நிஸ்ஸங்க லதா மண்டபம்

  • இலங்கைக் கட்டட நிர்மாணத் துறையின் உன்னத படைப்பெனக் கொள்ளப்படும் இது கி.பி. 12 ஆம் நூற்றாண்டு (கி.பி. 1187-1196) காலப் பகுதிக்குரியது.
  • பொலநறுவையை ஆட்சி செய்த நிசங்கமல்ல எனும் அரசனால் கட்டுவிக்கப்பட்டது.
  • இம்மண்டபம் செவ்வக வடிவமுடையது.
  • அனுராதபுர ஜேதவனாராமயக்கு அருகில் உள்ள நிர்மாணங்களுக்கு ஒத்ததாக சுற்றிவர கற்கிராதி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
  • இம்மண்டபத்தின் மத்தியில் நீர்குமிழி வடிவ சிறிய தாதுகோபம் ஒன்றும் அதற்கு நுழைவதற்காக ஒரு வாயிலும் காணப்படுகிறது. தாதுகோபத்தின் அடியில், அமர்ந்து வணங்கும் மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
  • அலங்காரத் தூண்களே இக்கட்டடத்தின் சிறப்பான நிர்மாணங்களாகின்றன. ஒரு கற்றூண் 7 அடி உயரமுடையது.
  • இத்தூண்கள் அதுவரையில் காணப்பட்டவாறாக செங்குத்தாக அல்லாமல் இயற்கை யிலுள்ள வடிவங்களைக் கொண்டு லயத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
  • தாமரைத் தாவரத்தின் பண்புகளைச் சந்தத்திற்காக பயன்படுத்தி இத்தூண்கள் நிர்மாணிக் கப்படுகின்றது.
  • தூண்களின் உச்சி பாதி மலர்ந்த தாமரை மலரின் சுபாவத்தைக் காட்டுகிறது.
  • இலங்கை கட்டட நிர்மாணத் துறையின் உன்னத படைப்பாகக் கொள்ளப்படும் இது நிசங்கமல்ல அரசன் தர்ம போதனையை செவிமடுக்கவும், புனித தந்தத்தை வழிபடவும், பிரித் செவிமடுக்கவும் என சமயத் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள்

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

1. இக்கட்டடக்கலை அமைப்பு ………………………………………. யுகத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
2. இது ………………………………………. என அழைக்கப்படும்.
3. இது ………………………………………………. மன்னனின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
4. இங்கு தூண்களின் நிர்மாணிப்புக்காக ………………………………………… வடிவம் மாதிரியாகக் கொள்ளப்பட்டுள்ளது.
5. இது ………………………………………… நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.

error: Content is protected !!