கண்டிக்கால பாரம்பரிய மலைநாட்டுக் கலைப்பாணி சித்திரங்கள்

பதினெட்டாம் நூற்றாண்டில் (1747 -1781) கண்டி இராச்சியக் காலத்தில் மலைநாட்டுப் பிரதேசத்தை முதன்மையாகக் கொண்டு, உருவாகிய சுவரோவிய மரபே கண்டிக்கால சுவரோவிய மரபு எனப்படுகின்றது.

கண்டிக்காலச் சுவரோவிய மரபானது, அனுராதபுர மற்றும் பொலனறுவைக்காலங்களைச் சேர்ந்த சுவரோவியங்களை விட பாணி (மோடி) சார்ந்ததாகும். அதாவது கண்டிக்கால ஓவிய மரபில், கட்புல உருவங்கள், இயற்கை உலகை உள்ளவாறே போலச் செய்வதாகவன்றி இயல்பான அல்லது பண்பாட்டு உலகின் பெண்களைத் தாம் தமக்குத் தேவையானவாறு தரநியமப்படுத்தலுக்கு உட்படுத்தல் மூலமே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. அதாவது வெளிப்புற உலகில் காணப்படும் பொருள்களுக்குப் பொதுவான நியமமான கட்புல உருவங்களைப் பிரதியீடு செய்தலாகும். கலை வரலாற்றிலே இச்செயன்முறையானது மோடிப்படுத்தல் என வழங்கப்படுகின்றது. இலங்கையின் பாரம்பரியமான சுவரோவியக் கலைத்துறையில் அடங்கியுள்ள பெரிதும் மோடிசார்ந்த கலை மரபு, மத்திய கண்டிக்காலக் கலை மரபாகும்.

ஓவியங்களின் கருப்பொருள்

பௌத்த இலக்கியம், இலங்கையின் பௌத்த வரலாறு ஆகியவற்றைக் காட்டும் சம்பவங்கள் மற்றும் அலங்கரிப்பு அம்சங்களே கண்டிக்கால ஓவியங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள விடயப்பொருள்களாகும். கற்றாய்வதை இலகுபடுத்திக் கொள்வதற்காக இவ்விடயப் பொருளைப் பின்வருமாறு பகுதிகளாக வகுத்துக்காட்டலாம்.

1. பௌத்த இலக்கியக் கதைகள்

  • ஜாதகக் கதைகள் :
    புத்தர் பெருமானின் முந்திய பிறப்புக்களை எடுத்துக்காட்டும் கதைகள்.
    உதாரணம்: வெஸ்ஸந்தர, உரக, சுத்தசோம ஜாதகக் கதைகள்.
  • புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் :
    உதாரணம்: மாரனைத் தோற்கடித்தல், சத்சத்திய(ஏழு வரங்கள்), நாளாகிரி தமனய (யானையை அடக்குதல்)
  • சித்தார்த்தர் வாழ்க்கை நிகழ்வுகள் :
    உதாரணம்: நான்கு முன்னடையாளங்கள் (சத்தர பெரிநிமித்தி), வித்தை பயில்வு (சில்ப தக்வீம), துறந்தேகல் (அபினிஷ்கிரமனய )
  • இருபத்து நான்கு விளக்கங்கள்:
    (சூவிசி விவரணய)
  • ஆயிரம் புத்தர்கள் :
    (தஹசக் புதுவறு)

2. இலங்கை பௌத்த வரலாற்றைக் கூறும் கதைகள்

வரலாற்றுச் சம்பவங்கள் :
உதாரணம்: பதினாறு தலங்கள் (சொலொஸ்மஸ் தானய), மகிந்தர் வருகை (மகிந்தாகமனய), அரசமரக்கிளையைக் கொண்டுவருதல்

3. அலங்கார அமைப்புக்கள்

  • அழகிய / அலங்கார வேலைப்பாடுகள், விலங்கு உருவங்கள், கற்பனையான வடிவமைப்புக்கள்

மேற்படி விடயப்பொருள்கள் தவிர்ந்தவிடத்து, புத்தர் சிலைகள் மற்றும் அரசகுடும்பத்தினர், பிரபு வர்க்கத்தினர் கொடை வள்ளல்கள் போன்றோரின் உருவங்களும் விடயப்பொருள்களாக அமைந்துள்ளன. மேலும் பௌத்த சமயத்துடன் பெரிதும் தொடர்புள்ள சக்ர, உபுல்வன், சமன், நாத போன்ற தெய்வங்களும் சரியுத் முகலன் போன்ற பிலபல்யம் வாய்ந்த அறிவொளி பெற்றொர் உருவங்களும் விடயப் பொருள்களாக அமைந்துள்ளன.

ஓவியக் கலைஞர்கள்

கண்டிய மத்திய கால ஓவிய மரபைச் சேர்ந்த பல ஓவியப் பரம்பரையினர் வாழ்த்துள்ளமைய எழுத்து மூலச் சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது. தெவரகம்பளை சில்வத்தன, தேவேந்திர மூலாச்சாரி, நீலகம பட்டந்தா, கொஸ்வத்தே சித்தர நைதே ஆகியோர் பிரதானமானவர்களாவார். அத்தோடு கொலம்ப நைதே, மத்தும நைதே, கல்லென் நைதே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக உள்ளத்துப் பிட்டியெ சித்தரா, கன்னொறுவே நலரத்ன தண்டயா, மங்கலவள நீலவள முகாந்திரம், சேருகொல்ல சித்தரா ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொழினுட்பம்/கலைநுட்பம்

உலர் களிச்சுதைமீது இயற்கை வர்ணங்கள்

மோடிப் (பாணி) பண்புகள்

மத்திய கண்டிக்கால ஓவியங்களில் காணப்படும் மோடிசார்ந்த பண்புகள் சிலவற்றைப் பின்வருமாறு முன்வைக்கலாம்.

உருவங்கள் வரையும் முறையியல்

மனித மற்றும் பிராணி உருவங்கள் உட்பட சகல உருவங்களையும் மோடி ரீதியில் வரைதல், புத்தரின் உருவங்கள், தெய்வ உருவங்கள் வரையும்போது முற்புறத்தோற்றத்தை வரைவதோடு அதனைச் சமச்சீருடைய தாகவும் வரைதல், மனித உருவங்களைப் பக்கத்தோற்றமாக வரைதல், விரிவான பொருள்களை மேலேயிருந்து நோக்கும்போது தெரியும் வகையில் வரைதல், ஒரே காட்சியை வெவ்வேறு கோணங்களில் பார்த்து வரைதல், பிரதான கதையுடன் நேரடியாகத் தொடர்புற்ற மலர் வடிவமைப்புக்கள் பயன்படுத்துதல்.

வர்ணப்பயன்பாடு

வேறுபாடுகள் குறைவான ஒரு தனி வர்ணத்தைப் பயன்படுத்துதல், அதாவது ஏகவர்ணத்தைன்மை, நீல வர்ணத்தைப் பயன்படுத்தாமை, பின்னணியில் சிவப்பு நிறப்பயன்பாடு, புறவரைக் கோட்டுக்காகக் கறுப்பு அல்லது கபில வர்ணம் பயன்படுத்தல்.

தளத்தை ஒழுங்கமைத்தல்

பெரிய தொகுப்போவிய முறை, தொடர்வரிசை முறை, தொடர்ச்சியான கதை சொல்லும் முறை போன்றவற்றைப் பயன்படுத்துதல்.

பொதுவாக மத்திய கண்டிக்காலம் மரபைச் சேர்ந்த விகாரையொன்றில் காணப்படும் ஓவியங்களை அவற்றின் முன்வைப்பு முறைக்கு அமைய, தொடர் வரிசை ஓவியமாகவும் பெரிய தொடர் வரிசை ஓவியமாகவும் குறிப்பிடலாம்.

தொடர் ஓவியங்கள்

  1. பெரிதும் முறைமையான தன்மையுடன் வரையப்பட்ட ஓவியங்கள்:
    புத்தர் உருவங்கள், பதினாறு தானங்கள் (சொலோஸ்மஸ்தான), (அரஹத் உருவங்கள்)
  2. கதை சொல்லும் நிரல்கள்:
    ஆக்கபூர்வமான எளிய உருவத்தொகுப்பாக வரையப்பட்ட ஓவியங்கள்.
    உதாரணம்: சாதகக் கதைகளும் வரலாற்று நிகழ்வுகளும்
வெஸ்ஸந்தர ஜாதகம்

பெரிய தொடர் வரிசை ஓவியங்கள்

காத்திரமான வெளிப்பாடுகளாக வரையப்பட்ட ஓவியங்கள் – மாரனைத் தோற்கடித்தல் (மார பராஜய), தேவலோகம் (திவ்யவிமான), தேவ அழைப்பு (தேவாராதனய )

மத்திய கண்டிக்கால ஓவிய மரபைப் பின்தொன்மைப் பாணி (மோடி) என சேனக்க பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார். வரையப்பட்ட தனி வர்ணப் பண்புகளைக் கொண்ட வர்ணங்கள் மற்றும் கோடுகளைப் பயன்படுத்தி, அமைக்கப்பட்ட நெரிசல் அற்ற எளிமையான உருவத் தொகுப்பு எனும் பண்பு காரணமாகவே இது தொன்மைப் பண்பு எனப்படுகின்றது. இப்பண்புகளை முதன்மையாகக் கொண்டு மத்திய கண்டிக்கால, மரபானது ஆரம்பகாலம், நடுக்காலம், விருத்தியடைந்த காலம் என மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுள் ஆரம்ப காலப்பகுதிக்குரிய ஓவியங்களை மெதவனை மற்றும் சூரியகொடை விகாரைகளிலும் நடுக்காலத்துக்குரிய ஓவியங்களை கங்காரமாயா, ரிதீ விகாரை, லங்காத்திலக்க போன்ற விகாரைகளிலும் விருத்தியடைந்த காலத்தைச் சேர்ந்த ஓவியங்களை தெகல்தொலுவ, தம்புள்ளை ஆகிய விகாரைகளிலும் காணலாம். இதற்கமைய, தொன்மைப் பண்புகளைக்கொண்ட மத்திய கண்டிக்கால மோடி சார்ந்த மரபைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் காணப்படும் இடங்களாக, மெதவளை, தெகல்தொறுவை மற்றும் தம்புள்ளை விகாரைகளைக் குறிப்பிடலாம்.

கண்டிக்காலச் சித்திரங்கள் காணப்படும் இடங்கள்

error: Content is protected !!