தெகல்தொறுவ ரஜ மகா விகாரை

  • தெகல்தொறுவ ரஜ மகா விகாரையானது குகை விகாரை வகையைச் சேர்ந்த கண்டியர் காலத்து ஓவியங்கள் காணப்படும் சிறப்பான ஓர் இடம் ஆகும்.
  • கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் (கி.பி. 1747 – 1782) இவ்விகாரையைக் கட்டுவித்தான்.
  • கலைஞர் தெவரகம்பல சில்வத்தன இங்கு ஓவியங்களை வரைந்தார்.
  • கொஸ்வத்தே சித்தர நைதேயும் , நீலகம் பட்ட பெந்தியும் இவருக்கு உதவியதாக வரலாற்றிற் கூறப்பட்டடுள்ளது.
  • கர்ப்பக்கிரகத்தினுள் நுழையும் வாயிலின் இரு புறத்திலும் உள்ள பட்டிகளில் வெஸ்ஸந்தர ஜாதகக் கதையும், சுத்தசோம ஜாதகக் கதையும் வரையப்பட்டுள்ளன.
  • விசேடமாக வெஸ்ஸந்தர ஜாதக கதையிலுள்ள யானைகள் தானம் பண்ணுவதைக் காட்டும் ஓவியம் மிகச் சிறப்பான ஒரு படைப்பாகக் கருதப்படுகிறது. யானைகளின் இயல்பாக அசைவுகளும், சந்தமும் காணப்படுவதே அதற்கான காரணமாகும்.
  • தெகல் தொறுவ ஓவியப் படைப்புக்களில் காணப்படும் சிறப்பியல்புகள்
  • பட்டிகளில் (வரிசை) கதைத் தொடர்ச்சியாக சித்தரித்தலும், பக்கத் தோற்ற உருவங்களும்.
  • இருபரிமாண இயல்புகளுடன் தட்டை வர்ணப் பயன்பாடும், பின்னணிக்காக இருண்ட சிவப்பு நிறப் பயன்பாடும்.
  • மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு, வெள்ளை போன்ற நிறங்களின் பயன்பாடு.
  • டெம்பரா பிரெஸ்கோ நுட்பமுறை.
  • உருவங்களைச் சூழ நிறைவைக் காட்டுவதற்குரிய சிறப்பான நுணுக்கமான கோடுகள் இடப்பட்டுள்ளன.
  • பின்னணி வெளிகளை நிரப்புவதற்காக வெவ்வேறு அலங்கார வடிவமைப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை.
  • ஒட்டுமொத்த படைப்பாக்கத்தில், அளவுத்திட்டம், தூரக்காட்சி விதிமுறைகள் கவனத்திற் கொள்ளப்படாமை.
  • இவ் விகாரையின் விதானத்தில் வரையப்பட்டுள்ள “மாற பராஜய” (மாறனைத் தோற்கடித்தல்) ஓவியமானது சிறப்பான சமூக வெளிப்பாட்டைக் கொண்ட ஒரு படைப்பாகக் கருதப்படுகின்றது.
  • மாறனைத் தோற்கடித்தல் ஓவியத்தில் கையில் துவக்கு ஏந்திய மாறனின் தரப்பினர் வரையப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் இந்த ஓவியத்தில் ஓவியம் வரையப்பட்ட சமகால அனுபவங்களையும், பொருள்களையும் சித்தரிப்பதற்காக கலைஞன் எடுத்துள்ள முயற்சியை இனங்காண முடிகின்றது.
பயிற்சி வினாக்கள்

1. தெகல் தொறுவ விகாரை ஓவியங்கள் எந்த காலத்துக்குரிய ஓவியப் பண்புகளை வெளிப்படுத்துகிறது?
2. எந்த மன்னன் காலத்தில் தெகல் தொறுவ விகாரை கட்டப்பட்டது?
3. தெகல் தொறுவ விகாரை சுவரோவியங்களின் பிரதான கருப்பொருள்கள் எவை?
4. இவ்விகாரையில் வரையப்பட்டிருக்கும் ஜாதகக் கதைகள் எவை?
5. மாறாயுத்தம் எனும் ஓவியத்தில் மாறனது படைகள் வைத்திருக்கும் நவீன ஆயுதம் யாது?
6. வெஸ்ஸந்தர ஜாதகம் எனும் நிகழ்வில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சம்பவம் யாது?
7. தெகல் தொறுவ ரஜமாகாவிகாரையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கண்டிய கால பண்புகள் 3 தருக.

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. தொனிப்பொருள் : .………………………………………………
2. ஒழுங்கமைப்பு : .………………………………………………….
3. வர்ணமும் இரேகையும் : .…………………………………..
4. பாணி / மரபு : .……………………………………………………….
5. நுட்பத்திறன் : ………………………………………………………………

error: Content is protected !!