ஸ்டான்லி அபேசிங்க (1914-1992)

  • ஸ்டான்லி அபேசிங்ஹ இருபதாம் நூற்றாண்டின் நவீன கலை வரலாற்றில் ஆரம்ப காலத்தில் தோன்றிய சிறந்த ஒரு சித்திரக் கலைஞர் ஆவார்.
  • 1914 இல் பிறந்த ஸ்டான்லி அபேசிங்ஹ இலங்கை தொழில் நுட்பக் கல்லூரியில் சித்திரக்கலை பயின்று, இந்தியாவுக்குச் சென்று கீழைத்தேய சித்திரக்கலையையும் பயின்று, அதன் மூலம் பெற்ற செல்வாக்கைத் தமது சித்திரப் படைப்பாக்கத்துக்கு அடிப்படையாகக் கொண்டார்.
  • இவர் பல்வேறு கலைச் செல்வாக்குகளுடன் தமக்கேயுரித்தான சித்தரக்கலைப் பாரம்பரிய மொன்றினை உருவாக்குவதில் முன்னின்ற ஒரு கலைஞராவார்.
  • அரச கலைக்கல்லூரி ஆசிரியராகவும், 1965-1969 வரையில் அதன் அதிபராகவும் செயற்பட்டுள்ளார்.
  • 43 குழுவினரின் நவீனத்துவ வெளிப்பாட்டுக்குச் சமாந்தரமாக அரச நுண்கலைக் கல்லூரியில் நவீன பாணியின் செல்வாக்கைப் பெற்று புதியதொரு போக்கைக் கட்டியெழுப்பிய முதன்மையான முன்னோடி என இவரைக் குறிப்பிடலாம்.
  • ஸ்டான்லி அபேசிங்ஹவினது படைப்புக்களில், மரபுரீதியான கலையின் பாணிசார்ந்த வடிவங்கள், பின் மனப்பதிவுவாத , வெளிப்பாட்டுவாத ஓவியக்கலைப் போக்குகளினதும் வர்ணப் பயன்பாட்டினதும் செல்வாக்கைக் காணமுடிகின்றது.
  • படைப்புக்களின் பின்னணிக்காக, கனவடிவவாதக் கலையின் பின்னணி வெளியினது பண்புகளின் செல்வாக்கு பெறப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.
  • குறுகிய தடித்த கோடுகளின் பயன்பாடு அவரது ஓவியப் படைப்புக்களில் காணப்படும் ஒரு சிறப்பியல்பாகும்.
  • ஸ்டான்லி அபேசிங்ஹவினது சில கலைப்படைப்புக்கள் வருமாறு:

மட்பாண்டக்கூடம்
ஆவணி ஊர்வலம் (Esala Perahara)
தியானம்
பாலகன் – இளைஞன் (Young and Infant)
லக்ஷ்மியின் பிறப்பு

மட்பாண்டக்கூடம்

  • ஸ்டான்லி அபேசிங்ஹவினது ஓவியங்களுள் ‘மட்பாண்டக் கூடம்’ எனும் ஓவியம் தனிச் சிறப்பானது.
  • இந்த ஓவியம் ஒரு மட்பாண்டக் கடையையும் ஒரு தம்பதியினரையும் காட்டுகின்றது.
  • இச்சித்திரத்தின் பின்னணியாக மண்பாண்டங்களாலான சூழல் அமைந்துள்ளது. இதன் முன்பகுதியும் பின்பகுதியும் ஒரே தளமாகக் காட்டப்பட்டுள்ளன.
  • சித்திரத்தில் ஆழமும் முப்பரிமாணத் தன்மையும் கையாளப்பட்டுள்ளது. வர்ணந் தீட்டும் முறையினாலேயே இவை காட்டப்பட்டுள்ளன.
  • இருண்ட நிறங்கள், எதிர் நிறமான மஞ்சள் நிறப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் மனித உணர்வுகளை முனைப்புறுத்திக் காட்டுவதில் கலைஞர் வெற்றி கண்டுள்ளார்.
  • சித்திரத்தின் வெளிப்பாட்டுத்தன்மையை அழுத்துவதற்காக வெளிப்பாட்டுத்தன்மையுடன் உயிரோட்டமான நீளம் குறைவான தடித்த கருநிறக் கோடுகளைப் பயன்படுத்தி நிறப் பிரதேசங்கள் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன.
  • முகத்தில் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்காக இருண்ட நிறங்களுடன் பாவ வெளிப் பாடுகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
  • ஸ்டான்லி அபேசிங்ஹவினது ஆக்கப்பாணி மீது, மரபுரீதியான கலையின் பாணிசார்ந்த வடிவங்கள், பின் மனப்பதிவுவாத, வெளிப்பாட்டுவாத ஓவியக்கலைப் போக்குகள், வர்ணப் பயன்பாடு, கனவடிவவாதக் கலையின் பின்னணி வெளிப்பண்புகள் ஆகியன செல்வாக்குச் செலுத்தியுள்ளமையைக் காணமுடிகின்றது.
ஊர்வலம் (பெரகரா)
  • ஸ்டான்லி அபேசிங்ஹவினது படைப்புக்களுள் ‘ஊர்வலம்’ எனும் ஓவியமும் முக்கிய இடத்தைப் பெறும் ஒரு படைப்பாகும்.
  • கண்டி, ஆவணி ஊர்வலத்தைக் (Esala Perahara) கருப்பொருளாகக் கொண்டு வரையப் பட்ட இந்தப் படைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இருட்சாயல் ஒளிப்பான நிறங்கள், எதிர் வர்ணங்கள் ஊடாக சித்திரத்தின் அழகு புதியதொரு விதத்தில் காட்டப்பட்டுள்ளது.
  • இருட்சாயல் வெளிச்சமான வர்ணங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தி இராக்காலத்தைச் சித்திரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சி சித்திரத்தை மேலும் பொருளுள்ளதாக மாற்றியுள்ளது.
  • இராக்காலத்தைச் சித்திரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இருள் – ஒளி நிலைமை களை நிறங்கள் மூலம் காட்டப்பட்டுள்ளதோடு, ஊர்வலத்தின் வெவ்வேறு அம்சங்களும் கூறுகளும் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன.
  • கோடுகளைக் கையாள்வதை விட , வர்ணங்களைச் சிறப்பாகக் கையாள்வதன் மூலம், உருவங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உருவப் பயன்பாட்டின் போது கருப்பொருளின் முக்கிய அம்சமாகிய , தாதுப்பேழையைத் தாங்கிய யானைச் சித்திரத்தின் நடுப்பகுதியில் இடப்பட்டுள்ளது.
  • முன்பகுதி – பின்பகுதி எனக் கருதாது ஒரே தளத்தில் உருவங்கள் ஒழுங்கமைக்கப்பட் டுள்ள போதிலும், வர்ணந் தீட்டும் நுட்ப முறைக்கேற்ப முன்பகுதி – நடுப்பகுதி – பின்பகுதி ஆகியனவற்றை நன்கு ஒழுங்கமைத்து இடப்படுத்துவதன் மூலம் சித்திரத்தின் ஆழத்தைக் காட்டுவதில் கலைஞர் வெற்றியடைந்துள்ளனர்.
  • இப்படைப்புக்காக, கனவடிவக் கலையின் பின்னணி வெளிப்பண்புகள் பயன்படுத்தப்பட் டுள்ளது. அத்தோடு பாணி சார்ந்த வடிவங்கள், பின் மனப்பதிவுவாத மற்றும் வெளிப் பாட்டுவாத ஓவியக்கலைப் போக்கின் வர்ணப் பயன்பாட்டின் செல்வாக்கையும் இப்படைப் பில் காணலாம்.
  • இவ் ஓவியம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படுகின்றது.
பயிற்சி வினாக்கள்

1. இனங்காணுதல் : .…………………………………
2. தொனிப்பொருள் : .……………………………….
3. வர்ண நுட்பம் : .……………………………………….
4. கலைஞரின் திறன் : .……………………………
5. உணர்வு வெளிப்பாடு : ……………………………
6. கலைப்பணி : ……………………………………………….

1. இனங்காணுதல் : .…………………………………
2. தொனிப்பொருள் : .……………………………….
3. வர்ண நுட்பம் : .……………………………………….
4. கலைஞரின் திறன் : .……………………………
5. உணர்வு வெளிப்பாடு : ……………………………
6. காணப்படும் இடம் : …………………………………
7. செல்வாக்கு : ……………………………………………….

error: Content is protected !!