வித்யாதரக் குகை ஓவியங்கள்

பொலனறுவை கல் விகாரையில் உள்ள உட்குடையப்பட்ட ஒரு குகையே வித்யாதரக் குகை ஆகும். பொலனறுவை காலத்துக்குரிய கல்விகாரை எனப்படும் “உத்தராராமை” ஆனது பொலனறுவை ஆலாகன பிரிவேனைக் கட்டடத் தொகுதிக்கு வடக்கில் அமைந்துள்ளது. முதலாம் பராக்கிரமபாகு மன்னனினால் செய்விக்கப்பட்ட விகாரையின் வித்யாதரக் குகையினுள்ளேயும் சுவர் ஓவியங்கள் இருந்தமைக்கான சான்றுகள் காணப்பட்டபோதிலும் இப்பொழுது வாயிலின் இரு பக்கங்களிலும் இரண்டு வரிசைகளில் மாத்திரம் இரண்டு சித்திரங்களைக் காணக்கூடியதாகவுள்ளது. அனுராதபர, பொலனறுவைக் கால ஓவிய நுட்ப முறைக்கேற்ப உலர் சுதை முறையினைப் (பிரஸ்கோ, சிக்கோ) பின்பற்றி இச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. இங்குள்ள சித்திரங்களின் கருப்பொருள் தெளிவற்றது. கிடை வரிசைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் தெய்வ உருவங்களும் வயோதிப மனித உருவொன்றும் எச்சமாகக் காணப்படுகின்றன.

வித்யாதரக் குகையின் ஓர் ஓவிய வரிசையில் வயது முதிர்ந்த தன்மையினைக் கொண்ட மனித உருவமொன்றும், அதற்குக் கீழாக தெய்வ உருவமொன்றும் உள்ளன. நீண்ட தாடியுள்ள வயது முதிர்ந்த உருவத்தின் நெற்றி அகலமானது. தலை உச்சி வரை கேசம் கிடையாது. அத்தோடு இரசணியும் கிடையாது. தலை சற்றுச் சாய்வாக உள்ளது. வலக்கை விதர்க்க முத்திரையை ஒத்த முத்திரையினைக் காட்டுவதோடு, இடக்கையில் சங்கு உள்ளது. அளவிற் பெரிய மாலையொன்றினை அணிந்துள்ளார். இவ்வுருவத்தின் முகத்தின் மூலம் முதுமை, பக்தி, அமைதி போன்ற அம்சங்களைப் பிரதிபலிப்பதில் கலைஞன் வெற்றி பெற்றுள்ளான். வயோதிபர் உருவத்திற்குக் கீழேயுள்ள தெய்வ உருவம் ஆபரணங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இளமையின் பூரிப்பையும் பாவ இலட்சணங் களையும் காணலாம். வயோதிப உருவம் கையில் சங்கைத் தாங்கியிருப்பதால் இது சக்ர தேவன் உருவம் எனக் கருதப்படுகின்றது.

வித்யாதரக் குகைச் சுவரோவியங்களில் உள்ள உருவங்களின் அளவுப் பிரமாணம், ஆடை அணிகலன்கள், இலயம், பாவ வெளிப்படுத்தல் போன்ற சித்திரக்கலை இலட்சணங்க ளெல்லாம் பொலனறுவைக் காலத் தொல்சீர் ஓவியத்தினை ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளன. பொலனறுவை திவங்க சித்திரப் பாரம்பரிய வர்ணங்களையும் இரேகைகளையும் வித்யாதரக் குகை ஓவியங்களில் காணக்கூடியதாகவுள்ளது. மிகவும் மெல்லிய இரேகைகள் மூலம் உருவங்களைக் கட்டியெழுப்ப முயற்சி செய்யப்பட்டுள்ளதோடு, கபில நிறச் சாயல்களைக் கொண்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. வர்ணங்களாக சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோடுகள் உயிரோட்டமானவை.

பொருள் விளக்கம்

நந்ததேவ விஜேசேக்கர

எச்சமாகக் காணப்படும் ஓவியப்பகுதிகளை அவதானிக்கும் நந்ததேவ விஜேசேக்கர இது பிரம்மன் உட்பட தேவர்கள் புத்தபெருமானை வணங்குவதற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தை எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எச்சமாகக் காணப்படும் ஓவியங்களுக்கிடையே மேலும் வரிசையில் காணப்படும் உருவம் பிரம்மாவினுடையதெனக் கருதப்படுகின்றது.

சந்திர விக்கிரம கமகே

சூள வம்சத்தில் குறிப்பிடப்பட்ட தகவலின்படி நசிந்தபட்டிமாக் குகை, நிபந்தபட்டிமாக குகை, மாயாஜாலக் குகை ஆகிய குகைகளும் கல்விகாரையின் இடது பக்க வித்யாதரக் குகையும். அதற்கு வடக்கில் நசிந்தபட்டிமா குகையும் வடக்கு எல்லையில் நிபந்தபட்டிமா குகையும் காணக்கூடியதாகவுள்ளது. அதற்கேற்ப வித்யாதரக் குகையின் ஓவியம் தொடர்பாகக் கருத்தினை தெரிவிக்கின்ற பேராசிரியர் சந்திர விக்கிரம கமகே இச் சித்திரமுள்ள குகை நசிந்தபட்டிமா குகையொன்றும் இனங்காணப்பட்டுள்ளது. நசிந்தபட்டிமா என்பது இருந்த நிலை சிலையைக் குறிக்கும் கருத்தினைப் புலப்படுத்துகின்றது. இருபக்கச் சுவர்களில் செதுக்கப்பட்ட தேள் உருவங்களும் வயது முதிர் உருவமொன்றும் உள்ளது. அவ்வுருவத்தின் கையில் சங்கொன்றுள்ளது. அச்சங்கு வைஜயந்த சாங்கய என்றும், வயது முதிர்ந்தவர் இந்திரனென்றும் இனங்காணப்பட்டுள்ளது. இந்திரனின் வயோதிப ஆயுள் நீடிப்பதற்கான ஆசீர்வாதத்தினைப் பெற்று புத்தபெருமான வீற்றிருக்கின்ற இந்திர ஜாலக் குகைக்கு வருகை தருவதைக் குறிப்பதாகக் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

கல்விகாரை ஓவியங்களைக் கொண்ட குகையில் உள்ள வயோதிபரின் உருவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் விக்கிரம கமகே, அவ்வயோதிபர் சக்ர தேவன் ஆவார் என்றும், அவரது கையில் உள்ள சங்கு ‘வைஜயந்த சங்கு ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சக்ர தேவன் ஆயுளை நீடித்துக் கொள்வதற்காக ஆசீர்வாதம் பெறுவதற்காக புத்தர் இருந்த இந்திரரால குகைக்கு வருகை தந்தமையை இந்த ஓவியம் காட்டுவதாக விக்கிரம கமகே கூறுகின்றார்.

error: Content is protected !!