பப்லோ பிக்காசோ (1881-1973)

  • ஐரோப்பிய சித்திரக் கலையில் கனவடிவுவாதப் போக்கை அறிமுகஞ் செய்த முதன்மையான சித்திரக் கலைஞராக, பப்லோ பிக்காசோ (Pablo Picasso) திகழ்கின்றார்.
  • இவர் 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பூத்த சித்திரக் கலைஞர்களுள் முதலிடம் பெறுகின்றார்.
  • பப்லோ பிக்காசோவின் தந்தை , ஒரு சித்திர ஆசிரியர் ஆவார். மகன் பிக்காசோவின் சித்திரக்கலை ஆற்றலை இனங்கண்ட அவர், மகனைச் சித்திரக்கலையின்பால் வழிப் படுத்தினார்.
  • பாரிஸ் நகரத்துக்குச் சென்று 1893-1900 வரையில் அங்கு மூத்த கலைஞர்களுடன் கூட்டாகச் செயற்பட்டவாறு சித்திரக்கலை பயின்றமையே பிக்காசோவின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
  • அவ்வாறு சித்திரக் கலை பயின்றதன் விளைவாக அவரது சித்திரக் கலைப் படைப்புக் களின் வெவ்வேறு வரையறைகளைக் காண முடிகின்றது.

♦ நீலக்காலம் (Blue Period – 1901-1904)
♦ இளஞ்சிவப்புக்காலம் (Rose Period – 1905-1906)
♦ கனவடிவவாதக்காலம் (Cubism Period – 1907 இன் பின்னர்)

  • நீலக் காலத்திலும் இளஞ்சிவப்புக் காலத்திலும் பப்லோ பிக்காசோ வரைந்த படைப்புக் களின் கருப்பொருள் இடத்துக்கிடம் சென்று வித்தை காட்டுபவர்கள், வீதி மக்கள், சஞ்சாரம் செய்யும் நடிக நடிகைகள், வறியோர், பிச்சைக்காரர் போன்றோராவர்.
  • நீலக் காலத்தில் நீல நிறத்திலும், இளஞ்சிவப்புக் காலத்தில் இளஞ்சிவப்பு நிற சாயல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சித்திரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மனித உருவங்கள் யதார்த்த பாணியை சார்ந்தவை.
  • ஆபிரிக்க நீக்ரோ சிற்பங்கள் வேட முகங்களின் செல்வாக்கைப் பெற்ற பப்லோ பிக்காசோ, 1906 இன் பின்னர் படைத்த படைப்புக்கள் புதிய பாணியிலான தன்மைகளைக் காட்டி நிற்பவையாகும்.
  • 1906 இன் பின்னர் தோன்றிய படைப்புக்களில் காணப்படும் கேத்திரகணித தளவுருவங் களும், தட்டை வர்ணப் பயன்பாடும், வெளிப்புறத்தே உள்ள கோடுகளைக் கொண்ட உருவங்களும், கனவடிவவாதப் பாரம்பரியத்தின் சிறப்பான படைப்புக்களுள் அடங்கும்.
  • கனவடிவவாதச் சித்திரக் கலையைத் தோற்றுவித்த பிக்காசோவின் சிறப்பான சில படைப்புக்களாக,

♦ அவிக்னோனின் யுவதிகள்
♦ வயலின் இசைப்பவர்
♦ புலம்பும் பெண்
♦ குவார்னிக்கா

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அவிக்னோனின் யுவதிகள் ஓவியம்

  • ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பப்லோ பிக்காசோவினால் 1907 இல் வரையப்பட்ட இந்த ஓவியம் “அவக்னோன் யுவதிகள் ” எனப்படுகிறது.
  • சித்திரக் கலை வரலாற்றில் புதிய நிர்மாணிப்பையும், பாணியையும் கொண்ட புதிய காலத்தை உருவாக்கிய ஆக்கமாகும். ‘அவிக்னோனின் யுவதிகள்’ கனவடிவவாதப் போக்கின் முதலாவது படைப்பாகக் கருதப்படு கின்றது.
  • வேடமுக மற்றும் சிற்பக் கலையின் செல்வாக்குடன் இந்த ஓவியம் படைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரின் அவிக்னோன் எனும் வீதியில் வாழ்ந்த விலை மாதர்களின் வாழ்க்கையே , கலைஞர் பிக்காசோ இந்த ஓவியத்துக்கான கருப்பொருளாகக் கொண்டுள்ளார்.
  • ஐந்து பெண் உருவங்களைக் கொண்ட இப்படைப்பில் உள்ள உருவங்களில் இயற் பண்பை மீறிச் சென்று கனவடிவவாத இயல்புகள் காட்டப்பட்டுள்ளன.
  • உடலின் வெளிப்புற அழகுக்குப் பதிலாக, விலைமாதரின் அகஇயல்புகளை வெளிக் காட்ட முயற்சி செய்யப்பட்டுள்ளது.
  • அதற்காக ஆபிரிக்க வேடமுகங்களின் தன்மையின் செல்வாக்கு பெறப்பட்டு, விலைமாத ரின் உணர்வுகளை அழுத்திக் காட்ட அவற்றின் வெளிப்பாட்டுப் பண்பை பயன்படுத்த பிக்காசோ முயற்சி செய்துள்ளார்.
  • வேடமுகங்களில் உள்ள கோடுகள் பெண்களில் எதிர் நிலைகளையும், உள நிலைகளையும் சிறப்பாக வெளிக்காட்டுவதில் கலைஞர் வெற்றி கண்டுள்ளார்.
  • எல்லையற்ற நிறப்பிரிப்பு, ஆழ்ந்த சித்திரிப்பு ஆகிய ஓவியத்தின் கருத்து வெளிப்பாட்டை முனைப்புறுத்துவனவாக அமைந்துள்ளன.
  • இயல்பான தொலைநோக்கு , முப்பரிமாண இயல்புகள் ஆகியன பயன்படுத்தப்படவில்லை. விடயப்பொருள் சார்ந்த தொலைநோக்கையும், முப்பரிமாண இயல்புகளையும் உள்ளடக்கி இவ் ஓவியம் படைக்கப்பட்டுள்ளது.
  • எண்ணெய் வர்ண ஊடகத்தைப் பயன்படுத்தி கன்வஸ்துணி மீது வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், தற்போது நியுயோர்க் நகரில் நவீன கலைக்கூடத்தில் (Museum of Modern Art) நிரந்தரமான ஒரு கலைக் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

குவார்னிக்கா ஓவியம்

  • 1937 இல் படைக்கப்பட்ட குவர்னிக்கா ஓவியம், முதலாம் உலக மகாயுத்த காலத்தில் குவர்னிக்கா எனும் நகர் மீதான குண்டு வீச்சை அடிப்படையாகக் கொண்ட ஒரு படைப்பாகும்.
  • யுத்தத்தின் அகோரத்தைக் காட்டும் காத்திரமான, சிறப்பான ஒரு படைப்பாக இதனைக் குறிப்பிடலாம்.
  • தனிமை , அவல ஓலம், உரிமையைக் கோரி கோசமிடல், மாண்டோரைக் கட்டி யணைத்தல் போன்ற உணர்வுகள் இந்தப் படைப்பில் நன்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது.
  • ஓவியத்தில் உணர்வுகளைக் காட்டுவதற்காக பிக்காசோ பயன்படுத்தியுள்ள உருவப் பகுதிகளின் இணைப்பு இங்கு சிறப்பிடம் பெறுகின்றது.
  • குதிரை, மாடு மற்றும் ஆண், பெண் உருவப் பகுதிகள், மின்குமிழ் போன்ற சிதைந்த உருவங்களாக திரட்சியாக்கப்பட்டுள்ள விதமும் இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளன.
  • சித்திரத்தின் உருவங்கள் கனவடிவவாத மாதிரிக்கு அமையச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
  • அதனூடாக உருவங்களின் புற உடலழகுக்குப் பதிலாக உள்ளுணர்வுகள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
  • தட்டையான தளத்தின் மீது வெவ்வேறு தளவுருவங்கள், கலைக் கல்லூரி சார்ந்த யதார்த்தவாத முறைப்படி, இயல்பான தூரநோக்கு , முப்பரிமாண இயல்பு ஆகியவற்றை விட வேறுபட்ட விதத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
  • வரையறைப்பட்ட இருண்ட நிறத் தொடரான , நரை, வெள்ளை, கறுப்பு நிறச்சாயங்களைப் பயன்படுத்திச் சித்திரத்தின் ஒரு தனி நிறத்தன்மை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
  • அதியதார்த்தவாத இயல்பு வெளிப்பாடுகளும் இப்படைப்பின் மூலம் காட்டப்படுகின்றது.
  • யுத்த அனுபவங்களைக் கொண்டு பிக்காசோவினால் வரையப்பட்ட 135×275 சென்ரிமீற்றர் அளவுடைய இந்த சிறப்பான கலைப்படைப்பு தற்போது ஸ்பெயின் நாட்டு மட்ரிட் நகர கலைக்கூடமொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள்

1. ஐரோப்பிய சித்திரக் கலையில் கனவடிவுவாதப் போக்கை அறிமுகஞ் செய்த முதன்மையான சித்திரக் கலைஞர் யார்?
2. பப்லோ பிக்காசோவின் கலைப்படைப்புகளை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றது?
3. பிக்காசோவின் கனவடிவவாத படைப்புகளுள் சிறப்பான படைப்புக்கள் இரண்டை தருக.

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. கலைஞர் : .………………………………………
2. கருப்பொருள்; : .……………………………..
3. ஒழுங்கமைப்பு : .…………………………….
4. செல்வாக்கு தொடர்பாக : ……………
5. உணர்வு வெளிப்பாடு : …………………

1. இனங்காண்க : …………………………………
2. கருப்பொருள்; : .……………………………….
3. ஒழுங்கமைப்பு : .……………………………..
4. செல்வாக்கு தொடர்பாக : ……………
5. உணர்வு வெளிப்பாடு : ……………………

error: Content is protected !!