மேம்படுத்தலில் உள்ளது!!!

நிறைகுடம்

நிறைகுடமானது, நிரம்பிய குடம், நிரம்பிய பாத்திரம் எனும் அர்த்தத்தைத் தரும் வகையில், பூரண குடம், பூரண கும்பம், அமர்ந்த குடம் எனும் பெயர்களாலும் வழங்கப்படுகிறது. பண்டைக்காலம் முதல் செழிப்பு, சௌபாக்கியம் ஆகியவற்றின் குறியீட்டு ரீதயிரன உருவமாகவும் வடிவமாமகவும் நிறைகுடம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சுபக் குறியீடுகளாகிய எட்டு வகை மங்கலப் பொருள்களும் ஒன்றாகவும் நிறைகுடம் இனங்காணப்படுகிறது.

புத்தர் பெருமானினது பாதச் சுவடுகளிலும் நிறைகுடம் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். மேலும் சுதேச கட்டடக் கலையில் நுழைவாயில் அங்கங்களுள் கட்டாயமான ஒன்றாகவும் இது அமைந்துள்ளது.

நிறைகுடமானது, முழுப்புடைப்பு வடிவத்தில் நுழைவாயில் அங்கமாக இடம்பெறமுன்னர் அனுராதபுர, ஆரம்ப காலம் முதல் கட்டங்களின் வெவ்வேறு நுழைவாயில் அங்கங்களில் செதுக்கு வேலைப்பாடாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதற்கமைய ஆயக்க (வாகல்கட), தூண்(தம்பம்). காவற்கல் போன்ற அங்கங்களில் உட்புற அலங்கரிப்பு அலகாக நிறைகுடம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, காவற்கல்லினது வளர்ச்சியில் மூன்றாவது கட்டத்தில் அதன் உட்புற அலங்கரிப்பு அலகாக நிறைகுடம் பயன்படுத்தப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. உதாரணமாக அனுராதபுர ஜேதவன விகாரைப் போதிக் கிரகத்தின் (போதிகர) நிறைகுடத்தைக் கொண்ட காவற்கல், அனுராதபுர விஜயாராமையிலிருந்து கிடைத்த தற்போது கொழும்பு தேசிய அரும்பொருளகத்தில் உள்ள நிறைகுடத்தைக் கொண்ட கவாற்கல் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். காவற்கல் ஆக்கத்தின் மிக மேம்பட்ட நிலையிற்கூட, நாகராஜன், நிறைகுடத்தை கையில் தாங்கியிருக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது.

அனுராதபுர அபயகிரிய, ஜேதவனாராமை, தூபாராமை, சோடிக்குளம் (கூட்டம் பொக்குண). நுழைவாயில்களின் இரு புறத்தேயும் கல்லினால் செய்யப்பட்ட பெரிய நிறைகுடங்கள் உள்ளன. அந்நிறை குடங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக அமைக்கப்பட்டுள்ளமையையும் காண முடிகின்றது. பொதுவாக இவ்வாறான நிறைகுடங்கள், உயரமாக அமைக்கப்பட்ட தவாளிப்புக்களைக் கொண்ட பாதத்தின் அடியின் மீது காணப்படுகின்றமை ஒரு சிறப்பியல்பாகும். அநுராதபுரத்தில் கிடைத்த நிறைகுடங்களுள் மிகச் சிறந்த நிறையைக்கொண்ட நிறைகுடமாக அனுராதபுர சோடிக்குள நிறைகுடத்தைக் குறிப்பிடலாம். தூணொன்றில் அமைந்துள்ள இந்நிறைகுடத்தில் மலர்ந்த தாமரைப் பூவொன்றின் மீது மொட்டுக்கள், குடத்திலிருந்து பரம்பிச்செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அனுராதபுர தூபாராமை விகாரையில் நிறைகுடமானது தனிச்சிறப்பான ஓர் ஆக்கமாகும். எட்டு இதழ்களைக்கொண்ட தாமரைப் பூப்பாதமொன்றில் அதன் வாயிலிருந்து வெளியே பரம்பிய பாரிய தாமரைப்பூவொன்று காட்டப்பட்டுள்ளது. நிறைகுடத்தின் கழுத்தைச் சூழ கீழ்ப்பகுதி தட்டையாக அமைக்கப்பட்டுள்ளது.

நிறைகுடம் இதற்கமைய நுழைவாயில்களின் இருபுறங்களிலும் குளியல் தடாகங்களுக்கு அருகிலும் நிறைகுடங்களை அமைத்தல் ஒரு கட்டாயமாமன அம்சமாகக் காணப்படுகின்றது. கண்டி மரபுச் சுவரோவியங்களில் கற்பக தரு, கற்பகக்கொடி ஆகியவற்றைக் காட்டுவதற்காகவும் நிறைகுடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பூமி மாதாவைக் குறிப்பதற்காகவும் நிறைகுடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போதும் கூட, பல்வேறு உற்சவங்களின்போது முழுப்புடைப்பாகவும் அரைப்புடைப்பாகவும் மங்கலக் குறியீடாகவும் இது பயன்படுத்தப்படுகின்றது. அண்மைக் காலமாக பல்வேறு உற்சவங்களில் காகிதத்தாள், குருத்தோலை, அரிமாப் போன்ற மூலப்பொருள்களைக் கொண்டும் நிறைகுடம் ஆக்கப்படுவதைக் காணமுடிகின்றது.

error: Content is protected !!