக சுவரோவியங்கள் காணப்பட்டமைக்கும் வெவ்வேறு காலப்பகுதிகளில் அவை மாற்றங்களுக்கு உட்பட்ட மைக்கும் இது சான்றாக உள்ளது.

கண்டிக் காலத்துக்கு முற்பட்ட காலங்களில் வரையப்பட்ட ஓவியங்களில் மீதியாக உள்ள சில பகுதிகள்

தம்புள்ளை விகாரையில் தற்போது காணப்படும் சகல ஓவியங்களும் கண்டிக் காலத்தைச் சேர்ந்தவையாகும். நீலகம ஓவியர் சந்ததியைச் சேர்ந்த ஓவியர்களாலேயே இந்த விகாரையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தம்புள்ளை விகாரையின் ஒவ்வொரு குகையிலும் புத்தர் சிலைகளையும் சுவரோவியங்களையும் காணலாம். எனினும், 1ஆம், 2 ஆம் மற்றும் 3 ஆம் இலக்கக் குகைகளிலேயே பெருமளவில் ஓவியங்களைக் காணமுடிகின்றது.

குகை இல. 01 – தேவராஜ குகை

‘விஷ்வகர்மன்’ தெய்வ உருவம்.
அரச மரத்துக்கு விதர்க்கமான முத்திரையுடன் வரையப்பட்ட புத்தர் உருவம்.

விஷ்வகர்மன் தேவ உருவ ஓவியம் / கதிர்காம கந்தன்
அரச மரத்துக்கு விதர்க்கமான முத்திரையுடன் வரையப்பட்ட புத்தர் உருவம்
குகை இல. 02 – மகாராஜ குகை

இவற்றுள் இலக்கம் 2 – மகாராஜ குகையே மிக அழகிய மிக முக்கியமான படைப்புக்களைக் கொண்ட குகையாகக் கருதப்படுகின்றது. சகல புத்தர்சிலைகளும் வேறு சில சிற்பங்களும் விதானத்தில் உள்ளது. குகைச் சுவர்களில் பரம்பியுள்ள பல சுவரோவியங்களும் இங்கு காணப்படுகின்றன. மேலும் இவ்விகாரையில் காணப்படும் சுவரோவியங்களைப் பிரதானமாக நான்கு பகுதிகளாக வகுத்துக் காட்டலாம்.

1. வரலாற்று நிகழ்வுகள்:

எல்லாளன்-துட்டகைமுனு யுத்தம், விஜயனின் வருகை, மகிந்தர் வருகை, ஸ்ரீ மகாபோதி விருட்சத்தை (அரசமரக்கிளையைக்) கொண்டு வருதல், மகா விகாரை எல்லையைக் குறித்தல்.

2. சித்தார்ந்த குமாரனது வாழ்க்கைச் சட்டங்கள்:

சித்தார்ந்த குமாரன் பிறப்பு, இல்லறத்தைத் துறந்தேகல், பிரம்மன் சித்தார்த்தருக்கு காவியுடை வழங்குதல்.

3. புத்தர் வாழ்க்கைக் கட்டங்கள்

புத்தர்த்துவம் கிடைத்தல், மாமரனைத் தோற்கடித்தல், பொற்காசுகள் பரப்பிவைத்து ஜேதவனத்தைப் பூசையாக வழங்குதல்.

4. இருபத்து நான்கு விவரணங்கள் / ஆயிரம் புத்தர்கள்.

5. அறிவொளி பெற்றோர். (ரஹதுன்)

இலங்கையின் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகளைக் காட்டும் ஓவியங்கள்

இக்குகையில் உள்ள இலங்கையின் வரலாற்றுடன் தொடர்புடைய சம்பவங்களைக் காட்டும் ஓவியங்களுள், `விஜயனின் வருகை’ எனும் ஓவியம் தனிச்சிறப்பான ஒன்றாகும். இங்கு காணப்படும் ஓவியங்களில் விஜயகுமாரனின் ஆட்களைக் குவேனி ஒளித்து வைத்த தாமரைக் குளமானது உணர்வுபூர்வ உருவங்கள் மூலம் ஆக்கப்பட்டுள்ளது. தாமரை மலரின் இயல்பான தன்மையை விட்டு விலகி, தாமரை மலர்கள் மற்றும் தாமரை இலைகள் பற்றிய எண்ணக்கருக்களை உருவங்கள் மூலம் பிறப்பிப்பதிலும் நிறப்பயன்பாட்டின் மூலம் மாயையான மறைவான தன்மையை வெளிக்காட்டுவதிலும் கலைஞன் வெற்றி பெற்றுள்ளதுடன் இதன் மற்றைய ஓவியத்தில், குவேனியின் துணையுடன் விஜயகுமாரன் இயக்கர் சேனையை அழிப்பது காட்டப்பட்டுள்ளது.

‘மஹிந்தர் வருகை’ எனும் ஓவியமும் இலங்கை வரலாற்றின் மற்றுமோர் முக்கிய நிகழ்வைக் குறித்துநிற்கின்றது. அம்பும் வில்லும் ஏந்தி மான் வேட்டைக்குச் செல்லும் மன்னன் தேவநம்பியதீசனை மகிந்ததேரர் சந்திக்கும் செய்தியும். மஹிந்ததேரர் உட்பட சங்கத்தினருக்கு வசிப்பதற்கான மிகிந்தலை மலையைப் பூசையாக வழங்கும் செய்தியும், பின்னர் மகிந்ததேரரினால் அரசனுக்கு தருமபோதனை செய்யும் விதமும் தொடர்ச்சியான கதை சொல்லல் முறையில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

இதன் வலது கரையில் தொடர்ச்சியாகக் கதை சொல்லும் முறையில் வரையப்பட்டுள்ள *மகாவிகாரை எல்லையைக்குறித்தல்” எனும் ஓவியமும் ”ஸ்ரீ மகா போதியை (அரசமரக் கிளையை) நடுதல்” எனும் ஓவியமும் உயரிய இரு படைப்புக்களாகும். தேவனம்பியதீசன் மன்னர் மகிந்த தேரரைச் சந்தித்தல் எனும் ஓவியத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஓவியம் பெரிதும் கோடுகள் மற்றும் வர்ணங்களாலானது. இது பெரிதும் முதிர்ச்சியைக் காட்டி நிற்கின்றது. இங்கு காணப்படும் யானை உருவங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளதோடு, யானைகளின் இயக்கத்தன்மையும் நன்கு காட்டப்பட்டுள்ளது. ஓவியத்தில் கலப்பையைப் பிடித்திருக்கும் மன்னன் தேவநம்பியதீசன், உருவத்துடன் நீண்ட மணிமகுடமும் ஒளிவட்டமும் சேர்க்கப்பட்டு தெய்வீகத்தன்மை ஏற்றப்பட்டுள்ளது. தேவையற்ற பகுதிகள் எஞ்சியிராதவாறு இந்த ஓவியம் தொகுக்கப்பட்டுள்ளமையும் ஒரு சிறம்பம்சமாகும். அரச மரக்கிளையை நடுதல் எனும் ஓவியத்தில் வான் தளத்தின் ஊடாக வருகை தரும் அறிவொளி பெற்றோர் (ரஹத்துன்) வரிசையும், மன்னன், தனது பரிவாரத்துடன் அரசமரக்கிளையை நடும் விதமும், அவ்வேளை அது வானில் உயர்ந்து நிகழத்தும் அற்புதமும் ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளன.

துட்டகைமுனு – எல்லாளன் போர்
துட்டகைமுனு – எல்லாளன் போர் (மாதிரி)
துட்டகைமுனு அரச குடும்பம் ருவன்வெளிசாயவில் தாது பதித்தல்

இங்கு காட்டப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளுள், ‘துட்டகைமுனு – எல்லாளன் போர்” எனும் ஓவியமும் சிறப்பான ஒன்றாகும். இந்த ஓவியத்தில் கோடுகள் மற்றும் வர்ணங்களின் பயன்பாடு, அதிக முதிர்ச்சிநிலையைக் காட்டுவதில்லை. மனித உருவங்கள் சற்றுப் பெருத்தவையாக, வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தில் துட்டகைமுனு மன்னனின் ‘கண்டுல’ எனும் யானை வெள்ளைநிறத்திலும் எல்லாள மன்னனின் பப்பத்த’ எனும் யானை கறுப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன. துட்டகைமுனுவின் கொடியில் சிங்க இலட்சினை காட்டப்பட்டுள்ளதோடு, எல்லாள மன்னனின் கொடியில் நீளப்பாடான கோடுகள் மாத்திரம் காட்டப்பட்டுள்ளன.

இங்கு காணப்படும் வரலாற்று ஓவியங்களுள் துட்டகைமுனு அரச குடும்பத்தைக் காட்டும் ஓவியமும் சிறப்பான ஒன்றாகும். இந்த ஓவியத்தின் துட்டகைமுனு மன்னன், அரசி, இரண்டு பிள்ளைகள் ஆகியோருடன் மற்றுமொருவரின் உருவமும் இடம்பெற்றுள்ளது. அவ்வுருவம் சத்தாதிஸ்ஸ குமாரனைக் குறிப்பதாகக் கருதலாம். மன்னன், மணிமுடி மற்றும் தங்கநகைகள் அணிந்திருப்பதோடு, அரசி மலைநாட்டுப் பெண்களின் உடைகளை அணிந்துள்ளார்.

இக்குகை ஓவியங்களாக வெஸ்ஸந்தர ஜாதகம், தேமிய ஜாதகம், உம்மக்க ஜாதகம் ஆகியன ஜாதகக் கதைகள் பயன்படுத்தப்பட்டதாக 1855 இன் நிலகம செய்தி ஏட்டிலும் 18 ஆம் நூற்றாண்டில் யாகங்களுக்காகப் பயன்படுத்திய ஒரு கவிதை நூலாகிய ”தம்புள்ளை சாந்தியிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. இவை தற்காலத்தில் காணப்படாத போதிலும் ”ருவன்வெலி சாயவில் தாது பதித்தல்’ எனும் ஓவியத்தில் வெஸ்ஸந்தர ஜாதகம். தேமீய ஜாதகம், உம்மக்க ஜாதகம் ஆகியவற்றின் பகுதிகள், தாது கர்ப்பக் கிரகத்தில் வரையப்பட்டுள்ளமைக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்தார்த்த குமாரன் வாழ்க்கையின் முக்கிய கட்டங்கள்

மகாராஜ குகை விதான ஓவியங்களுள், சித்தார்த்தர் வாழ்க்கையின் முக்கியமான கட்டடங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றுள், சித்தார்த்த குமாரனின் பிறப்பு, இல்லற வாழ்க்கைத் துறந்து செல்லல் ஆகிய ஓவியங்கள் முக்கியமானவையாகும்.

கல்விகற்றல்
தலைமுடி நீக்கல்
இல்லற வாழ்வைத் துறத்தல்
புத்தபெருமானின் வாழ்க்கையின் முக்கிய கட்டங்கள்

புத்தத்துவம் கிடைத்தல், மரணித்தல், தகனஞ் செய்தல், தாது பரப்புதல், முதலாவது தரும போதனை ஆகியன புத்தர் பெருமானின் வாழ்க்கையில் நிகழ்வுகளைக் காட்டும் முக்கியமமான சில ஓவியங்களாகும். அவற்றுள் விதானத்தில் காணப்படும் ‘மாரனைத் தோற்கடித்தல்’ (மார பராஜய) எனும் ஓவியம் தனிச்சிறப்பான ஒரு படைப்பாகும். ஒரு பெருந்தொகுப்பு ஓவியமாகிய இது, விதானத்தளத்தில் ஒரு பெரிய பிரதேசத்தை உள்ளடக்கி வரையப்பட்டுள்ளது. ஓவியத்தின் நடுப்பகுதியில் பெரிதாக வரையப்பட்டுள்ள புத்தர் பெருமானின் உருவம் பூமி ஸ்பரிசு முத்திரையுடன் அமர்ந்த நிலையில் இருப்பது காட்டப்பட்டுள்ளது. புத்தர் பெருமானின் உருவத்தைச் சூழ தீச்சுடர் அலங்காரத்தின் மூலம் வட்ட வடிவ ஒளி வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தர் பெருமானின் உருவத்துக்கு மேலே அரசமரம் (போதி விருட்சம்) காட்டப்பட்டுள்ளது.

‘மாரனைத் தோற்கடித்தல்’ (மார பராஜய)
மாறனைத் தோற்கடிக்கும் ஓவியத் தொகுதி
மாறனைத் தோற்கடிக்கும் ஓவியத் தொகுதி

புத்தர் பெருமான் புத்தத்துவம் பெறுவதைத் தடுப்பதற்கான தேவ மாரபுத்திரனும் அவனது பரிவாரத்தினரும் முயற்சிசெய்வதை இந்த ஓவியம் காட்டுகின்றது. பாம்புகளால் சுருட்டிப்பிடிக்கப்பட்ட, வெவ்வேறு பயங்கரமான வேடந்தாங்கிய மாரனின் சேனை, பல்வேறு வகையான ஆயுதங்களைக் கையிலேந்தி வெவ்வேறு உடல்நிலைகளுடன் இருப்பது சித்திரிக்கப்பட்டுள்ளது. தெகல்தொறுவை விகாரையில் போன்றே ஒரு புறத்தில் தேவ மாரபுத்திரனை ஆறு தந்தங்களைக் காலடியில் சரிந்து வீழும் மாரன் காட்டப்பட்டுள்ளது. வஜ்ராசனத்தின் அடிவாரத்தில் பூமிமாதாவின் உருவமும் காட்டப்பட்டுள்ளது.

புத்தத்துவம் கிடத்தல் புத்தர் பெருமானின் ‘ஏழு வாரங்கள்’ எனும் ஓவியமும் இவற்றுள் சிறப்பானது. இந்த ஓவியங்களுள், ‘பரிநிர்வாணம்’ எனும் ஓவியம், அதிக கலைத்துவம் பொருந்திய ஒரு ஓவியமாகும். புத்தர் பெருமானின் ‘சிறப்பு’ குறித்து இயற்கையும்கூட அதிர்ச்சியடைந்தது என்பதைக் குறிப்பதற்காக, வரையப்பட்டுள்ள இரண்டு மரங்களும் ஒரு வில்வளைவு போன்று புத்தரின் உடலை நோக்கி வளைந்திருப்பது போன்று காட்டப்பட்டமை ஓவியத்தின் திறமையைக் காட்டி நிற்கின்றது.

error: Content is protected !!