வரலாற்றுக்கு முந்திய கால ஓவியங்கள் (இலங்கை)

  • வடமத்திய மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலேயே இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலத்து ஓவியங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
  • இலங்கையின் வரலாற்றுக்கு முந்திய காலம், இரண்டரை இலட்சம் ஆண்டுகள் பழைமையானது என்பதைக் காட்டுவதற்கு மனிதர் பயன்படுத்திய கல்லாலான கருவிகள் சான்று பகர்கின்றனன.
  • இதற்கேற்ப, வரலாற்றுக்கு முந்திய கால சித்திரங்கள் மூவாயிரம் ஆண்டுகள் மாத்திரமே பழைமையானது என்பது பேராசிரியர் டீ.பி. நந்ததேவ அவர்களினதுவம் பேராசிரியர் நு.P. தெரணியகலவினதும் அனுமானமாகும்.
  • சித்திரங்கள் வேடர்களால் வரையப்பட்டவை என செலிக்மான் குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலத்துக் குகைச் சித்திரப் படைப்புக்களில் மனித உருவங்களும் பிராணி உருவங்களுமே தொனிப்பொருளாக அமைந்தன.
  • விலங்கு உருவங்களிடையே யானை, சிறுத்தை, முதலை, மான், மரை, குரங்கு, மான், உடும்பு, மயில், பூரான் போன்றவை முக்கியமானவை.
  • எளிமையான தளவடிவங்களாகவும் குறியீடுகளாகவும் காட்டப்பட்டுள்ள இவ்வுருவங்கள் மூலம் ஆதிமனிதனின் பிரதான ஜீவனோபாயமான “வேட்டையாடல்” காட்டப்பட்டுள்ளது என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.
வரலாற்றுக்கு முந்திய கால சித்திரங்களின் பொது இயல்புகள்
  • இச்சித்திரங்களை வரைவதற்காகக் கையாண்ட நுட்பமுறைகள் 03 ஆகும்.
    1. கோடுகளால் படங்கள் வரையும் முறை
    2. விரலினால் அல்லது தடித்துண்டினால் சாயம் பூசும் முறை
    3. சுரண்டுதல் முறை (நுபெசயஎiபெ)
  • தனி உருவங்களாகவும், சோடி உருவங்களாகவும் இவை வரையப்பட்டுள்ளன.
  • எளிமையான தளவடிவங்கள் குறியீடுகளாகப் பயன்படுத்தி உள்ளனர்.
  • மனித, விலங்கு உருவங்களோடு வேறு கேத்திரகணித உருவங்களும் குறியீட்டு உருவங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
  • வரலாற்றுக்கு முந்தியகால சித்திரங்களில் காணப்படும் இடங்களிடையே

தந்திரமலைக் குகை தொறவக்கைக்குகை பில்லாவ குகை

போன்றவை பிரதானமானவை.

  • சூழலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இயற்கைப் பொருள்களாலான கரி, வெண்களி விலங்குகளின் இரத்தம், முருகைக்கல் போன்றவற்றை வர்ணங்களாக உபயோகித்துள்ளதுடன் அவை நீர், பிசின் அல்லது விலங்கு இரத்தத்துடன் கலந்து பயன்படுதட்தப்பட்டுள்ளது.
தந்திரிமலை குகை ஓவியங்கள்
  • தந்திரிமலை குசைச் சித்திரங்கள் இலங்கை வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகின்றன.
  • இப்படைப்புக்களுள் வில்வித்தைக்காரன், ஒரு மிருகத்தின் முதுகின் மீது செல்லும் மனித உருவமும், கட்டடமொன்றினுள் (வீடொன்றினுள் ) மனித உருவங்களைக் கொண்ட சித்திரமும் வரலாற்றுக்கு முந்திய முக்கியமான படைப்புக்களாகக் கருதப்படுகின்றது.
  • விலங்கு உருவங்களுள் “உடும்பு” எனும் உருவமும் சிறப்பானது.
மிருகத்தில் ஏறிச்செல்லும் மனிதன்
 உடும்பு
வில் வித்தைக்காரன்
வீட்டுக்குள் மனித உருவங்கள்
தொரவக்கைக் குகை ஓவியங்கள்
  • தொரவக்கைக் குகை கேகாலை மாவட்ட பெலிகள் கோரளையில் வரக்காப்பொளை நகரை அண்டிய மள்தெனியா எனும் பெருந்தோட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது ஒன்றை மற்றொன்று தங்கியுள்ளது போன்று ஏறத்தாழ 1500 அடி உயரமான பாரிய மலைக்குன்றுகளிரண்டினாலான இயற்கையான ஒரு கற்குகையாகும்.
  • ஜீ.எவ்.ஆர் புரோவியனர் என்பவர் 1919 இல் கண்டுபிடிக்கையில் நிலத்திலிருந்து 6 1ஃ2 அடி உயரத்திலேயே சித்திரங்கள் தீட்டப்பட்டு இருந்தது.
  • இச்சித்திரங்கள், கோடுகளால் வரைந்தும், சுரண்டியும் ஆகிய இரண்டு முறைகளிலும் வரையப்பட்டவையாகின்றன.
  • மீனும் மனித வடிவும் உடும்பு எனும் சித்திரமும் முக்கியமான ஒரு படைப்பாகக் கருதப்படுகின்றது.
  • அத்தோடு சூரிய சந்திரனைக் காட்டும் சித்திரமொன்றும் உள்ளது.
  • இந்த குகைச் சித்திரங்களுள் சிறப்பான படைப்பாக “யானையும் யானைக் குட்டியும்” எனும் படைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
பில்லாவ குகை ஓவியங்கள்
  • வட மத்திய மாகாணத்தில் அனுராதபுர மாவட்டத்தில் பில்லாவ கற்குகை அமைந்துள்ளது.
  • எஸ்.யூ. தரணியகலை என்பாரால் 1951 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இக்குகையின் சித்திரங்கள் வர்ணங்களைப் பயன்படுத்தி வரையப்பட்ட கோட்டுச் சித்திரங்களாகும்.
  • கலப்பு ஊடகங்களைக் கொண்டு வரையப்பட்ட சில சித்திரங்கள் காணப்படுகின்றன.
  • ஜோன்ஸ்டில் என்பவரின் கருத்துப்படி இங்கு காணப்படும் முக்கியமான படைப்பு கட்டமொன்றினுள் (வீடொன்றினுள்) உள்ள இரண்டு மனித உருவங்களைக் கொண்ட சித்திரமாகும்.
  • இக்குகைச் சித்திரங்களில் யானை, மரை, மயில் உருவங்களும் சிறப்பானவை. கேத்திரகணித குறியீடுகளைக் கொண்ட உருவங்களும் இவற்றில் அடங்கியுள்ளன.

பயிற்சி வினாக்கள்

1. இலங்கையின் வரலாற்று முற்பட்ட காலகுகை ஓவியக்கலை ஆராய்ச்சி செய்த பேராசிரியர்கள் இருவர் அவர்களின் பெயர்களை எழுதுக? 2. ஆதிகால குகை ஓவியங்களின் வரைவதற்கு கையாண்ட நுட்பமுறைகள் 3 தருக? 3. ஆதிகால குகை ஓவியங்கள் எவ்வாறான கருப்பொருளை மையமாக கொண்டு வரையப்பட்டது? 4. இலங்கையில் உள்ள ஆதிகால குகை ஓவியங்கள் வரையப்பட்ட குகைகள் 3 தருக? 5. ஆதிகால குகை ஓவியம் வரைய பயன்படுத்தும் இயற்கை பொருட்களை எழுதுக? 6. இலங்கையில் முதலாவதும், மிகவும் பழைமை வாய்ந்ததுமான குகை ஓவியம் எது? 7. தொறவக்கை குகை எங்கு அமைந்துள்ளது? 8. தொறவக்கை கண்டுபிடித்தவர் யார்? 9. எத்தனையாம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? 10. தொறவக்க குகையின் சிறப்பான குகை ஓவியம் யாது? 11. தொறவக்கை குகை ஓவியம் எந்த நுட்பமுறையில் வரையப்பட்டுள்ளது? 12. பில்லாவ குகை ஓவியம் எங்கு அமைந்துள்ளது? 13. பில்லாவ குகை எத்தனையாம் ஆண்டு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? 14. ஜோன்ஸ்டில் என்பவரின் கருத்துப்படி பில்லாவ குகையில் மிகமுக்கியமான கலைப் படைப்பு எது? 15. பில்லாவ குகையில் காணப்படும் மிருக ஓவியங்களை குறிப்பிட்டு எழுதுக?

error: Content is protected !!