சோழ வெண்கலச் சிற்பங்கள்

சோழ வெண்கலச் சிற்பங்கள் 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவை. குறிப்பாக முதலாம் இராஜராஜர் காலம் இது தொடர்பாகப் பாரிய அளவில் பங்களிப்புச் செய்த ஒரு காலப்பகுதியாகும். காவி செல்லத்தக்கதாக வெண்கலத்தினால் வார்ப்பு முறையில் செய்யப்பட்டுள்ள இந்தச் சிற்பங்கள் வீதியுலாக்களில் காட்சிப் படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெண்கலச் சிற்பங்கள் வட இந்திய வெண்கலச் சிற்பங்களை விட தொழினுட்ப ரீதியில் வேறுபட்டவை. அதாவது தென்னிந்தியச் சிற்பங்கள் முழுத் திண்மத்தினால் (Solid) ஆனதோடு வட இந்திய சிற்பங்கள் பொள்ளான (Hollow) வார்ப்பு முறையில் வார்க்கப்பட்டவையாகும். இந்த வெண்கலச் சிற்ப வடிவங்கள் பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வார்க்கப்பட்டுள்ளன. மறுபுறமாகப் பொதுவான மனித வெளிப்பாடுகளை விட வேறுபட்டு கைகால்கள் அதிகரிக்கப்பட்டு சந்த லயத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு சிற்பமும் மூவளைவுத் (திரிபங்க) தன்மையைக் கொண்டுள்ளது.

கல்யாண சுந்தரமூர்த்திச் சிற்பம்

முதலாம் இராஜராஜன் காலம், தஞ்சாவூர் கலைக்கூடம், தஞ்சாவூர்

‘கல்யாண சுந்தரமூர்த்தி’ எனும் இச்சிற்பம் சிவ-பார்வதி திருமணத்தைக் காட்டுகின்றது. இது அடுக்கமைப்பாகத் தாபிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் பெரிய உருவம் மூலம் சிவன் காட்டப்பட்டுள்ளார். சிவபெருமான் பார்வதியின் ஒரு கையைப் பிடித்துள்ளார். பார்வதி அண்ணளவாகச் சிவபெருமானின் இடது புறத்தே நிற்கும் விஷ்ணுவுக்கு சமமாக உள்ளார். விஷ்ணுவினது இராணியாகிய இலட்சுமி, பார்வதியின் வலது புறத்தே நிற்கிறார். பருமனைப் பொறுத்தமட்டில் விஷ்ணுவை விட இலட்சுமி சிறிய அளவாகக் காட்டப்பட்டுள்ளது. பார்வதியின் பருமன் சிவனிலும் சிறியதாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தெய்வங்களையும் தேவதைகளையும் காட்டுவதற்கு நியமமான ஒரு முறை இருந்தமை உறுதியாகின்றது.

இந்த நான்கு வெண்கல உருவங்களும் ஒரு தனி அலகாகக் காணப்படுகின்றமையால், ஒரே காலப்பகுதியில் ஒரே தொழிற்கூடத்தில் யாதேனும் திட்டவட்டமான பாணியுடன் தொடர்புபட்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது என வாதிடலாம். மேலும் சோழர் மரபில் சிவபெருமானுக்கு முதன்மைத்துவம் வழங்கப்பட்டுள்ளது எனவும் நம்ப முடிகின்றது. இந்த வெண்கல முகங்களினதும் அலங்கரிப்புகளினதும் அம்சங்கள் சமகால சோழக் கற்செதுக்கல் வேலைப்பாடுகளுடன் நெருக்கமான தொடர்பையும் சமாந்தரத் தன்மையையும் கொண்டிருந்ததாக ஏற்றுக் கொள்ளலாம்.

சிவ பிச்சாதன மூர்த்திச் சிற்பம்

தஞ்சாவூர்க் கலைக்கூடம், தஞ்சாவூர்

சிவபெருமான் ஒரு யாசகன் போன்று காட்சியளிக்கும் நிலையே சிவ பிச்சாதன மூர்த்திச் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. இங்கு சிவபெருமான் நிர்வாண தபசி போன்று காட்டப்பட்டுள்ளார். சிவபெருமான் நிர்வாணக் கோலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் அரிதாகும். எனினும் சிவ பிச்சாதன மூர்த்திச் சிற்பத்தில் சிவபெருமான் ஆடையின்றிய நிலையிலேயே காட்டப்பட்டுள்ளார். எனவே அவரது ஆண் இயல்பு மிக நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சிவ பிச்சாதன மூர்த்தி நிலை எப்போதும் தென்னிந்திய உருவ அர்த்தத்தில் முன்வைக்கும் போது நான்கு கைகளுடன் முன்வைக்கப்படும். சிவபெருமானின் வலதுபுறத்தே முன்னால் உள்ள கை புவியை நோக்கி வைக்கப்பட்டுள்ளதோடு அக்கையை நோக்கிப் பாயும் மானானது

அதன் கீழாகக் காட்டப்பட்டுள்ளது. பின்னால் உள்ள வலது கை மேலே உயர்த்தப்பட்டுள்ள தோடு, அதன் மூலம் உடுக்கு பிடித்து வைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் இடது புறத்தே முன்னால் உள்ள கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தப்பட்டுள்ளதோடு பின்னால் உள்ள கையினால் விதர்க்க முத்திரை காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பம் திரிபங்க உடல்நிலையைக் காட்டுகின்றது. இடது கால் நேராகப் பூமியில் வைக்கப்பட்டுள்ளதோடு, வலது கால் சற்று வளைந்து தளர்வாக வைக்கப்பட்டுள்ளமை காட்டப்பட்டுள்ளது. எனவே இந்தச் சிற்பம் ஒருவித அசைவுத்தன்மையைக் காட்டுகின்றது. அத்தோடு சிவ பிச்சாதனர் உருவ அர்த்தத்தில் காணப்படும் பிரதானமான ஓர் அம்சம் பாதணிகள் அணிந்த நிலையில் உள்ள பாதங்களாகும். சிவபெருமானின் ஏனைய வேடங்களிலிருந்து பிச்சாதன வேடத்தை வேறுபடுத்திக் காட்டும் ஓர் அம்சமாகப் பாதணிகள் அமைந்துள்ளன. அதாவது இந்த வேடத்தின் மூலம் சமயப் பின்னணியை விட இலௌகீகப் பின்னணியே விபரிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் ஏனைய வேடங்களில் பாதணிகள் அணிந்த நிலை காணப்படுவதில்லை. மேலும் சிவபெருமானின் இடையைச் சுற்றியிருக்கும் நாக படத்தைக் கொண்ட நாகபாம்பு உருவமொன்றும் உள்ளது. நாக பாம்பு மிகக் கவனத்துடன் இருக்கின்றமையைக் காட்டும் வகையில் நாகபாம்பு உருவம் அமைக்கப்பட்டுள்ளது.

சிவ பிச்சாதன மூர்த்திச் சிற்பம் வெண்கலத்தினாலானது. இது சோழர் காலத்தில் ஆக்கப்பட் டுள்ளது. சோழ சிவ பிச்சாதன மூர்த்திச் சிற்பம் மோடி சார்ந்த பாணியைக் கொண்டது. முகபாவனைகளிலும் ஆபரணங்களிலும் சமகால கற்செதுக்கல் வேலைப்பாடுகளில் காணப்படும் கலைத்துவ உத்திகளை அவதானிக்க முடிகின்றது. இந்த இயல்பை கல்யாணசுந்தர மூர்த்திச் சிற்பத்திலும் தெளிவாக இனங்காணலாம்.

error: Content is protected !!