இருபதாம் நூற்றாண்டில் இலங்கையின் சமயம் சார்ந்த ஓவியக் கலை

பதினெட்டாம். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் பாரம்பரியமான சுவர் ஓவியக்கலையை அதற்கு முற்பட்ட காலத்தில் காணப்பட்ட சுவரோவியக் கலையுடன் ஒப்பிடுகையில், இந்த இரண்டு நூற்றாண்டுகளையும் பதிய மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலப் பகுதியாக இனங்காணலாம். அதன் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் நவீன ஓவியக்கலை தோற்றம் பெற்றமையைக் காணமுடிகின்றது. ஐரோப்பியரின் ஆதிபத்தியத்துக்கு உள்ளாகியிருந்தமையும் அதனுடன் கூடவே ஏற்பட்ட சமய மறுமலர்ச்சியும், புதிய புரட்சிகரமான எண்ணக்கருக்களும் புதிய கட்புல உருவங்களின் புனைவுக்குக் காரணமாயின. மேலும் ஐரோப்பிய ஓவியக்கலைப் பாங்குகள் இனங்காணப்பட்டமை இந்நாட்டில் காணப்பட்ட பாரம்பரியமான ஓவியக்கலைப் பாணிகளைவிட புதிய மோடிப்படுத்தப்பட்ட உருவங்கள் தொடர்பாகக் காட்டிய விருப்பு ஆகியன பண்டைய பாரம்பரிய, சமயம் சார்ந்த ஓவியக்கலையில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாகின.

இலங்கைச் சமூகம் ஒரு பல சமயங்களைப் பின்பற்றுகின்ற, பல மொழிகளைப் பேசுகின்ற, பல இமன மக்களைக் கொண்ட ஒரு சமூகமாகும். இவ்வாறான பன்முகச் சமூகத்தினால் படைக்கப்படும் கலைப்படைப்புக்கள், அவர்களது தனித்துவமான இயல்பகளை எடுத்துக்காட்டுவனவாகும். அவ்வாறான தனித்துவமான இயல்புகளுடன் இருபதாம் நூற்றாண்டில், பௌத்த, இந்து மற்றும் கிறித்துவ சமய வழிபாட்டிடங்களைச் சார்ந்த வகையில் வரையப்பட்டுள்ள பல ஓவியங்கள் உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் அதுவரையில் இருந்த பண்டைய சமய ஓவியப் படைப்புக்களில் காணப்பட்ட பாரம்பரியமான கலைத்துவப் பண்புகளிலிருந்து வேறுபட்டு, ஐரோப்பிய இயற்கைவாத கலைமோடி செல்வாக்கு பெறப்பட்டது. குறிப்பாக அவ்வாறான பல்வேறு ஆக்கப் பாணிகளை அடிப்படையாகக்கொண்டு, இலங்கையின் பௌத்த, இந்து, கிறித்துதவ ஓவியக்கலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முன்னோடியாகச் செயற்பட்ட சில ஓவியக்கலைஞர்களை இருபதாம் நூற்றாண்டில் இனங்காண முடிகின்றது. அவர்களுள் பௌத்த சமயம் சார்ந்த நவீன ஓவியக்கலை மீது பங்களிப்புச் செய்த கலைஞர்களான எம். சார்ளிஸ், சோளியஸ் மென்டிஸ், ஜோர்ஜ்கீற், சோமபந்து வித்யாபதிகே ஆகியோரின் ஓவியப் படைப்புக்கள் முதன்மையானவை.

மேலும் கிறித்தவ சமய கருப்பொருள்களை உள்ளடக்கிய படைப்பாக்கத்தில் ஈடுபட்ட கலைஞர்களுள் ஒருவராக டேவிட் பேன்டர் இனங்காணப்படுகின்றார். இலங்கைக் கலைக் கழகத்தின் முன்னோடிக் கலைஞர்களுள் ஒருவர் ஆவார். இந்து சமய கருப்பொருள்களை விடயப் பொருளகளாகக் கொண்டு ஓவியம் வரைந்த கலைஞர்களுள், தாவடி மு. துரைசுவாமி, நாராயண் சுவாமி, பெரிய தம்பி சுப்ரமணியம் ஆகிய கலைஞர்கள் முக்கியமானவர்களாவர்.

மேற்குறிப்பட்ட கலைஞர்கள் தமது சமய வழிபாட்டிடங்களில் வரைந்த, சமயம் சார்ந்த சுவரோவியங்களில் உள்ள வெவ்வேறு கருப் பொருள்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட சித்திரக்கலைப் பாங்குகளும் இலங்கையின் இருபதாம் நூற்றாண்டின் சமயஞ்சார்ந்த ஓவியக்கலையின் விருத்திக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ளது.

இலங்கையில் இந்துக்கோயில் ஓவியக் கலை

error: Content is protected !!