மைக்கல் ஆஞ்சலோ (1475-1564)

மைக்கல் ஆஞ்சலோ, இத்தாலி நாட்டில், புளோரன்ஸ் நகர, காசல் கப்ரீஸ் எனும் இடத்தில் கி.பி. 1475 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு நகராதிபதியாகவோ பிரதேச நீதிபதியாகவோ இருந்தார் எனக் கருதப்படுகின்றது. மைக்கல் ஆஞ்சலோவினது முழுப்பெயர் மைக்கல் ஆஞ்சலோ தி லொ பவிக்கோ புவோனரொத்தி சயிமொக்கி என்பதாகும். பிரபுக்கள் மற்றும் பூசகர்களின் கீழ் போசிப்புப் பெற்ற இவர் மறுலர்ச்சிக் காலச் கலைஞர்களுள் சிறந்த ஒரு தலைவராவர்.

இத்தாலிய மறுமலர்ச்சிக் கலையின் முன்னோடியான சிற்பக் கலைஞரும் ஓவியக் கலைஞருமான மைக்கல் ஆஞ்சலோ, தம்மை ஒரு சிற்பக்கலைஞர் என்றே அறிமுகஞ் செய்துகொண்டார். அத்தோடு, கட்டடங்கள் திட்டமிடுவதிலும் அவர் தொடர்புபட்டுள்ளதோடு. உரோமாபுரியில் புனித பீற்றர் பசிலிக்கா தேவாலயம் இதற்கான ஒரு நல்ல உதாரணமாகும். மேலும் இவர் 300 இற்கு மேற்பட்ட கவிதைகளை இயற்றியுள்ள ஒரு கவிஞருமாவார். மைக்கல் ஆஞ்சலோ சிறுவனாக இருக்கும் போதே அவரது குடும்பம் புளொரன்ஸ் நகரத்தில் குடியமர்ந்துள்ளது. அது அவரது கலை வாழ்க்கை மீது பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளது. இவர் ஆறு வயதில் தாயை இழந்தார். முதலில் அவர் சன்செசுக்கோ த உரபினோ என்பவரின் கலைப் பாடசாலையில் சேர்ந்தார். பின்னர் வயது 13 ஆண்டுகளாக இருக்கும்போது அதாவது கி.மு. 1488 இல் டொமினிக்கோ கிரால்டியோ எனும் கலைஞரின் கலைநிறுவனத்துடன் இணைந்து அவரின் கீழ் மூன்று வருட காலம் ஓவியக்கலை பயின்றார். பின்னர். அவர் கியோவானி எனும் கலைஞரின் கீழ்ப் பயிற்சி பெற்றார். ஓவியக் கலைக் கல்வியோடு பர்ட்டல்டோ எனும் சிற்பக் கலைஞரின் கலை நிறுவனத்தில் சேர்ந்து சிற்பக்கலையும் பயின்றார்.

மைக்கல் ஆஞ்சலோவினது படைப்பாக்க வாழ்க்கை புளொரன்ஸ், வெனிஸ், உரோமாபுரி போன்ற நகரங்களை மையமாகக்கொண்டு கட்டியெழுப்பப்பட்டது. அவர் பிரபல்யமான ஒரு தனவந்தக் குடும்பமாகிய மெடிவிசி குடும்பத்துக்காகச் சேவையாற்றினார். சிஸ்ரைன் தேவாலயத்திலுள்ள படைப்பாக்கங்கள் அவரது சிற்பக்கலைத்திறமைக்குச் சிறந்ததோர் உதாரணமாகும். மேலும் பாரிய கட்டடங்களோடு இணைந்த கூறுகளாக சிற்பங்கள் செதுக்குவதிலும் அவர் திறமை காட்டினார். அவரது சிறந்த கட்டட நிர்மாணப்படைப்புகளுள், உரோமாபுரியில் வின்கோலில் புனித பீற்றர் தேவாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாம் ஜூலியஸ் பாப்பாண்டவரது கல்லறைப் படைப்பாக்கம் அடங்கும். அது மிகச் சிறந்த சிற்பங்களைக் கொண்ட ஒரு படைப்பாகும். கட்டடக் கலைப்படைப்புகள், சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகியவற்றிற்காக அவர் ஆக்கிய பிரமாண்டமான படைப்புகள் காரணமாக, அவரது சமகாலக் கலைஞர்களுள் சிறப்புமிக்கவராகத் திகழ்கின்றார். அதன் விளைவாக கி.பி. 1563 இல் வசாரியினால் லலித கலைகளுக்காகப் புளோரன்சில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கலைக் கல்லூரியின் தலைவராகச் செயற்படும் பாக்கியத்தைப் பெற்றார். அப்போது அவரது வயது 88 வருடங்களாகும். அவர் தமது வயது 89 வருடங்களாக இருந்தபோது அதாவது கி.பி. 1564 இல் மரணிக்கும் வரையில் முப்பது வருடகாலம் தேவாலயங்கள் அமைப்பதில் பங்களிப்புச் செய்த ஒரு ஒப்பற்ற கலைஞராகப் புகழ் பெற்றுள்ளார்.

மைக்கல் ஆஞ்சிலோ இனது படைப்பாக்கங்களின் சிறப்பியல்புகள்

டாவின்சி ஓவியத்திற்கு முதன்மையிடம் வழங்கியதோடு அதனை ஒரு விஞ்ஞானம் என விளக்கினார். ஆனால் சிற்பங்கள் மூலம் மீளப்படைப்பாக்கஞ் செய்தல் தொடர்பாகவே மைக்கல் ஆஞ்சிலோ முதன்மையாகக் கவனஞ் செலுத்தினார். மறுமலர்ச்சிக் காலக் கலைஞர்களுள் தொல்சீர்க்கலையின் இயல்புகளைக் காத்திரமாக வெளிப்படுத்தியவர் இவராவார். உள்ளார்ந்த சக்தியையும் இயக்கத் தன்மையையும் கொண்ட திறந்தமேனி உடலே மைக்கல் ஆஞ்சலோவினது கலையின் மைய உருவாகும். கல்லில் சிற்பத்தைச் செதுக்குவது போன்றே ஓவியம் வரையும் போது மைக்கல் ஆஞ்சிலோ தமது தூரிகையைப் பயன்படுத்தியுள்ளார்.

மைக்கல் ஆஞ்சலோ மனித உடலுக்கு விசேடமாக முக்கியமளித்துள்ளார். மனித உடலே உணர்வு வெளிப்பாட்டுக்கான மிக உயரிய வாகனமாகும் என அவர் பொருள் விளக்கமளித்துள்ளார். (Human formisthe supremc vehicle of expression) மனித உடலைக்காட்டும்போது தசைகளின் தன்மையே முதன்மை பெற்றது. அதன் விளைவாக சில பெண் உருவங்கள் கூட ஆணின் உடலினைப் போன்று திரண்ட தசைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. உடலமைப்பு இயல்புகளையும் அளவுப் பிரமாணத்தையும் சரியாகப் பயன்படுத்திய ஒரு கலைஞராக மைக்கல் ஆஞ்சலோ சிறப்பிடம் பெறுகின்றார். பெரும்பாலான படைப்பாக்கங்களில் நேராக முன்னோக்கிப்பார்க்கும் உடல்நிலைக்குப் பதிலாக திரும்பிய திருகிய மற்றும் வெவ்வேறு திசைகளில் சாய்ந்த உடல்நிலைகளையே அவர் பயன்படுத்தியுள்ளார். மைக்கல்

லான சிற்பப் படைப்புக்களில் உடலின் மேற்பகுதி ஒருபுறமாகவும் கீழ்ப்பகுதி அதற்கு எதிர்ப்புறமாகவும் திரும்பி இருப்பதைக் காண முடிகின்றது. தமது ஆக்கங்களுக்காக அவர் கிரேக்க, உரோம கலைப்படைப்புக்களின் செல்வாக்கைப் பெரிதும் பெற்றுள்ளார்.

ஓவியப்படைப்புகள்

உள்ளார்ந்த சக்தி மற்றும் இயக்கத்தன்மை காரணமாக திருகுண்ட, அழகிய திறந்த மேனி உடலே மைக்கல் ஆஞ்சிலோவினது ஓவியக் கலையின் மைய உருவமாகும். வில்வளைவுகள், படிக்கட்டு வரிசைகள் போன்ற கட்டடக்கலைக் கூறுகள் அவரது ஓவியக்கலையின் அம்சங்களாகும். மனித உருவங்கள், வில்வளைவுகளின் கீழ் கற்படிக்கட்டில் அமர்ந்திருப்பதை அவரது ஓவியங்களில் காணலாம். மைக்கல் ஆஞ்சிலோ கல்லில் சிற்பஞ் செதுக்கும் பாணியிலேயே ஓவியங்களில் தனது தூரிகையைப் பயன்படுத்தியுள்ளார். எனினும் அவர் ஒரு சிற்பக்கலைஞர் எனும் நிலையிலிருந்தே அவற்றை வரைந்துள்ளார். மேலும் அவர் மிக நுணுக்கமாக வர்ணங்களைக் கையாண்ட ஒருவராகவும் கருதப்படுகின்றார். மைக்கல் ஆஞ்சலோ இனால் ஓவியங்கள் வரையப்பட்ட இடங்களுள் சிஸ்ட்ரைன் தேவாலயம் பிரதானமானது. ஓவியக்கலை தொடர்பாக அவரது தனித்தன்மையைப் கூறுவதற்கு தனியே உரோமாபுரியில் அமைந்துள்ள சிஸ்ட்ரைன் தேவாலய ஓவியங்கள் மாத்திரம் போதுமானவை எனலாம்.

சிஸ்ட்டைன் தேவாலய ஓவியங்கள்

சிஸ்ட்டைன் தேவாலய ஓவியங்கள் மறுமலர்ச்சிக்கால ஓவியப் படைப்புகளுள் தலைசிறந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்த ஓவியங்களை வரைந்து முடிப்பதற்கு ஏறத்தாழ நாலரை (4 1/2) வருடங்களை மைக்கல் ஆஞ்சிலோ கழித்ததாகக் கூறப்படுகின்றது. அதாவது 1508 தொடக்கம் 1512 வரையிலான காலத்தை அவர் இதற்காகச் செலவிட்டுள்ளார். நில மட்டத்திலிருந்து 68 அடி உயரத்தில் அமைந்துள்ள வானம் போன்ற ஒரு விதானத்தின் உட்புறத்தே 132 அடி நீளமும் 44 அடி அகலமும் கொண்ட அதாவது ஏறத்தாழ பத்தாயிரம் (10,000) சதுர அடிப்பரப்புள்ள உட்கூரைப்பரப்பில் ஓவியங்கள் வரைவதே அவரது பணியாக அமைந்தது. அப்பாரிய படைப்பாக்கத்தில் அவர் மொத்தமாக முன்னூற்று நாற்பத்தி மூன்று (343) ஓவியங்களை வரைந்துள்ளார். இக்கலைப் படைப்புகளுள் பின்வருபவை பெரிதும் முக்கியமானவை:

  • தேவன் உலகத்தைப் படைத்தல்
  • தேவன் சூரிய சந்திரனைப் படைத்தல்
  • ஆதாமைப்படைத்தல்
  • ஏவாளைப் படைத்தல்
  • பெரும் வெள்ளப் பிரளயம்
  • இறுதித்தீர்ப்பு

சிஸ்ட்டைன் தேவாலய ஓவியங்களிலுள்ள மனித உருவங்கள் அசாதாரணமான உடல் வலிமையையும் உயிரோட்டத்தையும் உறுதியையும் வினோதத்தன்மையையும் வெளிக்காட்டுவனவாகக் கட்டியெழுப்பப் பட்டுள்ளன. வெவ்வேறு விதமான மனித உடல்நிலைகளை அழகாக வெளிப்படுத்தும் ஒவ்வோர் உருவமும் தளத்தின்மீது மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளது. அவ்வொவ்வொரு மனித உருவத்திலும் சிற்பம் போன்ற தன்மையைக் காண முடிகின்றது. இது அவரது சிற்பக்கலைப்படைப்பாக்க முறைகளைத் தழுவி ஓவியம் வரைதல் காரணமாக ஏற்பட்ட ஒரு செல்வாக்காகும்.

கி.பி. 1512 இல் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத ஆக்கங்களைப் பூர்த்தி செய்வதற்காக 24 நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் சிஸ்ட்டைன் தேவாலயத்தில் மீண்டும் படைப்பாக்கப் பணியைத் தொடங்கினார். அதன் விளைவாக கி.பி. 1534 இல் சிஸ்ட்டைன் தேவாலயத்தில் இறுதித்தீர்ப்பு’ எனும் ஓவியத்தை வரையத் தொடங்கினார். அப்படைப்பாக்கம் 1541 இல் பூர்த்திசெய்யப்பட்டது. உலகம், மனிதனின் ஆரம்பம், தேவலோகத்தின் பல்வேறு நிகழ்வுகள், சுவர்க்கலோகம், மண்ணுலகம், நரகலோகம் போன்றவை அவ்வோவியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன.

இறுதித்தீர்ப்பு

இறுதித்தீர்ப்பு எனும் ஓவியம் மைக்கல் ஆஞ்சலோவினது கலை வாழ்க்கையின் இறுதிக் காலப்பகுதியில் வரையப்பட்ட ஒன்றாகும். உலகில் ஒரு கருப்பொருளின் கீழ் வரையப்பட்ட மிகப்பெரிய தனி ஓவியமாகக் கருதப்படும் இது (பிரெஸ்கோ ஓவியம்) 48 1 44 அடி அளவுடையது. கி.பி. 1534 இல் ஆரம்பமாக்கப்பட்ட இப்பணி கி.பி. 1541 இல் பூர்த்தியடைந்தது. ஒட்டுமொத்த ஓவியத்திலும் ஏறத்தாழ 300 மனித உருவங்கள் அடங்கியுள்ளன. மனித உருவங்களை வரைவதிலும் மனிதர்களைக் கூட்டங்கூட்டமாக வரைவதிலும் மைக்கல் ஆஞ்சலோ கொண்டிருந்த திறமைக்கு இந்த ஓவியம் ஒரு சான்றாக உள்ளது.

வழிபடுபீடத்தின் பின்புறச் சுவரில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் கிறித்தவ ஓவியக் கலையில் உலக பொதுவான உண்மையொன்றினை எடுத்துக்காட்டும் ஓர் ஆக்கமாகவும் கருதப்படுகின்றது இந்த ஓவியத்தை வரைந்த காலப்பகுதியில் மேற்கத்தேச சமூகத்திலும் தேவாலயத்திலும் பல்வேறு மறுசீரமைப்புக்கள் நிகழ்ந்தவண்ணமிருந்தன. எனவே, மரபுரீதியான இறுதித்தீர்ப்பானது புதுத்தன்மை யுடையதாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சமயஞ்சார்ந்த பிரபஞ்சத்தில் பெருந்தொகையான நிர்வாண மேனி மனித உருவங்களை ஓவியர் இங்கு பயன்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக நோக்குகையில் மைக்கல் ஆஞ்சிலோ இந்த ஓவியத்தைப் பிரதானமாக மூன்று பகுதிகளாகப் பிரித்து அதனை சுவர்க்கம், மண்ணுலகம், விண்ணுலகம் என குறியீட்டு ரீதியில் சித்திரித்துள்ளார். மத்திய தளத்தில் இயேசு அவரது சீடர்களும் மேற்றளத்தில் புனிதர்கள், தேவதூதர்கள், சமயத்துக்காக உயிர்த்துறந்தோர் ஆகியோர் சித்திரிக்கப்பட்டுள்ளனர். கீழ்த்தளத்தில் அதாவது கீழ்ப்பகுதியில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் பாவிகள் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இம்மூன்று தளங்களும் முறையே மண்ணுலகம், வானம், நரகலோகம் என வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த ஓவியத்தில் சிலுவையின் வருகையும் கூடவே எழுச்சியும் பாதாள உலகின் எழுச்சியும் தெய்வத்தின் சாடமும் தெரிவுசெய்த பக்தர்களுக்கு எழுந்திருக்குமாறு கட்டளையிடுவதும் காட்டப்பட்டுள்ளது. ஓவியத்தின் மைய உருவம் இயேசுபிரான் ஆவதோடு தீர்ப்பு வழங்குமாறாக ஒரு கை மேலே உயர்த்திக் காட்டப்பட்டுள்ளளது. மேலே உயர்த்தப்பட்டுள்ள கையில் சிலுவையில் ஆணி அறைந்த காயத்தழும்பும் காட்டப்பட்டுள்ளது. இயேசு பிரானின் உருவமும் வேறுபட்ட ஒரு விதத்திலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தாடியின்றி வலிமைமிக்க உடலைக் கொண்ட ஒரு கிரேக்கத் தெய்வம் போன்று காட்டப்பட்டுள்ளது. இயேசுவுக்குப் பின்னாலுள்ள ஒளி முதல் காரணமாக, இது அப்பலோ தெய்வம் எனும் எண்ணக்கருவைப் பிரதியீடு செய்து இயேசுபிரானைக் காட்டியுள்ள ஒரு சந்தர்ப்பமாகும் என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.

மானிட உடல்கள் ஒரு குவியலாக சங்கிலியாக இணைந்துள்ள ஒரு வலைபோன்று இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு புறத்தே கீழே இருந்து சுவர்க்கத்தை நோக்கி உயர்ந்து செல்வோரும், மற்றுமொரு புறத்தே சுவர்க்கத்திலிருந்து கீழ்நோக்கி வீழ்வோரும் காட்டப்பட்டுள்ளனர். இந்த உருவங்களுக்கிடையே, குழுக்களாக அமைந்த உருவங்களையும் காண முடிகின்றது. இயேசுவுக்குக் கீழாக, அவரது வருகைக்காக குழல் ஊதி மகிழும் தூதுவர்களும் மேலே இரு ஓரங்களிலும் சிலுவையையும் தூண்களையும் தாங்கி, அவரது சோகத்தை நினைவூட்டும் வகையில் உள்ளன. இயேசுவுக்கு அருகே அன்னை மரியாளும் காட்டப்பட்டுள்ளார். இந்த ஓவியத்தில் இயேசுபிரான் கட்டளையிடுபவர் போன்று வலது கையை மேலே உயர்த்தி வைத்துள்ள போதிலும் அவரது முகத்தில் கருணையையே காண முடிகின்றது.

ஆதாமைப் படைத்தல்

சிஸ்ட்டைன் தேவாலயத்தின் உட்கூரையில் வரையப்பட்ட ‘உலகின் பிறப்பு’ எனும் கதைத்தொடரில் மிக முக்கியமான ஓர் ஓவியமாக ஆதாமைப்படைத்தல்” எனும் இந்த ஓவியத்தைக் குறிப்பிடலாம். தெய்வம் ஆதாமை படைத்து அவருக்கு உயிரை ஊட்டும் சந்தர்ப்பமே இதில் வரையப்பட்டுள்ளது. மைக்கல் ஆஞ்சிலோவுக்கு முன்னர் எந்தவொரு கலைஞரும் கற்பனை செய்து பார்க்காத ஓர் அற்புதப் படைப்பாக்கமாக இதனைக் குறிப்பிடலாம்.

ஒட்டுமொத்த ஓவியமும் பெரிதும் குறியீட்டு ரீதியிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தெய்வத்தை மனித உருவில் சித்திரிப்பது குறித்து ஓவியர்கள் தயக்கங்காட்டிய போதிலும் இங்கு மைக்கல் ஆஞ்சிலோ வயோதிப மற்றும் பாண்டித்தியம் மிக்க முகத்தையும் பெரிதும் வலிமைமிக்க உடலையும் கொண்டு புதியதொரு வகையில் தெய்வத்தை மீள்நிர்மாணிப்புச் செய்துள்ளார். தேவ தூதர் குழுவினருடன் அண்ட வெளியில் மிதந்துவரும் பாங்கில் தெய்வம் காட்டப்பட்டுள்ளது. ஆதாம் நிர்வாண மேனியுடன் ஓர் உருவமாகவும் உயிர்ப்பற்ற சோர்ந்த தன்மையுடனும் காட்டப்பட்டுள்ளார். உயிர்கொடுத்தல்” எனும் செயலானது தெய்வத்தின் கை, ஆதாமின் கை ஆகியவற்றின் மூலம் குறியீட்டு ரீதியில் காட்டப்பட்டுள்ளது. உயிரோட்டம் மிக்க தெய்வத்தின் வலது கைச் சுட்டுவிரலானது ஆதாமினது உயிர்ப்பற்ற இடது கைச்சுட்டுவிரலை நோக்கி அமைந்துள்ளது. தெய்வத்தை உள்ளடக்கிய பகுதி வேகமான காற்றில் பெரிதும் உயிரோட்டத்துடன் அசையும் பாங்கும் காட்டப்பட்டுள்ளது.

மனித உருவங்கள் வரையப்பட்டுள்ள விதத்தை நோக்கும்போது மனித உருவங்களை வரைவதில் மைக்கல் ஆஞ்சிலோ கொண்டிருந்த ஆர்வத்தையும் திறமையையும் இதில் நன்கு காண முடிகின்றது. மிகச் சரியான உடலமைப்புப் பண்புகளுடன் ஆதாமின் உருவமும் தெய்வத்தின் உருவமும் காட்டப்பட்டுள்ளன. உடல் வரையும்போதும் திரும்பும் போதும் என்புகளிலும் தசைகளிலும் ஏற்படும் நுணுக்கமான மாற்றங்களைக்கூட ஓவியர் துல்லியமாக எடுத்துக்காட்டியுள்ளமையைக் காணமுடிகின்றது. தசைகளைப் போன்றே உடலின் திணிவும் (Mass) வலியுறுத்திக்காட்டப்படும் வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓவியத்தில் ஒன்றிலிருந்தொன்று வேறுபட்ட புவியீர்ப்பு (ஈர்ப்பு) களிரண்டின்கீழ், மனித உருவங்களின் தொழிற்பாடு, அதாவது வெளியில் மிதத்தலும், ”நிலத்தில் படுத்திருத்தலும்” காட்டப்பட்டுள்ளன.

பியெட்டா (Pieta)

‘பியெட்டா’ என்பதன் அர்த்தம் இரங்கல் என்பதாகும். சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உயிர் பிரிந்த உடலை வைத்திருக்கும் கன்னிமரியாளின் உருவம் இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. கிறித்தவக் கருப்பொருள்களுள் பிரபல்யமிக்க ஒன்றாகிய, ‘பியெட்டா’ எனும் கருப்பொருளின்கீழ் மைக்கல் ஆஞ்சலோ நான்கு (4) ஆக்கங்கள் படைத்துள்ளார். அவற்றுள் மிகப் பிரசித்திபெற்ற ஆக்கம் ”மடோனா டெலா பியெட்டா” எனும் சிற்பமாகும். மனித உருவங்கள் இரண்டினையும் புனைவதற்காக கலைஞர் கூம்பக அமைப்பைப் பயன்படுத்தியுள்ளார். அன்னை மரியாள் குழந்தை இயேசுவைத் தாங்கியிருக்கும் அதே உடல்நிலைக்கு ஒப்பமான வகையிலேயே இயேசுபிரானின் உயிர் பிரிந்த உடலையும் தாங்கி வைத்துள்ளார்.

சலவைக்கல்லில் செய்யப்பட்ட இச்சிற்பத்தில் அன்னை மரியாள் இளமைத் தோற்றத்துடன் காட்டப்பட்டுள்ளார். அன்னை மரியாளின் தூய்மையைக் குறிப்பதற்காகவே அவ்வாறு இளமைத் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. அன்னை மரியாளின் முகத்தில் புலம்பலுக்கு மேலாக தியானநிலைக்குரிய கவனமே காணப்படுகின்றன. தலையும் உடலும் நீண்டதோர் ஆடையினால் மறைக்கப்பட்டுள்ளது. அன்னை மரியாளின் முகத்தில் மனித மனவெழுச்சிகள் நேரடியாக வெளிக்காட்டப்படாத போதிலும், மிக நுணுக்கமான வகையில் பக்தியும் உள்மனத்தின் எழுச்சியும் காட்டப்பட்டுள்ளன. அன்னை மரியாளின் இடது கையுடன் இறுக்கமாக அணைத்துள்ள இயேசுவின் புயத்தை இதற்கான ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம்.

மைக்கல் ஆஞ்சலோ மனித உடலைச்சிறப்பாக வடிப்பதில் காட்டும் திறமையையும் உடலமைப்பு இயல்புகள் தொடர்பாக தாம் கொண்டிருக்கும் அனுபவத்தையும் இப்படைப்புத் தெளிவாக வெளிக்காட்டு கின்றது. குறிப்பாக இயேசுபிரானின் உயிரற்ற உடலைச் செதுக்கியுள்ள விதத்தை நோக்குகையில் இதனை நன்கு விளங்க முடிகின்றது. என்புகள், தசைகள், நாடிநரம்புகள் போன்றவை மாத்திரமன்றி கைகளில் ஆணி அறைந்த துவாரங்கள் கூடக் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பக்கை மைக்கல் ஆஞ்சிலோவுக்கு வயது 24 வருடங்களாகும் எனக் கருதப்படுகின்றது.

டேவிட் சிற்பம்

சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட இம்மனித உருவம் ஏறத்தாழ 17 அடி உயரமானது. கோலியத் எனும் இராட்சதனிடம் இருந்து மனிதரைப் பாதுகாத்த ஒரு இளம் வீரனே இச்சிற்பத்தின் விடயப் பொருளாகும். பெரிதும் தொல்சீர் விதிகளுக்கமைய ஆக்கப்பட்டுள்ள இச்சிற்பம் ஒரு பாதத்தில் பாரத்தைத் தாங்கும் உடல்நிலையைக் (contrappost) கொண்டுள்ளது. இது தொல்சீர் கால கிரேக்க கலைஞர்களாலும் பெரிதும் பயன்படுத்தப்பட்ட ஒரு மெய்ந்நிலையாகும். அதன் மூலம் இச்சிற்பத்தில் பெரிதும் இலாவகமாக சுதந்திரமான சந்தத்துக்கமைவான சமனிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தில் டேவிடினது உடல் இலட்சியத்தன்மையுடனேயே செதுக்கப்பட்டுள்ளது. பௌதீக ரீதியில் டேவிட் இலாவகமாகவும் அசைவின்றியும் இருந்தபோதிலும், முகத்தில் தீட்சண்யமான சிந்தனை வயப்பட்ட பார்வையே காணப்படுகிறது. நீண்டதூரத்தை நோக்கியவாறு சிம்மப்பார்வை பார்த்துக் கொண்டிருத்தலானது டேவிடினது துணிவையும், திறமையையும் காட்டி நிற்கின்றது.

டேவிட் எனும் இச்சிற்பம் ‘புளோரன்ஸ் நகரில் பொது மக்கட் சதுக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மறுமலர்ச்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய, ”சுயாதீனமாக எழுந்து நிற்கும்” (frcc-standing) சலவைக்கற் சிற்பமாகும். இது ‘புளோரன்ஸ் நகரின் அரசியல் சுதந்திரத்தையும் சௌபாக்கியத்தையும் காட்டி நிற்கும் ஒரு குறியீடாகும். சமயம் சார்ந்த கருப்பொரு ளொன்றின் செல்வாக்குப் பெறப்பட்டுள்ள போதிலும் இது ஒரு சமயச்சிற்பமாக உருவாக்கப்பட்ட தொன்றல்ல. சமயக் கருத்தானது மானிடத் தன்மைக்கு மாற்றியமைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அகன்ற தோள்களுடன் ஒரு வீரனுக்குப் பொருத்தமான அளவுப் பிரமாணங்களை உள்ளடக்கி இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. டேவிட் இடது கையில் கவணின் ஒரு பகுதியைப்பிடித்து வைத்திருப்பதோடு, வலது கையில் அக்கவணில் இட்டு எய்யும் கல்லை ஒளித்து வைத்திருப்பது காட்டப்பட்டுள்ளது. டேவிட் நின்று கொண்டிருக்கும் நிலைக்கமைய உடலின் என்புகள், தசைகள், நாடி நரம்புகள் போன்ற எல்லா நுணுக்கமான அங்கங்களும் துல்லியமாக வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. மனித உடல் தொடர்பாக மைக்கல் ஆஞ்சலோ கொண்டிருந்த தெளிவான விளக்கத்தை இச்சிற்பம் காட்டி நிற்கின்றது.

மோசஸ் சிற்பம் (Moses)

சலவைக்கல்லினால் செய்யப்பட்ட இச்சிற்பம் பத்துக்கட்டளைகளுடன் தொடர்புடைய மோசஸ் அவர்களைக் காட்டி நிற்கின்றது. வயோதிப முகத்துடனும் வலிமைமிக்க உடலுடனும் மோசஸினது உடல் காட்டப்பட்டுள்ளது. ‘ஞானம்’. அதிகாரம் ஆகியவற்றின் குறியீடாகவும் இச்சிற்பம் அமைந்துள்ளது.

மோசஸினது தலையுச்சியில் இரண்டு கொம்புகள் காட்டப்பட்டுள்ளன. இது மைக்கல் ஆஞ்சலோ பயன்படுத்திய நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த விவிலியத்தின் லத்தீன் மொழிபெயர்ப்புக்கு அமைய இடப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. மனித உடல் குறித்து மைக்கல் ஆஞ்சிலோ கொண்டிருந்த முதிர்ச்சியைக் காட்டிநிற்கும் மற்றொரு சிற்பமாக இது காணப்படுகின்றது. மோசஸினது உடல் சரியான உடலமைப்பு இயல்புகளுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இது கி.பி. 1513 – 1515 இற்கு இடைப்பட்ட காலத்தில் பூர்த்தி செய்யப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது இரண்டாம் ஜுலியஸ் பாப்பரசரினது கல்லறை மனையின் ஒரு சிற்பமாகத் தாபிக்கப்பட்டுள்ளது. மோசஸ் வலது கையிலே பத்துக்கட்டளைகளை நினைவூட்டும் இரண்டு கற்பாளங்களைத் தங்கியுள்ளமை காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பம் 7 அடி 8 1/2 அங்குலம் உயரமானது. மோசஸ் சிற்பம் கீழிருந்து அவதானிப்பதற்குரிய ஒன்றாகையால், அதன் மேற்பகுதிகள் நான்கும் சற்றுப் பெரியதாகவும் நீளப்பாங்காகவும் ஆக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!