தாவர (உத்பித) வகையைச் சேர்ந்த அலங்கார வடிவங்கள்

  • மரம், மலர்கள், கொடிகள், இலைகள் என்பவற்றை உபயோகித்து ஆக்கபூர்வமாக உருவாக்கப்பட்ட அலங்காரக் காட்டுருக்கள் தாவர வகையை சேர்ந்தவை ஆகும்.
  • தாவர வகையைச் சேர்ந்த அலங்காரக் காட்டுருக்கள் இயற்கை (ஸ்வபாவிக), பகுதிக் கற்பனை (கல்பித ) வடிவங்கள் என இருவகைப்படும்.
  • இயற்கை வகையைச் சேர்ந்தது சப்புமலர், தாழம்பூ ஆகிய உவருங்களைக் குறிப்பிடலம்.
  • பகுதிக் கற்பனை வடிவங்கள் அரை இயற்கை வடிவங்கள் உடையவை. உதாரணமாக கடுப்புல்மலர், சீன மலர், பரசத்து மலர், கத்திரிமலர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
  • விகாரை ஓவியங்கள், கல் செதுக்கல்கள், மரச் செதுக்கல்கள் போன்றவற்றில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.
  • தலதா மாளிகை, கங்காரம் விகாரை, தெகல்தொரு விகாரை போன்ற புனிதத் தலங்களிலும் கண்டிக்கால பல விகாரைச் சுவர் ஓவியங்களிலும் இவ் அலங்கார உருக்களைக் காணலாம்.
  • எம்பக்கே தேவாலயத்தின் மரச் சிற்பங்களிலும் இவற்றைக் காணலாம்.
  • சுவர் ஓவியங்களின் இடைவெளிகளை நிரப்பி அலங்கரிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

அன்னாசி மலர்

  • அன்னாசி மலரின் வடிவத்தைக் கொண்ட போதும் இலைகள் அவ்வடிவத்தைக் கொள்ளவில்லை. கொடி போன்ற சுபாவத்தைக் கொண்டது. உபயோகப்படுத்தும் இடப்பாடுகளுக்கேற்ப இலைகளின் வடிவம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தாமரைப்பூ

  • தாமரை மலர் அலங்காரங்கள் நூற்றுக்கணக்கானவை உள்ளன.
  • இவை வட்டத்தினுள்ளேயே வரையப்பட்டுள்ளன.
  • வட்டவடிவமான அமைப்புக்குள் பல வடிவமைப்பு இதழ்களை கொண்ட தாமரை மலர் அலங்காரங்கள் அதிகளவில் உள்ளன.
  • கேத்திரகணித உருவங்களை உள்ளடக்கி நிர்மாணிக்கப் பட்டுள்ள தாமரை மலரின் இதழ்கள் பெரும்பாலும் இரட்டை எண்ணிக்கை கொள்ளும். (4, 8, 16)
  • விகாரை சுவரோவியங்களில் இடைவெளிகளை நிரப்புவதற்காகவும் விகாரைப்பாவு (உட்கூரை) அலங்கரிப்புக்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சண்பகப் பூ / செண்பகப் பூ (சப்புமல் )

  • இயற்கையான சண்பகப் பூவுக்கு ஒத்ததாக நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
  • கண்டிக்கால விகாரைச் சுவர் ஓவியங்களில் இடைவெளிகளை நிரப்பப் பெரும்பாலும் உபயோகிக்கப் பட்டுள்ளது.
  • இயற்கையான தாவர வகை (உத்பீத) அலங்காரமாகும்.

தாளம் பூ

  • இது எளிமையான கோடுகளாலான ஒரு வடிவமைப்பாகும்.
  • இயற்கைக்கு அண்மித்த அலங்கார அலகாகும்.
  • ஆனால் முழுமையான இயற்கை அமைப்பு அல்ல.

கடுபுள் மலர்

  • பாளி மொழியில் ‘குமுதுப்பலா’ எனவும் சிங்கள மொழியில் ‘திவமகனெல்’ எனவும் அழைக்கப்படுகின்றது.
  • நாகலோகத்தைச் சேர்ந்த ஒரு மலராகக் கருதப்படுகின்றது.
  • மலர் அரும்பு, கொடியிலை, அரும்பு , கீலம் (பதுறு) போன்ற வடிவங்களைக் கொண்டது.

சீன மலர்

  • சிங்கள அலங்காரக் காட்டுருவின் அடிப்படை பயிற்சி வடிவமான அகத்திக்கருக்கு வக்கதெக ளியபத ஆகிய வற்றுக்கு செல்வாக்கைப் பெற்று வரையப்பட்டுள்ளதாகக் கருதப்பட்டுள்ளது.
  • தம்புள்ளை விகாரையில் சீன மலர் வடிவமைப்புக்கள் பலவற்றைக் காணலாம்.

மல்லிகைப்பூ

  • மல்லிகைப் பூவின் இயற்கையான வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு அரைக் கற்பனை இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
  • மல்லிகைப் பூ மேன்மையான ஒரு மலராகக் கருதப்படுவதால் தெய்வ உருவங்களின் பின்னணியை அலங்கரிக்க உபயோகப்படுத்தியுள்ளது.
  • அதிகமான விகாரைகளில் தூரிகையை மட்டும் உபயோகித்து கறுப்பு நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் இம்மலரை வரைந்துள்ளனர்.

கத்திரி மலர்

  • மலரும் நிலையிலுள்ள ஆறு இதழ்களைக் கொண்டது.
  • புள்ளடி மலர் எனவும் அழைக்கப்படும்.
  • நடுவே உள்ள இதழ்கள் கத்திரிபோன்று அதாவது புள்ளடி போன்று அமைந்துள்ளது. மலரின் மத்தியில் கரிணிகா அமைப்பைக் கொண்டுள்ளது.
  • அன்னாசி மலரை ஒத்ததாகவும் காணப்படுகின்றது. எனினும் இது அன்னாசி மலர் போன்று முழுமையாக மலர்ந்த மலர் அல்ல.

பினர மலர்

  •  “பினர” என்பது தாழ்நிலப் பிரதேசங்களில் “கினிகிரியா” எனப் பெயர் பெறும்.
  • காடுகளில் காணப்படும் இது நான்கு இதழ்களைக் கொண்டது.

பலாப்பெத்தி / பல்வேறு தாமரை இதழ் அலங்காரம்

  • இந்த அலங்கார வடிவமைப்பு, தாமரை இதழ்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
  • ஓரத்தை அதாவது விளிம்பை அலங்கரிப்பதற்காகவே இது பொதுவாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
  • அதிகளவிலான பலாப்பெத்தி வடிவங்கள் இருக்கிற போதிலும் பிரயோகிக்கும் இடம், பாவனைப் பொருளின் வடிவம் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான வடிவமைப்பு தயாரித்துக் கொள்ளப்படும்.

பூங்கொடி அலங்காரம்

  • பூ, இலை, பிஞ்சு, கொழுகொம்பு ஆகியவற்றைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது.
  • தனிக்கொடி, இருகொடி, சிறிய கொடி, பெரியகொடி, எளிமையான கொடி, சிக்கலான கொடி என இவ்வடிவமைப்புப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • சுழி வலையின் செல்வாக்கைப் பெற்று உருவாக்கப்பட்ட ஒரு வடிவமைபெனக் காணலாம். இவ்வாறான ஆயிரக் கணக்கான வடிவமைப்புக்கள் உள்ளன.
  • தளவடிவங்களுக்குப் பொருத்தமானவாறு சுயாதீனமாக கொடி அலங்காரம் ஆக்கப் பட்டுள்ளது.

பயிற்சி வினாக்கள்

1. மேற்தரப்பட்டுள்ள தாவர (உத்பித) வகையைச் சேர்ந்த அலங்கார வடிவங்களை வரைந்து சிற்றேடு ஒன்றை ஆக்குங்கள்.

error: Content is protected !!