தைப்பொங்கல் விழா

  • தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களின் முக்கியமான ஒரு சமயப் பண்டிகையாகும்.
  • தமிழ் வருடத்தின் முதலாவது மாதம் தை ஆகும். தை மாதம் முதலாந்திகதி தைப்பொங்கல் கொண்டாடப்படும். இது ஆங்கில வருடத்தின்படி பொதுவாக சனவரி 14 அல்லது 15 திகதி இடம்பெறும்.
  • புத்தரிசியை புதுப்பானையில் இட்டு பாலூற்றிப் பொங்கச் செய்வதே பொங்கல் எனப்படுகிறது.
  • பண்டிகைக்கு முன்னர் வீட்டுத்தரை சுத்திகரிக்கப்பட்டு மாட்டுச் சாணம் கொண்டு மெழுகப்படும்.
  • அதன் மீது மஞ்சட் பொடி, அரிசி மாவு போன்றவற்றால் மாக்கோலங்கள் அமைக்கப்படும்.
  • கரும்பு, வாழைமரம் , குருத்தோலை, மாவிலை, இஞ்சி இலை, மஞ்சல் இலை என்பவற்றினால் வீட்டு வாயிலும், பொங்கல் பானையும் அலங்கரிக்கப்படும்.
  • அக்கோலத்தின் மீது அடுப்பு மூட்டி பொங்கல் தயாரித்துப் படைக்கப்படும்.
  • அக்கோலங்களின் மத்தியில் பூரண கும்பம் வைத்து குத்து விளக்கேற்றி பால்சோறு ஃ பொங்கல் தயாரித்து, சூரியோதய வேளையில் பால், கரும்பு, கருப்பட்டி, பழங்கள், நெல் என்பன சேர்த்து சூரிய பகவானுக்குப் படைக்கப்படும்.

பயிற்சி வினாக்கள்

1. தமிழ் மக்கள் தை மாதம் கொண்டாடும் விழா எது?
2. விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கொண்டாடப்படும் விழா எவ்வாறு அழைக்கப்படும்?
3. பொங்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களைக் கூறுக?
4. தைப்பொங்கல் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை எழுதுக?
5. விழாவை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களை கூறுக?

error: Content is protected !!