19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் செயற்பட்ட இந்தியக் கலைஞர்கள்

இந்திய நவீன கலை வரலாறு, 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இடம்பெற்ற கலைச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.. குடியேற்றவாதம், கீழைத்தேயவாதம் ஆகிய தொடர்பான கருத்துக்கள், இக்காலப்பகுதியில் இந்தியக் கலையின் தன்மையை உருவமைப்பதில் பங்களிப்புச் செய்தன. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் வங்காளத்தின் கொல்கத்தா நகரமே அவர்களது ஆட்சிமையமாக அமைத்திருந்தது. அது இந்தியாவின் புதிய பண்பாட்டு மறுமலர்ச்சியின் மைய நிலையமாகவும் காணப்பட்டது. அப்பண்பாட்டின் வழியே கட்டியெழுப்பப்பட்ட கலைப் படைப்பாக்கங்கள் இந்திய மறுமலர்ச்சிக்கு துணையாக அமைந்தன. நாட்டுப்பற்றுமிக்க வங்காள மக்கள் பேரரசுவாத கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, வெளிநாட்டுச் சிந்தனையிலிருந்து விலகி, தமது தனித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தமது பண்டைப் பெருமையை அறிந்து அதன் பெறுமானங்களை வெளிக்கொணர முயற்சி செய்தனர். சித்திரக் கலையுடன் தொடர்புடைய வகையில் அவ்வாறு கவனஞ் செலுத்திச் செயற்பட இந்தியக் கலைஞர் குழுக்கள் இரண்டினைத் தெளிவாக இனங்காண முடிகின்றது. அவர்களுள் ஒரு குழுவினர், பிரித்தானிய அக்கடமி யதார்த்தவாதத்தைப் பின்பற்றிய கலைஞர்களாவர். மற்றைய குழுவினர் அதற்கு எதிராக உருவாகிய நவவேட்கைவாத கலைஞர்களாவர்.

பிரித்தானிய அக்கடமிக் யதார்த்தவாதத்தைப் பின்பற்றிய கலைஞர்கள் குடியேற்றவாதத்தில் பயன்படுத்தப்படுவதும் அப்போது இந்தியாவில் பிரபல்யம் பெற்றிருந்ததுமான ஓவியப் பாணியைப் பின்பற்றினர். அப்பாணியின் மூலம் அவர்கள் இந்திய சமய, வரலாற்றுக் கருப்பொருள்களை கருப் பொருளாகக் கொண்ட ஓர் ஓவியக் கலையை ஆரம்பித்தனர். அவ் ஓவியக் கலையின் பிரபல்யமிக்க கலைஞர் ராஜா ரவிவர்மா ஆவார்.

ரவிவர்மாவின் ஓவியக்கலை ஐரோப்பியச் செல்வாக்குடன் கட்டியெழுப்பப்பட்ட அதேவேளை, அதிலிருந்து வேறுபட்ட ஆசியக் கலைப் பாணிகளைப் பின்பற்றி, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத்  துணை நின்ற கலைஞர்களால் இந்தியாவின் ‘நவவேட்கைவாத’ இயக்கம் கட்டியெழுப்பப்பட்டது. ‘நவவேட்கைவாத’ இயக்கமானது 19 ஆம் நூற்றாணடிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலம் இந்தியாவில் குறிப்பாக, வங்காளத்தை மையமாகக் கொண்ட சமூக சீர்திருத்த இயக்கமாகும். இது கலை உட்பட்ட சகல துறைகளிலும் காத்திரமான செல்வாக்கைச் செலுத்தியதுடன், ஒட்டுமொத்த இந்தியக் கலை மீது தீர்க்கமாகச் செல்வாக்குச் செலுத்திய ஒரு தோற்றப்பாடாகும். கட்புலக்கலைகள் என்னும் விடயத்தில் வங்காளப் பள்ளி இங்கு பிரபல்யமான ஒரு வகிபாகத்தை ஆற்றியது.

வங்காளப் பள்ளி இந்திய தேசியவாத இயக்கம் அதாவது சுதேச இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டது. இதன் விளைவாக அக்கடமிக் யதார்த்தவாத விதிகளைப் புறந்தள்ளி பண்டைய இந்திய மற்றும் ஆசியக்கலை விதிகளை மீளப் பயன்படுத்தவதில் இப்பள்ளியைச் சேர்ந்த கலைஞர்கள் முனைப்பு காட்டினர். ரவிந்திரநாத் தாகூரும், அவரது சாந்திநிகேதனமும் இதன்போது தீர்க்கமான ஒரு கருமத்தை ஆற்றியதோடு அது இலங்கை போன்ற நாடுகளில் கலையின் மீதும் செல்வாக்குச் செலுத்தியது. மேலும் வங்காளப் பள்ளியுடைய வெற்றிக்கு E.B. ஹெவல் போன்ற பிரித்தானிய தேசிய நிர்வாக அதிகாரிகளது உதவியும் கிடைத்தன. ஹெவல் 1896 இல் கொல்கத்தா அரச கலைக்கல்லாரியின் (Government College of Art, Klkata) அதிபராக நியமனம் பெற்றதோடு, அவர் பண்டைய இந்தியக் கலைப் பாரம்பரியங்களை மீண்டும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். வங்காளப் பள்ளியை அதுவரையில் பிரித்தானிய குடியேற்றவாதத்தின் போது நிலைபெற்றிருந்த அக்கடமிக் கலைக்கு எதிராக எதிர்விளைவைக் காட்டிய முற்போக்கு கலை இயக்கமாகவும் இனங்காணலாம். மேலும் அது ரவிவர்மானவினது கலைப்பிரயோகத்துக்கு எதிரான ஒரு எதிர்விளைவாகும். அக்காலப்பகுதியில் ராஜ்புத்துனில் அஜந்தா, பாக் யப்பானிய மற்றும் சீன ஓவியங்களின் பண்புகளிலிருந்து கலைத்துவச் செல்வாக்கைப் பெற்றமையானது இந்தக் கலை இயக்கத்தைச் சேர்ந்த ஓவியங்களின் படைப்பாக்கங்களில் காணப்படும் ஓர் இயல்பாகவுள்ளது. இக்கலை இயக்கத்தைச் சேர்ந்த பிரதான ஓவியர்களுள், அபநிந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், முகுல் தே, அசிக் குமார், ஹல்தார், சாரதா உகில், கங்கேந்திரநாத் தாகூர் ஆகியோர் அடங்குவர்.

error: Content is protected !!