தூபாராம தாதுகோபம்

தொல்பொருளியல் சான்றுகளின்படி தற்போது இலங்கையில் உள்ள மிகப்பண்டைய தாதுகோபமாக தூபாராம தாதுகோபத்தைக் குறிப்பிடலாம். அனுராதபுரக் கால கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாதுகோபம் தேவானம்பியதீசன் (கி.மு. 307-267) மன்னனால் கட்டுவிக்கப்பட்டதாகும். இத்தாதுகோபத்தில் புத்தர் பெருமானின் வலது காறையென்புத் தாது அடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது எட்டுப் புனிதத்தலங்களுள் அடங்கும் முக்கியமான ஒரு தலமாகும்.

தூபியும், அத்தூபியுடன்கூடிய விகாரை (ஆராமை)யும் கூட்டாக அமைந்துள்ளமையால் இத்தாதுகோபம் ‘தூபாராமய’ என வழங்கப்படுகின்றது. இத்தாதுகோபம் துரிதமாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும் எனவும், அதனை அமைப்பதற்காக, அருகில் அமைந்துள்ள அபய குளத்திலிருந்து உலர் சேறு பெறப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. (இலங்கைப் பல்கலைக்கழக, இலங்கை வரலாறு ப. 249) இதற்கமைய ஆரம்பக் கட்டுமானம் சுட்ட கல்லினால் செய்யப்படவில்லை எனவும் அது சாஞ்சி தாதுகோபுரத்தின் மாதிரிக்கு அமைய நிர்மாணிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிகிறது. வெவ்வேறு காலப்பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்களால் செய்விக்கப்பட்ட புனர்நிர்மாணிப்பு மற்றும் பல்வேறு கட்டுமான நடவடிக்கைகள் காரணமாக, ஆரம்பத்தில் காணப்பட்ட தன்மையும் வடிவமும் மாற்றங்களுக்கு உள்ளாகி மாற்றமடைந்து உள்ளமையை இனங்காண முடிகின்றது. இத்தாதுகோபத்தில் ஆரம்பவடிவம், நெற்குவியல் போன்றது; பல்வேறு மறுசீரமைப்புக்களின் பின்னர் அம்மாதிரியுரு மாற்றமடைந்து தற்போது மணி வடிவமாகக் காணப்படுகின்றது. மேலும், தற்போது தாதுகோபத்தின் விட்டம் 164.5 அடி ஆகும். வட்டவடிவ மேடையொன்றின் மீது நிலமட்டத்திலிருந்து 11.4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தாதுகோபத்தின் தற்போதைய உயரம் 63 அடியும் விட்டம் 59 அடியும் ஆகும்.

முதலாவது வரலாற்றுத் தாதுகோபம் தூபாராம ஆவதோடு, தாதுகோபத்தைச் சுற்றிவர அமைந்த வட்டதாகே அமைவதையும் முதன் முதலாக தூபாராம இலேயே இனங்காண முடிகின்றது. தாதுகேபாபத்தின் பாதுகாப்புக்காக, முதன்முதலாக வசபன் மன்னரால் (கி.பி. 67-111) மரத்தினால் ஒரு மறைப்பு நிர்மாணிக்கப்பட்டதாக மகாவம்சத்தில் பதிவாகியுள்ளது. கோட்டாபய மன்னனினால் (கி.பி. 249-262) அது புனரமைப்புச் செய்யப்பட்டதாக பரணவிதான கூறுகின்றார். செதுக்கு வேலைப்பாடு களைக் கொண்ட கற்றூண்கள் மாத்திரமே அந்த வட்டதாகேயில் தற்போது காணப்படுகின்றது.

தாதுகோபத்தின் தாகோபத்திட்டம்
அலங்காரங்கொண்ட தூண தலைகள்
error: Content is protected !!