போதி கர (அரச மரத்தைச் சூழ அமைக்கப்பட்ட மனை)

”அரச மரத்துக்காக (போதி மரத்துக்காக) அமைக்கப்பட்ட மனை” எனும் அர்த்தத்திலேயே ‘போதிகர’ எனும் பதப்பிரயோகம் புழக்கத்துக்கு வந்துள்ளது. அரச மரத்தின் (போதி மரத்தின்) கிளைகள் மேல் நோக்கி வளர இடமளிக்கும் வகையில், நடுப்பகுதி திறந்த நிலையில் அரசமரத்தைச் சூழ இம்மனை அமைக்கப்பட்டுள்ளது. அரச மரம் உயிருள்ள ஒன்றாகையாலும் மழை, வெயில், காற்று போன்றவை அதற்குத் தேவையாதலாலும் இவ்வமைப்பு அரச மரத்தைச் சுற்றிவர ஒரு மறைப்பு போன்று அமைக்கப்பட்டு மேற்பகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அரச மரத்துக்குத் தேவையான நீரை விநியோகிக்கும் நீர்க்குழாய் வழிகளும் அதில் அமைக்கப்பட்டுள்ளன.

அரச மரத்தை வழிபடுதலானது பண்டைக் காலமுதலே இந்தியாவில் இருந்துவந்துள்ளது என்பதை சாஞ்சி, பாரூத். மற்றும் அமராவதி செதுக்கு வேலைப்பாடுகள் மூலம் இனங்காண முடிகின்றது. அச்செதுக்கு வேலைப்பாடுகள் மூலம் போதிகர நிர்மாணிப்புக்களின் பண்டைய காலத் தோற்றத்தைக் காண முடிகின்றது.

சாஞ்சி செதுக்கு வேலைப்பாடுகள்
அமராவதி செதுக்கு வேலைப்பாடுகள்
பாரூத் செதுக்கு வேலைப்பாடுகள
பாரூத் செதுக்கு வேலைப்பாடுகள

இலங்கையில் அரச மர வழிபாடானது ஸ்ரீ மகாபோதி விருட்சம் (அரசமரம்) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து ஆரம்பித்தது. அதற்கமைய இலங்கையில் போதிகர நிர்மாணிப்பானது கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ மகாபோதி மரத்துக்காக அமைக்கப்பட்ட மனையிலேயே ஆரம்பித்துள்ளதாகத் தெரிகின்றது. (இலங்கையில் காணப்படும் மிகப் பழைய பண்டைய போதி கர (அரசமர மனை) மகாபோதி மரத்தைச் சூழ அமைத்துள்ள மனையாகும்.

தொல்பொருள் அகழ்வுகள் மூலம் இந்த ‘போதி கர’ இனது இடிபாடுகளாகக் கருதத்தக்க மீதிகள் நில மண்டபத்துக்கு சற்று அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வகழ்வாய்வுகளின் போது போதிகரவானது வெளிப்புற எல்லையில் இருந்த போதி விருட்ச கிராதி வேலியும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பண்டுவஸ்துவர
மகுள் மகா விகாரை
படிகெம்கல

இலங்கையில் தற்போது மிக நல்ல நிலையில் மீதியாகக் காணப்படும் போதிகர” நிர்மாணிப்பு குருணாகல், நில்லக்கம் போதிகர ஆகும். அத்தோடு, குருணாகல் மாவட்டத்தில் குடா கடுகன்னாவை. ஹத்திக்குச்சிய, அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த படிகெம்கலை. சித்துள் பவ்வை, திஸ்ஸமகாராமை, பண்டுவஸ்நுவர ஆகிய இடங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘போதிகர நிர்மாணிப்புக்களும் அவ்வாறாக நல்ல நிலையில் உள்ளன. சில விற்பன்னர்களால் எடுத்துக்காட்டப்பட்ட, ‘ஆசன கர’ எனும் கட்டடக்கலை ஆக்கங்கள், போதிகரய ஆக்கங்களே ஆகும் என தொல்பொருளியல் திணைக்களத்தினால் செய்யப்பட்ட அகழ்வுகளின்போது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. செனரத் திசாநாயக்க கூறுவதற்கிணங்க, ‘போதிகர நிர்மாணிப்பின் மிகப் பண்டைய கட்டத்தில் அங்கு பாரிய பீடங்கள் அமைக்கப்பட்டதோடு பிற்காலத்தில் அதற்குப் பதிலாக புத்தர் சிலைகள் இடப்பட்டுள்ளன. அபயகிரிய விகாரையில் அமைந்துள்ள சமாதி புத்தர்சிலையை இவ்வாறான புத்தர் சிலைகளைக் கொண்ட போதிகர எனக் குறிப்பிடலாம். தொலுவிலையிலும் இவ்வாறான சிற்றளவு போதிகர நிர்மாணிப்புக்கள் காணலாம். இந்த போதிகர நிர்மாணிப்புக்கள் சதுர வடிவத்திலும் வட்டவடிவத்திலும் அமைந்துள்ளமையைக் காணலாம். அடிப்படையில் இந்த போதிகர அமைப்புக்கள், வழிபாட்டுக்குப் பொருத்தமானவாறு திட்டமிடப்பட்டுள்ளன.

குருணாகல் நில்லக்கம போதிகரய

இலங்கையில் உள்ள ‘போதிகர’ நிர்மாணிப்புக்களுள் சகல அம்சங்களதும் மீதிகளை உள்ளடக்கிய ஒரு நினைவுச் சின்னமாக நில்லக்கம ‘போதிகர’ காணப் படுகின்றது. இது கிறிஸ்துவுக்குப் பின் 8 – 9 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்பதை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் பரண வித்தான எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த போதிகர’ சதுரவடிவமான இரண்டு மண்டபங்களைக் கொண்டது. முதலாவது மண்டபத்தைச் சூழ குறு மதிலொன்று உள்ளது. இரண்டாவது மண்டபம் 34 அடிச் சதுர மேடை மீது அமைக்கப்பட்டுள்ளது. அதன் 7 அடி உயரமான மதிலில் யானைத் தலைச் செதுக்கல் வேலைப்பாடுகள் உள்ளன. மேலும் 7 அடி உயரமான மதிலுடன் இணைந்த 16 கல் தூண்கள் உள்ளன. அக்கல் தூண்கள் மீது ஒரு கூரை இருந்ததாக அனுமானிக்கப்படுகின்றது. இரண்டாவது மண்டபத்தினுள் பிரவேசிப்பதற்கு இரண்டு வாயில்கள் உள்ளன. அவ்வாயில்கள் செதுக்கல் வேலைப்பாடுகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. (பஸ்நாயக்க 2001:159) இரண்டாவது மண்டபம் 13 அடி அளவுள்ள சதுர வடிவப் பீடமாகும். அதன் மத்தியிலேயே அரசமரம் நாட்டப்பட்டிருந்தது. அரச மரம் நடப்பட சதுரவடிவ மேடையச் சுற்றிவர சிங்க உருவச் செதுக்கல் வேலைப்பாடுகள் உள்ளன. அத்தோடு அரசமரத்தைச் சுற்றிவர அமைக்கப்பட்ட கல் ஆசனங்களும் உள்ளன.

முதலாம் மண்டபம், இரண்டாம் மண்டபம்
இரண்டாம் மண்டபத்தின் பிரவேச வாயில்
செதுக்கல் வேலைப்பாடுகளைக் கெண்ட கல்லாலான நிலை
இரண்டாம் மண்டபத்தின் மத்தியில் உள்ள 13 அடி உயரமான மேடை அரசமரம் நடப்பட்ட பகுதி
அரச மரம் நடப்பட்டிருந்த மேடையைச் சூழக் காணப்படும் சிங்க உருவங்கள்
error: Content is protected !!