பன்குளிய புத்தர்சிலை

  • அனுராதபுர யுகத்தைச் சேர்ந்த இப்புத்தர்சிலை தர்ம போதனை செய்வதைக் காட்டும் ஒரு சிறப்பாகும்.
  • இப்புத்தர் சிலை அனுராதபுர பன்குளிய எனும் கிராமத்தில் அமைந்துள்ள அசோக்காராமய விகாரையில் உள்ளது.
  • இது ஒரு கற்சிலையாகும்.
  • வீராசன முறையில் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ள இச்சிலை முழுப்புடைப்பாக ஆக்கப்பட்டுள்ளது.
  • வலது கையினால் விதர்க்க முத்திரையும் இடது கையினால் கடகஹஸ்த’ முத்திரையும் காட்டப்பட்டுள்ளதெனக் கருதப்படுகின்றது.
  • பெரிய நீண்ட காதுகள், பாதி மூடிய கண்கள், சாந்த குணம் போன்றவை இச்சிலையின் சிறப்பியல்புகளாகும்.
  • புத்தரின் பெருங்கருணையுடன் கூடிய ஆன்மீனப்பண்பு இச்சிலையில் காட்டப்பட்டுள்ளது.
  • உடலின் ஒருபக்கத்தை மாத்திரம் மறைக்கும் காவியுடை மடிப்புக்களற்று உடலுடன் ஒட்டியவாறு அமைந்துள்ளது.
  • நத்தைச் சுருள் அமைப்புடைய கேசம், உச்சியில் ‘உஷ்ணிசய’ எனும் உச்சிக் குடுமி இடப்பட்டிருக்கின்றது.
  • இதன் மீது ‘தலையணி அமைப்பு இருந்துள்ளதற்கு சான்றுகள் உள்ளதாக விமர்சகர்கள் கருத்து வெளிப்படுத்துகின்றனர்.
  • கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இப்புத்தர்சிலை குப்தர் கலைப்பாணியின் இயல்புகளைக் கொண்டுள்ளது என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.
பயிற்சி வினாக்கள்

1. இனங்காண்க : ………………………………..
2. காலம்/யுகம் : ………………………………….
3. கலை மரபு : ………………………………………
4. ஊடகம் : …………………………………………….
5. நுட்பமுறை : ……………………………………
6. முத்திரை : ………………………………………..
7. ஆசன முறையும் : ………………………..
8. தலையணி : ……………………………………..
9. காவியுடை : ……………………………………..
10. உணர்வு வெளிப்பாடு : ………………

error: Content is protected !!