மகியங்கனை தாது கர்ப்பச் சுவரோவியங்கள்

ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள மகியங்கனைத் தாதுகர்ப்பச் சுவர்களிலிருந்து கழன்று துண்டுகளாக உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சில ஓவியப்பகுதிகளே இவையாகும். தாதுகோபக் கரப்பப் கிரகத்தில் காணப்பட்ட மிகப் பண்டைய ஓவியக் கலை தொடர்பாகக் கிடைத்துள்ள எழுத்து மூலச் சாட்சியாக இது அமைகின்றது. தாதுகோபத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவை 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை எனப் பரணவித்தான கூறுகிறார். தாதுகர்ப்பத்திலிருந்து துண்டுகளாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியம் செப்பனிடப்பட்டு சட்டமாகத் தயாரிக்கப்பட்டு, தற்போது அனுராதபுர அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சிகிரியாச் சுவரோவியங்களை நற்காப்புச் செய்த இத்தாலி நாட்டவரான லூசியானோ மரன்சி என்பாரே இந்த ஓவியத்தையும் நற்காப்புச் செய்துள்ளார்.

கலைத்துவத்தைப் பொறுத்தமட்டில் உயரிய இடத்தைப் பெறும் இந்த ஓவியங்கள் பொலனறுவைக் கால ஓவியங்களை ஒத்தவையாயினும், அவற்றை விடப் பழைமையானவை என எஸ். பீ. சார்ள்ஸ் கூறுகிறார். பொலனறுவை ஜாதகக் கதைகளிற் போன்று இந்த ஓவியத்தில் மெல்லிய கோடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தச் சுயாதீனமான கோடுகள், முகத்தின் பகுதிகளை விவரமாக வரைவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோடுகளுக்காகப் பழுப்புக் கல்லின் நிறம் போன்ற சிவப்பு நிறமும் கறுப்பு நிறமும் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஓவியத்துக்கு வர்ணம் தீட்டுவதற்காக பச்சை, செம்மஞ்சள், மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களுள் மூன்று புத்தர் உருவங்கள் உள்ளன. அவற்றுள் ஓர் ஓவியம் பெரிதும் சிதைவடைந்துள்ளது. மற்றைய இரண்டு ஓவியங்களும் புத்தர், போதிவிருட்ச அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. ஏனைய ஓவியப் பகுதிகளில் தெய்வ உருவங்களும் பிக்கு உருவங்களும் உள்ளன. இந்த ஓவியங்களைக் கற்றாய்வதற்காக அவை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இல:1 எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஓவியம் 19 அங்குல அகலமும் 16 அங்குல உயரமுமுடைய ஓர் ஓவியமாகும். போதிவிருட்ச அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் புத்தர் பெருமானைக் காட்டும் இந்த ஓவியத்தில் விருட்சத்தின் கிளைகளில் சண்பக மலர் போன்ற மலர்கள் உள்ளன. போதிவிருட்ச (அரசமர) இலைகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. புத்தர் உருவத்தின் பின்னே செதுக்கு வேலைப்பாட்டைக் கொண்ட வில்வளைவொன்று உள்ளது. தலையைச் சூழ ஒளிவட்டம் உள்ளது. புத்தரின் இரு புறங்களிலும் முகில்களின் மீது அமர்ந்திருக்கும் மீசையுள்ள வயோதிப உருவங்கள் ஒரு கையில் காம்புடன் கூடிய ஒரு பிடி தாமரை மலர்களை வைத்துள்ளதோடு, மற்றைய கையை மேல்நோக்கி உயர்த்தி வைத்திருக்கும் பாங்கு காட்டப்பட்டுள்ளது. தோளுக்குக் குறுக்காகப் பூணூல் காணப்படுகின்றது. தலையின் கேசச் சுருள்கள் காட்சியளிக்கும் வகையில் உச்சியில் காட்டப்பட்டுள்ளன. அவ்வுருவங்கள் பிரம்மா, இந்திரன் உருவங்களாக இனங்காணப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் ரெம்பெரா வகையைச் சேர்ந்தது என பரணவித்தான கூறுகிறார்.

அரச மர அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் புத்தர் உருவமும் அதன் இரு புறங்களும்

இலக்கம் 1 ஓவியமும் இலக்கம் 2 ஓவியப் பகுதியும் மழுக்கிய தலையுடன் காவியுடை போர்த்திய பிக்கு உருவங்களாகும். இந்தக் காவியுடை போர்த்திய உருவங்கள் புத்தரை வழிபடுவது போன்று காட்டப்பட்டுள்ளது. இவை மேல் பிரம்ப லோகத்தில் ‘சுத்தாவாச இல் வாழும் தெய்வங்களின் உருவங்கள் என பரணவித்தான கூறுகின்றார். காவியுடை போர்த்திய ஓர் உருவத்துக்கு மேலே, சிறிய வெண்ணிற வளையத்தினுள் இடது கையில் வாளும் வலதுகையில் கேடயமும் ஏந்திய ஓர் உருவம் உள்ளது. அவ்வுருவம் மாரதேவ புத்திரனைக் குறிக்கிறது என பரணவித்தான கூறுகின்றார். அதற்கமைய போதிசத்துவர் புத்தருருவம் பெற்ற காட்சி இதன் மூலம் காட்டப்படுகிறது என்பது அவரது கருத்தாகும். வாளையும் கேடயத்தையும் ஏந்தி நிற்கும் உருவம் இயக்கர் சேனாதிபதியொருவரின் உருவமாகும் எனக் கூறும் மஞ்சு ஸ்ரீ இது புத்தர் பெருமான மகியங்களை இயக்கர்களைச் சந்தித்த சம்பவத்தைக் குறிப்பதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

காவியுடை போர்த்திய உருவம்
வாழும் கேடயமும் ஏந்திய உருவம்
விஷ்ணு உருவம்
சிவன் உருவம்
வேறு தேவ உருவ ஓவியங்களின் பகுதிகள்

இலக்கம் 3 இல் உள்ள உருவங்கள் தெய்வ உருவங்கள் என இனங்காணப்பட்டுள்ளது. இந்த தெய்வ உருவங்களின் உடல்நிலையானது திவங்க தேவாராதனா ஓவியங்களின் இயல்புகளை ஒத்தவையாகும். ஆடையணிகள் பொலனறுவைக் காலத்தை ஒத்தவையாயினும், சில உருவங்களின் உடலின் கீழ்ப்பகுதியில் முழங்காலுக்கு மேலாக இருக்குமாறு கச்சை அணியப்பட்டுள்ளது. இந்த ஒவ்வோர் உருவத்திலும் மிக அழகாகப் பூர்த்தி செய்யப்பட்ட வெவ்வேறு வடிவமுடைய சிரசு அலங்கரிப்புக்களும் ஆபரணங்களும் அணியப் பட்டுள்ளன. வர்ணக் கோலமானது திவங்கைச் சிலை மனை ஓவியங்களின் வர்ணத்தை ஒத்தது.

இந்தத் தெய்வ உருவங்களில் சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. நான்கு கைகள் உள்ள முன்புறக் கையினால் மலர்த்தட்டும், பின்புறக் கையினால் சங்கும் தாங்கப்பட்டுள்ள உருவம் விஷ்ணு என இனங்காணப்பட்டுள்ளது. சிவ உருவத்தின் விவரங்கள் தெளிவற்றவை. பிரம்மன், இந்திரன், விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வ உருவங்கள் உள்ளன. எனவே, இது புனிதத்துவம் பெற்ற பின்னர், தெய்வங்கள் வருகை தந்து புத்தருக்கு மரியாதை செய்தலே இதன் மூலம் காட்டப்படுவதாகச் சந்திர விக்ரமகே கூறுகின்றார்.

error: Content is protected !!